மேற்கத்திய நாடுகளில் பீட்சா என்பது அனைவரும், அனைத்து தரப்பு மக்களும், எப்போது வேண்டுமானாலும் சாப்பிடும் ஒரு எளிய உணவாக இருந்தாலும் இந்தியாவில் பீட்சா என்பது இன்றளவும் இந்திய மக்களுக்கு ஆடம்பர உணவாகவே உள்ளது.
இந்த நிலையில் இந்தியாவில் பீட்சா விற்பனையில் கொடிகட்டி பறக்கும் டாமினோஸ் மற்றும் பீட்சா ஹட் பெரிய அளவிலான ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், அமெரிக்காவில் உருவான அதே புரட்சி இந்தியாவில் வெடித்தது. கடந்த 5 வருடத்தில் பீட்சா விற்பனையில் அதிகளவிலான உள்நாட்டு பிராண்டுகள், பிராந்திய பிராண்டுகள் வந்துள்ளது. இந்த நெருக்கடியை தாங்காமல் டாமினோஸ் தனது பீட்சா விலையை குறைத்துள்ளது.

Tossin, தென் கொரியாவின் GoPizza, Leo's Pizzeria, MojoPizza, Ovenstory மற்றும் La Pino'z போன்ற சிறிய மற்றும் புதிய போட்டியாளர்களுடன் போட்டியிட இந்தியாவின் மிகப்பெரிய பீட்சா சங்கிலி நிறுவனமான Domino's அதன் பெரிய பீட்சாக்களின் விலையை கிட்டத்தட்ட பாதியாகக் குறைத்துள்ளது.
அமெரிக்க பீட்சா சங்கிலி நிறுவனங்கள் இந்தியாவின் FMCG போக்கை தவறாக கணித்துவிட்டது. பல உள்ளூர் பிராண்டுகள் தற்போது பிரபலமான பீட்சா பிராண்டுகளுக்கு கடுமையான போட்டியைக் கொடுப்பது மட்டும் அல்லாமல் சில சந்தைகளில் முன்னோடியாக உள்ளது. இதுமட்டும் அல்லாமல் சிறிய பிராண்டுகளும் விரைவான சேவை உணவகங்களுக்கு (QSRs) மாடலில் தனது வர்த்தகத்தை விரைவாக விரிவடைந்துள்ளது. இது அனைத்தும் பின்னடைவாக அமைந்துள்ளது.
Domino's கடந்த வாரம் அதன் வாடிக்கையாளர்களுக்கு பெரிய பீஸ்ஸாக்களின் விலை கடும் வீழ்ச்சி என்ற மெசேஜ்-ஐ அனுப்பியது. வெஜ் லார்ஜ் பீட்சாக்களின் விலை ரூ.799ல் இருந்து ரூ.499 ஆகவும், அசைவ பெரிய பீட்சாக்களின் விலை ரூ.919ல் இருந்து ரூ.549 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளதாக டாமினோஸ் தெரிவித்துள்ளது. "குறைவாக பணம் செலுத்துங்கள், அதிகமாகப் பெறுங்கள்" என்று டாமினோஸ் நிறுவனம் தனது மெசேஜ்-ல் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 1,800 க்கும் மேற்பட்ட கடைகளுடன் Domino's பிராண்டை இந்தியாவில் இயக்கும் Jubilant FoodWorks இன் செய்தித் தொடர்பாளர் காலாண்டு முடிவுகள் வெளியிடும் நேரத்தில், கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார் என எக்னாமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளார். ஜூபிலண்ட் ஃபுட்வொர்க்ஸ் இந்தியாவில் 21 டன்கின் உணவகங்கள் மற்றும் 13 Popeyes கடைகளையும் நடத்துகிறது.
ஜூபிலண்ட் ஃபுட்வொர்க்ஸ் ஜூன் காலாண்டில் நிகர லாபம் 74% குறைந்து ரூ. 28.91 கோடியாகவும், அதேபோன்ற விற்பனையில் 1.3% சரிவையும் பதிவு செய்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் உள்நாட்டு பீட்சா பிராண்டுகள் அதிகளவிலான வாடிக்கையாளர்களை பெற்று வருவது தான்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications