பெங்களூரு: மத்திய அரசு தங்களுடைய தகவல் தொடர்புகளில் அதிக அளவில் இந்தியை பயன்படுத்துவதாகவும் எங்கள் மீது இந்திய திணிக்க வேண்டாம் என்றும் இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரியான மோகன்தாஸ் பை தெரிவித்துள்ளார்.
அண்மையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த எம்பி ஜான் பிரிட்டோஸ் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டு இருந்தார். அதில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த ரவ்நீத் பிட்டு தனக்கு இந்தியில் அனுப்பிய ஒரு விஷயத்திற்கு தான் எப்படி மலையாளம் மொழியில் பதில் அளித்தேன் என குறிப்பிட்டிருந்தார்.

வழக்கமாக மத்திய அரசிடம் இருந்து தென் மாநிலங்களை சேர்ந்த எம்பிக்களுக்கு அனுப்பப்படும் கடிதங்கள் ஆங்கிலத்தில் தான் இருக்கும் ,ஆனால் அண்மைக்காலமாக அவ்வாறு இருப்பதில்லை , பாஜவை சேர்ந்த ரவ்நீத் பிட்டுவை டேக் செய்து இந்த பதிவை அவர் வெளியிட்டார்.
எனக்கு இந்தியில் தகவல் அனுப்பப்பட்டதால் நான் அதற்கு மலையாளத்தில் பதில் எழுதி அனுப்பினேன் என ஜான் பிரிட்டோஸ் எம்பி தெரிவித்திருந்தார். இந்த பதிவை சுட்டிக் காட்டி இருக்கும் மோகன்தாஸ் பை மத்திய அரசின் தகவல் தொடர்புகளில் அதிக அளவில் இந்தி பயன்படுத்தப்படுவது தவறானது மற்றும் கவலைக்குரியது என குறிப்பிட்டுள்ளார். மத்திய அமைச்சர் அமித்ஷா, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரதமர் அலுவலகத்தை டேக் செய்து மோகன்தாஸ் பை இந்த பதிவினை வெளியிட்டுள்ளார்.
அதில் குடிமக்கள் அவர்களுடைய தாய்மொழி அல்லது ஆங்கிலத்தில் பதிலளிக்கலாம், ஆனால் எப்போதுமே இந்தியில் பதில் அளிக்க வேண்டியது கிடையாது. எனக்கு இந்தி தெரியும் ஆனால் இந்தியில் அரசு பதில்களை வழங்குவதை நான் எதிர்க்கிறேன் என கூறியுள்ளார் .எந்த ஒரு குடிமக்கள் மீதும் இந்தி மொழியை திணிக்காதீர்கள் என மோகன்தாஸ் பை குறிப்பிட்டுள்ளார். அவருடைய இந்த பதிவுக்கு பலரும் தங்களுடைய பின்னூட்டங்களை பதிவு செய்துள்ளனர்.
இதுபோல இந்தியில் உங்களுக்கு கடிதங்களும் தகவல் தொடர்புகளும் வந்தால் அதற்கு நீங்கள் உங்கள் தாய் மொழியிலேயே பதிலளியுங்கள் என கூறியுள்ளார். மற்றொரு பயனர் அரசு அனைவருக்கும் புரியும் வகையில் ஆங்கிலத்தில் தான் தகவல் தொடர்புகளை மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். மற்றொருவரோ இந்த எம்பி தன்னுடைய கடிதத்தை இந்தியில் எழுதினாரா என வினவியுள்ளார்.
மோகன்தாஸ் பை இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரியாக இருந்தவர். இவர் அக்ஷய பாத்திரம் என்ற பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவு திட்டத்தில் பெரும் பங்களிப்பாளர். மேலும் பத்மஸ்ரீ விருது பெற்றவர். தற்போது ஆரின் கேப்பிட்டல் என்ற நிறுவனத்தின் தலைவராக செயல்பட்டு வருகிறார். மக்களுக்கு எதிரான மத்திய மற்றும் மாநில அரசுகளின் செயல்பாடுகளை அவ்வப்போது வெளிப்படுத்துவார்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications