அமெரிக்கத் தேர்தல் களம் சூடுபிடித்து வரும் நிலையில், கொரோனாவால் பாதிப்படைந்த அமெரிக்கப் பொருளாதாரத்தில் டொனால்டு டிரம்ப் வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். இதனால் நவம்பர் 3ஆம் தேதி நடக்கும் அதிபர் தேர்தல் நாளில் டிரம்புக்கு ஆதரவு அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க வரலாற்றில், அந்நாட்டுப் பொருளாதாரம் ரெசிஷனில் இருந்து மிகவும் குறைந்த காலகட்டத்தில் அதிகளவிலான வளர்ச்சி அடைந்துள்ளது டிரம்ப்-ன் ஆட்சிக் காலத்தில் தான்.
1950ல் ஹேரி ட்ரூமேன் அமெரிக்க அதிபராக இருந்த போது, அந்நாட்டு GDP 17 சதவீதம் வளர்ச்சி அடைந்தது. இன்றைய நாள் முதல் இதுதான் அதிகப்படியான வளர்ச்சி அளவீடாக இருந்தது, ஆனால் செப்டம்பர் மாதத்தில் அமெரிக்கப் பொருளாதாரம் யாரும் எதிர்பார்க்காத வகையில் சுமார் 33 சதவீதம் வளர்ச்சி அடைந்து புதிய வரலாற்றுச் சாதனையை அடைந்துள்ளது.
இந்தத் தடாலடி வளர்ச்சி அமெரிக்க மக்கள் மத்தியில் அதிகளவிலான கவனத்தை ஈர்த்துள்ளது என்றால் மிகையில்லை.
கணிப்புகள்
அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் அமெரிக்கப் பொருளாதாரம் 17 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடையும் கணித்து இருந்தது, இதேபோல் வால் ஸ்ட்ரீட் பொருளாதார வல்லுனர்கள் அதிகப்படியாகப் பொருளாதாரம் 20 சதவீதம் வளர்ச்சி அடையும் எனக் கணித்து இருந்தது.
ஆனால் அனைத்து கணிப்புகளையும் உடைத்து டொனால்டு டிரம்ப் ஆட்சியில் சுமார் 33 சதவீத பொருளாதார வளர்ச்சியை அமெரிக்கா பதிவு செய்துள்ளது.
வேலைவாய்ப்பு சந்தை
இதேபோல் பெடரல் ரிசர்வ் மற்றும் காங்கிரஸ் பட்ஜெட் அலுவலகம் அந்நாட்டு வேலைவாய்ப்பின்மை அளவீடு 16 சதவீதம் வரையில் இருக்கும். இந்த அளவீடு அடுத்த வருடம் தான் குறையும் எனக் கணித்து இருந்தது.
ஆனால் இதிலும் கணிப்புகளை உடைத்து அமெரிக்காவில் வேலைவாய்ப்பின்மை வெறும் 8 சதவீதமாகக் குறைந்துள்ளது.
1.5 கோடி அமெரிக்கர்கள்
அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட இந்தப் பிளாக்பஸ்டர் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பின்மையில் ஏற்பட்ட சரிவு வெறும் 6 மாத காலத்தில் சுமார் 1.5 கோடி அமெரிக்கர்களை நேரடியாக நன்மை அளித்துள்ளது. அமெரிக்க வரலாற்றில் இதுபோன்ற நிகழ்வு இதுவரை நடந்தது இல்லை.
ரியல் எஸ்டேட் மற்றும் சிறு நகரங்கள்
மேலும் அமெரிக்க ரியல் எஸ்டேட் துறை எப்போதும் இல்லாத வகையில் அதிகளவிலான வர்த்தகத்தை எதிர்கொண்டு வருகிறது. கொரோனா தொற்று காரணமாகவும், வீட்டில் இருந்த பணியாற்றும் சூழ்நிலை நிலவும் காரணத்தாலும் அமெரிக்காவில் தற்போது பெரு நகரங்களில் இருந்து சிறு நகரங்களுக்குச் சொந்த வீடு வாங்கி இடம்பெயரத் துவங்கி உள்ளனர்.
இதனால் சிறு நகரங்களில் வர்த்தகம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் சிறப்பான நிலையில் வளர்ச்சி அடைந்து வருகிறது.
முதலீடு
தனியார் துறையில் முதலீடு அளவு கடந்த 8 வருடத்தில் இல்லாத வகையில் கோடைக்கால அளவீட்டில் இருந்து சுமார் 80 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் அமெரிக்கச் சந்தையில் சுமார் 60 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. இது கடந்த 8வருடத்தில் நிகழ்ந்திடாத ஒன்று.
காரணம்
இந்த அதிரடி வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் என்னவென்றால் கொரோனா பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பு அதாவது 2020க்கு முன்பு அமெரிக்காவின் 50 வருடக் குறைவான வேலைவாய்ப்பு விகிதம் இருந்தது. அமெரிக்கக் குடும்பங்களின் சராசரி வருமானம் அதிகரித்தது. இதேபோல் வரலாறு காணாத விதமாக அமெரிக்காவில் வாழும் மக்கள் மத்தியில் ஏழ்மை பெரிய அளவில் குறைந்து இருந்தது.
இதுவே மிகவும் குறைந்த காலகட்டத்தில் அமெரிக்கப் பொருளாதாரம் மீண்டு வருவதற்கான முக்கியக் காரணமாக அமைந்தது.
More From GoodReturns

ஐடி நிறுவன பெண் ஊழியர்களே எச்சரிக்கை!! டிசிஎஸ் நாசிக் அலுவலக சம்பவம் கற்று தரும் பாடம் இது தான்!!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!



Click it and Unblock the Notifications