அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவி ஏற்றிருக்கும் டொனால்ட் டிரம்ப், மூன்றாவது முறையாகவும் அந்த பதவி வகிக்க தனக்கு விருப்பம் இருக்கிறது என வெளிப்படையாக கூறி இருக்கிறார்.
அமெரிக்க அரசியல் சாசன முறைப்படி ஒரு நபர் இரண்டு முறைக்கு மேல் அதிபராக பதவி வகிக்க முடியாது. ஆனால் டொனால்ட் டிரம்ப் மூன்றாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவி வகிக்கக்கூடிய விருப்பமும் அதற்கு சட்டரீதியான வழிமுறையும் இருப்பதாக தெரிவித்திருப்பது உலக அளவில் பேசு பொருளாக மாறி இருக்கிறது.

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்று இருக்கிறார். அவர் அண்மையில் என்பிசி நியூஸ் என்ற சேனலுக்கு அளித்த நேர்காணலில் மூன்றாவது முறையாக அமெரிக்க அதிபர் பதவியை வகிக்கும் எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது, அதற்கு இது தொடர்பாக உறுதியான முடிவை எடுப்பதற்கு இது சரியான நேரம் அல்ல இருந்தாலும் சில வழிமுறைகள் அதற்கு இருக்கின்றன என்பது எனக்கு தெரியும் என கூறி இருக்கிறார்.
கடந்த ஆண்டு அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஷாரிஸை வீழ்த்தி குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக அரியணையில் அமர்ந்தார். டிரம்புக்கு நீண்ட காலம் இந்த பதவியில் அமர வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால் அரசியலமைப்பு சட்டம் அதற்கு இடம் கொடுக்கவில்லை. இந்நிலையில் மூன்றாவது முறையாக அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருப்பது தற்போது வெளிவந்திருக்கிறது. இந்த நேர்காணலில் அதனை வெளிப்படையாக அவர் தெரிவித்திருக்கிறார்.
நிறைய பேர் நான் மூன்றாவது முறையாக அமெரிக்க அதிபராக வேண்டும் என எண்ணுகிறார்கள், ஆனால் அவர்களிடம் நான் கூறுவது அதற்கு இன்னும் நீண்ட காலம் இருக்கிறது ,இப்போது அதைப் பற்றி நாம் முடிவு எடுத்தால் அது மிக சீக்கிரமாக எடுத்து ஒரு முடிவாக இருக்கும், அதற்கு இன்னும் காலம் இருக்கிறது என பதிலளித்துள்ளார். அப்போது இந்த நேர்காணலில் என்னென்ன வழிமுறைகள் இருக்கின்றன அமெரிக்க அரசியல் சாசன சட்டம் ஒரு தனி நபர் அமெரிக்க அதிபராக இரண்டு முறைகளுக்கு மேல் பதவி வைக்க முடியாது என தெரிவிக்கிறதே என கேட்கப்பட்டது.
அதாவது டிரம்ப் மூன்றாவது முறையாக அமெரிக்க அதிபர் ஆவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறுவதன் பின்னணியில் சட்ட ரீதியான என்னென்ன வழிமுறைகள் இருக்கின்றன என்ற கேள்வியும் முன் வைக்கப்பட்டது. அதற்கு பதில் அளித்துள்ள டிரம்ப் துணை அதிபர் வான்ஸ் மூலம் இதனை நிறைவேற்ற முடியும் என பதில் அளித்துள்ளார். அதாவது துணை அதிபராக இருக்கும் ஜே டி வான்ஸை 2028 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் அதிபர் பதவிக்கு போட்டியிட வைப்பாராம்.
அந்த தேர்தலில் ஜே டி வான்ஸ் வெற்றி பெற்று அவர் அதிபராக பதவியேற்ற உடன் அவரை பதவி விலகச் செய்து, தான் மீண்டும் அந்த பொறுப்பினை ஏற்க முடியும் என தெரிவித்துள்ளார். இதுதான் மூன்றாவது முறையாக அமெரிக்க அதிபராக இருப்பதற்கு தனக்கு இருக்கும் சட்ட ரீதியிலான வழிமுறை என அவர் தெரிவித்திருக்கிறார் . மேலும் சில வழிமுறைகள் இருக்கின்றன , ஆனால் அதை பற்றி நான் விளக்கமாக கூற முடியாது என டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தின் 22ஆவது திருத்தத்தின்படி ஒரு நபர் அமெரிக்க அதிபராக இரண்டு முறை தான் பதவி வகிக்க முடியும். 1933 ஆம் ஆண்டிலிருந்து 1945 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து நான்கு முறையாக பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட் அமெரிக்க அதிபராக தேர்வானார். இதனை அடுத்து தான் இப்படி ஒரு சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்ட திருத்தம் எந்த நபரும் அமெரிக்க அதிபர் பதவிக்கு இரண்டு முறைகளுக்கு மேல் தேர்ந்தெடுக்கப்பட முடியாது என தெரிவிக்கிறது.
டிரம்பை பொறுத்தவரை இந்த சட்ட திருத்தத்தில் மாற்றம் கொண்டு வந்து மூன்றாவது முறையாக அதிபராக பதவி வகிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அதாவது இரண்டு முறைக்கு மேல் ஒரு நபர் அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட முடியாது என்பதை இவர் மாற்றி அமைக்கலாம். ஆனால் இதற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தில் குடியரசு கட்சியினருக்கு மெஜாரிட்டி இருக்க வேண்டும்.
டிரம்ப் இவ்வாறு சட்டம் கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி சட்டமாக்கலாம். ஆனால் அது அத்தனை எளிதான ஒரு காரியம் அல்ல. இல்லையென்றால் அமெரிக்காவில் இருக்கும் மாநிலங்களின் பெரும்பாலான மாநிலங்கள் இப்படி ஒரு சட்டம் கொண்டு வருவதற்கு ஒப்புதல் தெரிவிக்க வேண்டும். இவை இரண்டும் சட்டரீதியான வழிமுறைகள் என சொல்லப்படுகிறது.
டிரம்பை பொறுத்தவரை முதலில் நான்காண்டுகள் அதிபர் பதவி வகித்தார் அடுத்த தேர்தலில் தோற்றுப் போனார் மீண்டும் நான்கு ஆண்டுகள் கழித்து தான் அந்த பதவிக்கு வந்திருக்கிறார். தொடர்ந்து இரண்டு முறை அவர் இந்த பதவியை வகிக்கவில்லை. எனவே இதை ஒரு காரணமாக கொண்டு சட்ட திருத்தத்தில் மாற்றம் கொண்டு வந்து அவர் மூன்றாவது முறையாக அதிபர் பதவிக்கு போட்டியிடுவதற்கு ஒரு வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
மேலும் இந்த சட்ட திருத்தத்தில் தொடர்ந்து இரண்டு முறை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட முடியாது என்ற வார்த்தை தான் இருக்கிறது தவிர ஏற்கனவே இருக்கும் பதவியில் இருக்கும் ஒரு நபர் பதவி விலகி விட்டால் அந்த பொறுப்புக்கு இவர் வர முடியாது என்ற வார்த்தை இல்லை எனவே இதை பயன்படுத்தி மூன்றாவது முறையாக அதிபராக திட்டமிடலாம் என சொல்லப்படுகிறது.
டொனால்ட் டிரம்ப் பண பலம் கொண்டவர், அதுமட்டுமில்லாமல் அமெரிக்கா தொழிலதிபர்களின் பெரும்பான்மை ஆதரவு அவருக்கு இருக்கிறது. ஆனால் நான்கு ஆண்டுகள் முடியும் போது இது எப்படி இருக்கும் என்பதை நம்மால் கணிக்க முடியாது. ஆனாலும் டிரம்ப் மூன்றாவது முறையாக அதிபராவதற்கான முயற்சிகளை கட்டாயம் எடுப்பார் என்பதை மறுப்பதற்கு இல்லை. இதற்கு சொந்த கட்சியினரின் ஆதரவும் மிக அவசியம். எனவே நான்கு ஆண்டுகள் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி வகிக்கும் காலம் நமக்கு அடுத்தடுத்த அதிரடி அப்டேட்கள் வந்து கொண்டிருக்கும்.
More From GoodReturns

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!



Click it and Unblock the Notifications