வேலை முடித்து வீடு திரும்பிய பிறகு வேலை சார்ந்த மின்னஞ்சல்களுக்கு பதில் அளிக்கும் பழக்கம் உங்களுக்கு இருக்கிறதா? - இது வேலை மீது உங்களின் வெறுப்பை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்கிறது ஒரு ஆய்வு. வேலை முடிந்து வீடு திரும்பிய பிறகும் வேலை சார்ந்த மின்னஞ்சல்கள் அல்லது வாட்ஸ் அப் மெசேஜ்களுக்கு பதில் அளிப்பது ஊழியர்கள் மனநிலையை அதிக அளவு பாதிக்கிறது என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
Auburn பல்கழகத்தை சேர்ந்த Myoung-Gi Chon என்ற பேராசிரியர் தன்னுடைய சக பேராசிரியர்களோடு இணைந்து ஒரு ஆய்வினை நடத்தியுள்ளார். அதில் வேலை நேரம் தாண்டி வேலை சார்ந்த மின்னஞ்சல்களுக்கு அல்லது வாட்ஸ் அப் மெசேஜ் உள்ளிட்டவற்றுக்கு பதில் அளிப்பது ஒரு ஊழியரின் மனநிலையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது குறித்த ஆய்வு தான் இது.

அமெரிக்காவை சேர்ந்த முழு நேர ஊழியர்கள் 315 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில் வேலை நேரம் முடிந்த பிறகும் வேலை சார்ந்த மின்னஞ்சல்கள் அல்லது மெசேஜ்களுக்கு பதில் அளிக்க வேண்டிய சூழலுக்கு ஆளாகும் ஊழியர்கள் மனரீதியாக பாதிக்கப்படுகின்றனர் என்றும் அவர்களிடம் எதிர்மறையான மனநிலை உருவாகத் தொடங்குகிறது என்றும் தெரியவந்துள்ளது. குறிப்பாக அவர்களுக்கு வேலை மீது ஒரு வெறுப்பு உண்டாகிறது என்றும் வேலையில் அவர்களின் செயல் திறன் குறைகிறது என்றும் இந்த ஆய்வு அறிக்கை கூறுகிறது.
கடந்த 2013 ஆம் அமெரிக்கா மனநல சங்கம் வேலைக்கு செல்பவர்களிடம் ஒரு சர்வே நடத்தியது. அதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வேலை நேரம் முடிந்து வீடு திரும்பினாலும் வேலை சார்ந்த மின்னஞ்சல்களையும் மெசேஜ்களையும் தாங்கள் அடிக்கடி பார்ப்பதாக கூறியுள்ளனர். அந்த எண்ணிக்கை தற்போது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாம். இவ்வாறு வீட்டிற்கு சென்ற பிறகும் வேலை சார்ந்த எண்ணங்கள் தொடர்ந்து மனதில் இருந்து கொண்டே இருப்பதால் அந்த குறிப்பிட்ட நபர் எப்பொழுதும் மன அழுத்தத்துடன் காணப்படுகிறார் என ஆய்வறிக்கை கூறுகிறது.
இது உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் அவர்களை பாதிக்கிறது என்பதோடு மட்டுமல்லாமல் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என இந்த ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. எனவே வேலை முடித்து வீட்டுக்கு வந்த பிறகு வேலை சார்ந்த விஷயங்களை தலையிடாமல் தன்னுடைய நேரத்தை முழுவதுமாக குடும்பத்தினருக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் செலவிடுவதுதான் ஒருவரது மனநலனுக்கும் மற்றும் உடல் நலனுக்கும் நல்லது என சொல்லப்படுகிறது.
Written by: Devika
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

சட்டமன்ற தேர்தல் 2026: உங்களின் Booth Slip-ஐ ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?



Click it and Unblock the Notifications