அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான வர்த்தகப் போர் மீண்டும் வெடிக்கக் கூடிய அபாயம் அதிகரித்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில்
டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதில் இருந்து அனைவருக்கும் விவாதிக்கும் முக்கியமான விஷயங்களில் ஒன்றாக இருப்பது இதுதான்.
அடுத்த ஆண்டின் துவக்கத்தில் டொனால்டு டிரம்ப் தலைமையில் அமையும் புதிய அமெரிக்க அரசு, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 40% வரி விதிக்கலாம் என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் நடத்திய பொருளாதார நிபுணர்கள் அடங்கிய கருத்து கணிப்பு முடிவுகள் கூறியுள்ளது.

இதனால் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 1 சதவீதம் வரை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டொனால்டு டிரம்ப்-ன் கடந்த ஆட்சியில் விதிக்கப்பட்ட வரியிலும், வர்த்தக கட்டுப்பாட்டில் இருந்து இன்று வரையில் மீள முடியாமல் தவிக்கும் சீனாவுக்கு புதிய வரி விதிப்பு பெரும் இழப்பாக இருக்கும்.
இந்த வர்த்தக போரில், அமெரிக்காவுக்கு இணையாக சற்றும் சலைக்காமல் சீனாவும் தனது பங்கிற்கு அமெரிக்கா மீது வரி விதிக்கவும், மறுமுனையில் தனது வர்த்தகத்தை காப்பாற்றிக்கொள்ளவும் அனைத்து விதிமான முன்ஏற்பாடுகளை சீனா செய்ய துவங்கியுள்ளது.
டொனால்டு டிரம்ப், தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது 'அமெரிக்க பர்ஸ்ட்' என்ற கொள்கையின் கீழ் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கடுமையான வரிகள் விதிப்பதாக தனது தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்திருந்தார். டிரம்ப் பிரச்சாரத்தில் 60 சதவீதம், 80 சதவீதம், 100 சதவீதம் என ஒவ்வொரு முறையும் வரி விதிப்பை தொடர்ந்து அதிகரித்து அறிவித்து வந்தார்.
டிரம்ப்-ன் பேச்சால் ஆடிப்போன சீனா பெரும் கவலையில் மூழ்கியது. ஏற்கனவே சீனா ரியல் எஸ்டேட் சந்தையில் வீழ்ச்சியில் இருந்து மீள முடியாமல், அதீத கடன் சுமையாலும், மந்தமான உள்நாட்டு தேவை போன்ற பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவுக்கான வர்த்தகத்தில் வரியும், கட்டுப்பாடும் விதிக்கும் போது சீனாவின் ஏற்றுமதியும் மோசமாகிவிடும்.
ராய்ட்டர்ஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் 50க்கும் மேற்பட்ட பொருளாதார நிபுணர்கள் கலந்துக்கொண்ட நிலையில், டிரம்ப் தலைமையிலான அரசு அதிகபட்சமாக 60% வரை வரி விதிக்கப்படலாம் என்றும், சராசரியாக 38% வரி விதிக்கப்படலாம் என்றும் கூறியுள்ளனர்.
இவ்வாறு அதிக அளவில் வரி விதிக்கப்பட்டால் அது அமெரிக்கா மற்றும் சீனா இரண்டு நாடுகளின் பொருளாதாரத்தையும் பாதிக்கும். உலகளாவிய சப்ளை சங்கிலி பாதிப்பு ஏற்பட்டு பொருட்களின் விலை உயரும். அமெரிக்க அரசின் அறிவிப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீன அரசும் வரி விதிக்கப்படலாம்.
இதற்கு மத்தியில் சீனாவில் இருக்கும் இதர வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்கு வருவதற்கான வாய்ப்புகள் இந்த வரி விதிப்பால் உருவாகும் என்பது முக்கிய செய்தி.
More From GoodReturns

எண்ணெய் அரசியலில் சீனாவை அசைக்க முடியாது? ஹார்மூஸ் சிக்கலை உடைக்கும் பெய்ஜிங்கின் ரகசிய பிளான்!

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!

Trump முன்னுக்கு பின் முரண்.. வெள்ளை கொடி தூக்கிய பின்பு ஈரானில் தாக்குதல்.. 2 எரிவாயு தளங்கள் துவம்சம்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications