எலான் மஸ்க்-ஐ பிடிக்கலையா.. அப்போ இங்க வாங்க.. சிவப்பு கம்பளம் விரிக்கும் ஐடி நிறுவனங்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எலான் மஸ்கினால் ட்விட்டர் கையகப்படுத்தப்பட்ட நிலையில், பற்பல அதிரடியான மாற்றங்களை கண்டு வருகின்றது. குறிப்பாக பாதிக்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.

ஆனால் எலான் மஸ்க் தன்னுடைய மறுசீரமைப்பினை அதோடு விட்டுவிடவில்லை. இன்னும் ஏராளமான கட்டுப்பாடுகளையும் விதித்து வருகின்றார்.

சில தினங்களுக்கு முன்பு ஊழியர்களிடம் கட்டாயம் நீண்ட நேரம் பணிபுரிய வேண்டியிருக்கும். அப்படி இல்லாவிட்டால் தாராளமாக நிறுவனத்தினை விட்டு வெளியேறிக் கொள்ளலாம் என கூறினார்.

 ஊழியர்கள் அதிர்ச்சி

ஊழியர்கள் அதிர்ச்சி

இது ட்விட்டர் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியது. இதனையடுத்து ட்விட்டர்கள் ஏராளமானவர்கள் உங்கள் வேலையும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்பது போல வெளியேறினர். இதற்கிடையில் கடந்த திங்கட்கிழமையன்று பிரெஞ்ச் செயல்பாட்டின் தலைமை மேலாளார் பணியில் விலகினார்.

எங்களை தொடர்பு கொள்ளுங்கள்

எங்களை தொடர்பு கொள்ளுங்கள்

இதற்கிடையில் ட்விட்டரில் இருந்து வெளியேறி வரும் ஊழியர்கள், பணி நீக்கம் செய்யப்பட்டவர்களையும் பல நிறுவனங்களும் பணியமர்த்திக் கொண்டு வருகின்றன. சில நிறுவனங்கள் நேரடியாகவே லிங்க்ட் தளத்தின் மூலம் பணி நீக்கம் செய்யப்பட்டவர்களை எங்களை தொடர்பு கொள்ளலாம் என அறிவித்து வருகின்றன. இதில் சில இந்திய நிறுவனங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏன் பணி நீக்கம்?

ஏன் பணி நீக்கம்?

அனுபவம் வாய்ந்த திறமையான ஊழியர்களை பல்வேறு நிறுவனங்களும் தேடி வரும் நிலையில் அவர்களுக்கு இது சரியான வாய்ப்பாகவும் பார்க்கப்பட்டு வருகின்றது.

அமெரிக்காவை சேர்ந்த சாப்ட்வேர் நிறுவனமான ஹப்ஸ்பாட்டின் தலைமை செயல் அதிகாரி கேட்டி பர்கே , எலான் மஸ்கினை விமர்சனம் செய்த அதிகாரிகளை பணி நீக்கம் செய்ததாக கூறினார்.

விமர்சனம் செய்வது சரிதான்

விமர்சனம் செய்வது சரிதான்

ஒரு தலைவரை விமர்சனம் செய்வதும் உங்கள் செய்த வேலையின் ஒரு பகுதி தான் அவர் லிங்க்ட் இன் பதிவில் கேட்டி எழுதினார்.

இந்த விவாதம் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், உண்மையில் ஊழியர்கள் குறித்து நிறுவனம் தெரிந்து கொள்வது இயல்பானது தான். ஆனால் சில தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் எந்த செயலை செய்தாலும் அது சரியாக இருக்கும் என நம்புகின்றனர். அதனை அப்படியே ஏற்றுக் கொண்டு அப்படியே செல்லும் பட்சத்தில், சில நேரங்களில் தவறான பாதைக்கு செல்ல வழிவகுக்கலாம். ஆக சரியான ஒரு விஷயத்தினை யார் வேண்டுமானாலும் சொல்லலாம் அதில் தவறேதும் இல்லை என பலரும் தங்களது கருத்துகளை கூறிவருகின்றனர்.

Coderpad- என்ன சொல்கிறது?

Coderpad- என்ன சொல்கிறது?

Coderpad-ன் தலைமை செயல் அதிகாரி அமாண்டா ரிச்சர்ட்சன், ட்விட்டரை விட்டு வெளியேறிவர்களுக்கான வாய்ப்பினை அறிவித்தார். ரீ மோட் ஒர்க்கிங்கினை தடை செய்தததை அடுத்து, எலான் மஸ்கின் நடவடிக்கையை S*** show எனவும் பதிவிட்டார். இது மிகவும் ஏமாற்றம் தரும், மனச்சோர்வு, விரக்தியை தரும் ஒரு நிகழ்ச்சி எனவும் பதிவிட்டார்.

சிக்கலுக்கு வழிவகுக்கலாம்

சிக்கலுக்கு வழிவகுக்கலாம்

ட்விட்டரில் செய்யப்படும் ஏராளமான பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு தொழில் நுட்ப சிக்கல்களுக்கு அது வழிவகுக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

ட்விட்டர் மட்டும் அல்ல, நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் மெட்டா, அமேசான் உள்ளிட்ட பல அமெரிக்க நிறுவனங்களும் பணி நீக்கம் செய்து வருகின்றன. ஒரு தரப்பு இப்படி எனில் மறுதரப்பில் ஐடி துறையில் பணியமர்த்தல் என்பது அதிகரிக்கலாம் என கூறி வருகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Don't Like Elon Musk: IT Firms Call Out ex Twitter employees

Twitter has laid off more than half of its employees. Meanwhile, many companies are calling for laid-off employees.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X