வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து கார்கள் மீதும் 25% இறக்குமதி வரியை விதிக்கவுள்ளதாகவும், இந்த வரிகள் நிரந்தரமாக அமல்படுத்தப்படும் எனவும் அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த புதிய வரிகள் ஏப்ரல் 2ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வரும், மேலும் ஏப்ரல் 3ஆம் தேதி முதல் வரி வசூல் தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஒவல் அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், "நாங்கள் முதலில் 2.5% அடிப்படை வரியிலிருந்து தொடங்கி, அதை 25% ஆக உயர்த்துகிறோம் என்றும் இந்த நடவடிக்கை பொருளாதார வளர்ச்சியை தூண்டும் என்றும் வலியுறுத்தினார். இருப்பினும், அமெரிக்காவில் தயாரிக்கப்படும் கார்களுக்கு, எந்த வரியும் விதிக்கப்படாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். அதாவது, இன்னும் சில தினங்களில் பரஸ்பர வரிகளை டிரம்ப் அறிவிக்கவுள்ள நிலையில், தற்போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஏப்ரல் 2, டிரம்ப் "விடுதலை நாள்" என்று குறிப்பிட்ட தேதியில், அவர் பல்வேறு பரஸ்பர வரிகளை அறிமுகப்படுத்த உள்ளார். இருப்பினும், இது அமெரிக்காவின் வர்த்தக கூட்டாளர்களால் நீதியற்ற விதத்தில் வரி விதிக்கப்படும் இறக்குமதி பொருட்கள் என்று டிரம்ப் நிர்வாகம் கூறுகிறது. வர்த்தக ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்வதற்கான ஒரு நடவடிக்கையாக வரிகளை, டிரம்ப் நீண்ட காலமாக ஆதரித்து வந்தாலும், அவரது அணுகுமுறை முதலீட்டாளர்கள், பெருநிறுவனத் தலைவர்கள் மற்றும் நுகர்வோர் மத்தியில் சந்தை ஏற்ற இறக்கத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதமே, அதிபர் டிரம்ப் 25 சதவீத இறக்குமதி வாகன வரியை அறிவிக்கலாம் எனக் கூறப்பட்டது, ஆனால் அறிவிப்புகள் ஏதும் வெளியிடவில்லை. இருப்பினும் புதிய ஆட்டோமொபைல் வரிகள் "மிக விரைவில்" வரப்போகின்றன என்று கடந்த திங்கள் கிழமை தெரிவித்திருந்தார். மேலும், வரிகளை வருவாயை ஈட்டுவதற்கும் அமெரிக்க தொழில்துறை துறையை புதுப்பிப்பதற்கும் ஒரு வழிமுறையாகக் கருதும் டிரம்ப், வரவிருக்கும் சில பரஸ்பர வரிகள் ஆரம்பத்தில் எதிர்பார்த்ததை விட மென்மையாக இருக்கலாம் என்று கூறியிருந்தார்.
மேலும், இந்த முடிவில் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க்கின் பங்கு குறித்த ஊகங்களுக்கு மத்தியில், வாகன கட்டணக் கொள்கையை வடிவமைப்பதில் மஸ்க்கிற்கு எந்த தொடர்பும் இல்லை என்று டிரம்ப் தெளிவுபடுத்தினார். மேலும், வாகன கட்டணங்கள் குறித்து மஸ்க் ஆலோசனை வழங்கவில்லை என்றும் அவர் ஒருபோதும் என்னிடம் எந்த உதவியும் கேட்டதில்லை என்றும் டிரம்ப் கூறினார். மேலும், முக்கியமான ஆட்டோமொபைல் நிறுவனங்களுடன் இந்தக் கொள்கையைப் பற்றிப் பேசியுள்ளதாகவும், இந்த வரிகள் டெஸ்லாவிற்கு அனுகூலமாக இருக்கலாம்" என்றும் குறிப்பிட்டிருந்தார்.
'சீனாவிற்கு வரி குறைப்பா? இந்தநிலையில், சீனாவிற்குச் சொந்தமான சமூக ஊடக தளமான டிக்டாக் தொடர்பான ஒப்பந்தத்தைப் பெறுவதற்கு சீனாவிற்கு வரிகளில் சிறிது குறைப்பை வழங்கலாம் என்றும் தேவைப்பட்டால் ஒப்பந்தத்திற்கான காலக்கெடுவை நீட்டிக்க வாய்ப்புள்ளதாகவும் டிரம்ப் நேற்று (புதன்கிழமை) தெரிவித்திருந்தார். மேலும் டிக்டாக்கை பொறுத்தவரை, , சீனா அதில் ஒரு பங்கை வகிக்க வேண்டியிருக்கும், ஒருவேளை ஒரு அங்கீகாரமாக இருக்கலாம், எனக்கு அது நடக்கும் என தோன்றுகிறது. இதற்காக அவர்களுக்கு கொஞ்சம் வரி தளர்வு கொடுக்கலாம் அல்லது ஏதாவது செய்யலாம்," என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
டிரம்பின் இந்தக் கருத்துகள், சீன இறக்குமதிகள் மீது கூடுதல் வரிகளை விதிக்கப்போவதாகவும், அதே நேரத்தில் இந்தியா உள்ளிட்ட பிற நாடுகள் மீது பரஸ்பர வரிகளை அறிவிப்பதாகவும் கூறியிருந்த நிலையில், அவரது முந்தைய நிலைப்பாட்டிலிருந்து இந்த கருத்துகள் ஒரு மாற்றத்தைக் குறிக்கின்றன. மேலும், பொருளாதார மற்றும் தேசிய பாதுகாப்பு கவலைகளை மேற்கோள் காட்டி, டிரம்ப் நிர்வாகம் சீனாவின் பெய்ஜிங் மீதான வர்த்தக கட்டுப்பாடுகளை அதிகரித்து வருகிறது, இதில், TikTok நிறுவனத்தின் சீன உரிமை ஒரு முக்கிய சர்ச்சைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications