ஹெச்1பி விசாவில் பல்வேறு மாற்றங்கள் அமெரிக்காவில் கொண்டு வரப்பட்ட வண்ணம் உள்ளன. டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு ஹெச் 1பி விசாவில் பல கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. இந்த மாற்றங்கள் அனைத்துமே இந்தியாவை சேர்ந்த டெக் நிபுணர்களை பாதிக்கக் கூடிய வகையில் அமைந்திருக்கிறது.
அமெரிக்காவை சேர்ந்த பெரிய பெரிய தொழில் நுட்ப நிறுவனங்கள் திறன்மிகு வெளிநாட்டு ஊழியர்களை பணியில் அமர்த்துவதற்கு ஹெச்1பி விசாவை தான் பயன்படுத்துகின்றன. கூகுள் , எக்ஸ், அமேசான் போன்ற பல்வேறு நிறுவனங்களும் திறன் மிகு வெளிநாட்டவர்கள் குறிப்பாக இந்தியாவை சேர்ந்த டெக்கிகளை வேலைக்கு அமர்த்த ஹெச்1பி விசாவை தான் பயன்படுத்துகின்றன . அந்த வகையில் ஹெச்1பி விசாவில் அமெரிக்காவில் தங்கியிருக்கக்கூடிய 70% பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள் தான்.

எனவே தான் ஹெச்1பி விசாவில் கொண்டுவரக்கூடிய எந்த ஒரு மாற்றமும் இந்தியர்களை நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவையாக இருக்கிறது . அண்மையில் தான் டிரம்ப் நிர்வாகம் ஹெச்1பி விசாவுக்கான கட்டணத்தை ஒரு லட்சம் டாலர்கள் என உயர்த்தியது . இந்த சூழலில் ஹெச்1பி விசா விண்ணப்பங்களை ஏற்பதில் சில கட்டுப்பாடுகளை டிரம்ப் நிர்வாகம் கொண்டு வந்திருக்கிறது.
இது தொடர்பான அனைத்து அமெரிக்க தூதரகங்களுக்கும் மெமோ ஒன்று அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. அதில் ஹெச்1பி விசா விண்ணப்பங்களை ரத்து செய்வதற்கென புதிய காரணங்கள் சேர்க்கப்பட்டிருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி குறிப்பிட்டு இருக்கிறது. குறிப்பாக அனைத்து நாடுகளிலும் இருக்கக்கூடிய அமெரிக்க தூதரகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள உத்தரவில் ஒரு நபர் ஹெச்1 பி விசா வேண்டி விண்ணப்பம் செய்கிறார் என்றார் என்றால் அவருடைய ரெஸ்யூம் மற்றும் அவருடைய லிங்குடின் புரோபைலை ஆய்வு செய்ய வேண்டும் என குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
அவர் மற்றும் அவருடன் பயணம் செய்யக்கூடிய நபர்கள் இதற்கு முன்பு என்ன வேலை செய்து கொண்டிருந்தார்கள் என ஆய்வு செய்ய வேண்டும். போலியான தகவல்களை பரப்புவதை தடுப்பது, ஃபேக்ட் செக்கிங் உள்ளிட்ட துறைகளில் வேலை செய்திருக்கிறார்களா என ஆய்வு செய்ய வேண்டுமாம். அவ்வாறு ஆய்வு செய்யும்போது குறிப்பிட்ட அந்த நபர் அமெரிக்காவில் உள்ள பேச்சு சுதந்திரத்திற்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தால் அவரின் விசாவை ரத்து செய்வது குறித்து பரிசீலனை செய்யலாம் என குறிப்பிட்டு இருக்கிறது.
அனைத்து விசா விண்ணப்பதாரர்களுக்குமே இந்த விதி பொருந்தும் குறிப்பாக ஹெச்1பி விசா வில் அமெரிக்காவுக்கு வரக்கூடியவர்கள் டெக்னாலஜி துறையிலும் சோசியல் மீடியா மற்றும் நிதி சேவை சார்ந்த துறைகளிலும் வேலை செய்வதால் கண்டிப்பாக அவர்களின் பின்புலத்தை ஆய்வு செய்ய வேண்டும் என குறிப்பிட்டு இருக்கிறது. அது போன்ற எந்த ஒரு நடவடிக்கைகளையும் அவர்கள் ஈடுபடவில்லை என்பதை உறுதி செய்ய இதற்கு முன்பு எங்கெல்லாம் வேலை செய்தார்கள் , என்ன வேலை செய்தார்கள் என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
இது புதிதாக விண்ணப்பம் செய்பவர்களுக்கு, மறு விண்ணப்பம் செய்பவர்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஹெச்1பி விசாக்களை ஆய்வு செய்யக்கூடிய அதிகாரிகள் அமெரிக்காவில் பேச்சு சுதந்திரத்தை இதற்கு முன் தணிக்கை செய்யும் செயல்பாடுகளில் ஈடுபட்ட நபர்களின் விசாக்களை ரத்து செய்யலாம். உதாரணமாக ஒரு நபர் இந்தியாவில் சோசியல் மீடியா கம்பெனியில் வேலை பார்த்தவர் என்றால் அவர் அங்கே content moderation, fact checking போன்ற வேலை செய்தவர். அதில் எப்போதாவது அமெரிக்க அரசாங்கத்தை விமர்சிக்கும் , அமெரிக்க பேச்சு சுதந்திரத்துக்கு எதிரான பதிவை அவர் நீக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தால் அவர் விசாவை ரத்து செய்யலாம்.


Click it and Unblock the Notifications