டிரம்ப் குடும்பத்தில் அங்கமாக மாறிய எலான் மஸ்க்.. பேத்தி இன்ஸ்டா போட்டோ.. டிரம்ப் சிரிப்பு..!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப்பின் வெற்றி மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படும் வேளையில், இவரது வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தவர் என்றால் அது எலான் மஸ்க் தான். ஒருபக்கம் 100 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை நன்கொடையாக கொடுத்த நிலையில், மறுமுனையில் டிவிட்டர் தளத்தை மொத்தமாகக் குடியரசு கட்சியின் கொள்கை பரப்புவதற்கும், டிரம்ப்-க்காகவும் பயன்படுத்தப்பட்டது.

இதன் மூலம் டொனால்டு டிரம்ப் உடன் எலான் மஸ்க் மிகவும் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது மட்டும் அல்லாமல் டிரம்ப்-க்கு ஆதரவமாக எலான் மஸ்க் பிரச்சாரம் செய்யவும் களத்தில் இறங்கினார். இதன் வாயிலாகவே எலான் மஸ்க்-ஐ புதிய நட்சத்திரம் என்று டிரம்ப் தனது வெற்றி உரையில் தெரிவித்தார்.

 டிரம்ப் குடும்பத்தில் அங்கமாக மாறிய எலான் மஸ்க்.. பேத்தி இன்ஸ்டா போட்டோ.. டிரம்ப் சிரிப்பு..!!

இந்த நிலையில் தற்போது எலான் மஸ்க், டிரம்ப் குடும்ப உறுப்பினராகியுள்ளார். அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றிபெற்ற களிப்பில் பிளோரிடாவில் உள்ள தனது கோல்ஃப் கோர்ஸ்-ல் விளையாடிக்கொண்டு இருந்தார், அப்போதும் டிரம்ப், எலான் மஸ்க் அவரை அழைப்பு விடுத்து தனது பேத்தி-க்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

இதை தொடர்ந்து நடந்தது தான் தரமான சம்பவம், அமெரிக்க அதிபராகப்போகும் டொனால்டு டிரம்ப் மிகப்பெரிய கோல்ஃப் பிரியர், அவர் விளையாடும் போது பல பிரபலங்களை சந்திப்பது சகஜமான விஷயம், சில மாதங்களுக்கு முன்பு தல தோனியை கோல்ஃப் மைதானத்தில் சந்தித்தார். இதேபோல் தான் தற்போது எலான் மஸ்க்கை சந்தித்தார், ஆனால் இந்த சந்திப்பு கொஞ்சம் ஸ்பெஷல்.

எலான் மஸ்க் சந்திப்பு குறித்து டொனால்டு டிரம்ப் எவ்விதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை, ஆனால் டிரம்ப்-ன் பேத்தி பதிவிட்டு உள்ளார். 17 வயதான கியா டிரம்ப் தனது இன்ஸ்டாகிராம்-ல் Sundays with Grandpa என்ற தலைப்பில் சில முக்கியமான புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அதில் ஒன்று தான் எலான் மஸ்க் உடனான புகைப்படம்.

 டிரம்ப் குடும்பத்தில் அங்கமாக மாறிய எலான் மஸ்க்.. பேத்தி இன்ஸ்டா போட்டோ.. டிரம்ப் சிரிப்பு..!!

கியா டிரம்ப் முதல் படத்தில் தனது தாத்தா சிரித்தபடி புகைப்படம் வெளியிட்டார், அடுத்ததாக கோல்ஃப் மைதானத்தில் நின்றபடி 53 வயதான எலான் மஸ்க் உடன் கியா டிரம்ப் எடுத்துக்கொண்ட போட்டோவில், மஸ்க்-ன் 4 வயதான X Æ A-12 மகனும் இருந்தார்.

இந்த புகைப்படத்திற்கு கியா டிரம்ப், எலான் மஸ்க் அங்கிள் ஸ்டேட்ஸ் பெற்றுள்ளார் என்ற கேப்ஷன் உடன் இந்த புகைப்படத்தைப் பதிவிட்டார். இது தான் எலான் மஸ்க், டிரம்ப் குடும்பத்துடன் எந்த அளவுக்கு நெருங்கியுள்ளார் என்பதை காட்டுகிறது. டிரம்ப்-ன் பேத்தி, பேரன்கள் எலான் மஸ்க்-ஐ குடும்பத்தில் ஒருவராக நினைக்கும் காரணத்தாலேயே அங்கிள் என அழைக்கத் துவங்கியுள்ளனர், இல்லையெனில் மிஸ்டர் எலான் அல்லது மிஸ்டர் மஸ்க் என்று அழைப்பார்கள்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+