இந்திய மக்கள் மட்டும் அல்லாமல் உலகமே இன்று மோடி - டிரம்ப் சந்திப்பைத் தான் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டு இருக்கிறது. அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீதான டிரம்ப் அரசின் நிலைப்பாட்டை இந்த ஒரு சந்திப்பு விளக்கும் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதற்காகப் பிரதமர் மோடி பாரீஸ் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று அமெரிக்கா சென்ற நிலையில் இன்று டிரமப்-ஐ சந்திக்க உள்ளார்.
நரேந்திர மோடியை டொனால்டு டிரம்ப் சந்திப்புக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒரு மர்மமான சமூக வலைத்தள பதிவை வெளியிட்டு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். குறிப்பாக இந்திய மக்களும், இந்திய முதலீட்டாளர்களும் இந்த பதிவால் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

டொனால்டு டிரம்ப் தனது பதிவில், " அதிபராக பொறுப்பேற்று மூன்று சிறந்த வாரங்கள் முடிந்துள்ளது, எப்போதும் இல்லாத சிறந்த நாள், முக்கிய நாள் இன்று: ரெசிப்பரோக்கல் வரிகள்!!! அமெரிக்காவை மீண்டும் சிறப்பான நாடாக மாற்றப்போகிறோம் !!!" என்று பதிவிட்டுள்ளார்.
ரெசிப்பரோக்கல் வரிகளை அமல்படுத்தும் டிரம்ப் அரசின் திட்டங்களைத் தான் இந்த பதிவின் மூலம் விவரித்துள்ளார். அமெரிக்கா மீது எந்தெந்த நாடுகள் எல்லாம் அதிகப்படியான வரியை விதித்துள்ளதோ அந்த நாடுகள் மீது அதே அளவுக்கான வரியை விதிக்கும் முறை தான் இந்த Reciprocal tariffs.
உதாரணமாக, அமெரிக்க கார்களுக்கு இந்தியா 25% வரி விதித்தால், அமெரிக்கா இந்திய வாகனங்களுக்கு அதேபோன்ற வரியை விதிக்கும், இதை தான் Reciprocal tariffs அல்லது பதிலடி வரிகள் என்று அழைக்கப்படுகிறது. இதை தடுப்பதற்காக தான் இன்று பிரதமர் மோடி பல்வேறு திட்டங்கள், சலுகைகள் உடன் டிரம்ப் உடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். ஆனால் காலையிலேயே டிரம்ப் இத்தகைய டிவீட் செய்துள்ளது பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது.
டிரம்ப் அரசு திட்டமிட்டபடி தனது Reciprocal tariffs முறை இன்று அமல்படுத்தினால் இந்திய வர்த்தக சந்தை மட்டும் அல்லாமல், உலகளாவிய வர்த்தகத்தையும் இது சீர்குலைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அமெரிக்காவின் நெருங்கிய வர்த்தக கூட்டாளி நாடுகள் அனைத்தும் அதிகளவில் பாதிக்கப்படும்.
Reciprocal tariffs கொள்கை தொடர்பான விரிவான உத்தரவு புதன் அல்லது வியாழக்கிழமைக்குள் வெளியிடப்படும் என்று டொனால்டு டிரம்ப் ஏற்கனவே கூறியிருந்த நிலையில், இந்த அறிவிப்பு மோடி உடனான சந்திப்புக்குப் பின்பு நடக்குமா..? அல்லது அதற்கு முன்பே நடக்குமா..? என்பது தான் தற்போதைய பில்லியன் டாலர் கேள்வி.
மெக்சிகோ மற்றும் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க அரசாங்கம் 25 சதவீத வரிகளையும், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்குக் கூடுதலாக 10 சதவீத வரிகளையும் விதித்துள்ள வேளையில், இந்த Reciprocal tariffs கொள்கை அமலாக்கம் செய்யப்பட்டால் இந்த நாடுகள் கூடுதல் வரியை விதிக்கும் என தெரிகிறது.
More From GoodReturns

ஈரான் மீது பங்கர்-பஸ்டர் குண்டு தாக்குதல்.. டிரம்ப் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு.. அதுவும் இந்த இடத்தில்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

ஈரானுக்கு கடைசி வார்னிங்.. எண்ணெய் கிணறு தான் அடுத்த டார்கெட்.. டிரம்ப் பதிவால் ஷாக்..!!

ஈரான் கற்காலத்திற்கு செல்லும்; அமெரிக்காவின் அடுத்தகட்ட போர் திட்டங்களை வெளியிட்ட டிரம்ப்!!

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

டிரம்ப் ஊதும் மகுடிக்கு கெவின் வார்ஷ் ஆடுவாரா..? தலைதூக்கும் ரெசிஷன் அச்சம்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்வது என்ன?

குஜராத்-க்கு அடித்தது யோகம்.. செமிகண்டக்டர் சிற் உற்பத்தியில் அடியெடுத்து வைக்கும் கேன்ஸ் டெக்னாலஜி..!!

சீன CCTV கேமராக்களுக்கு மொத்தமாக செக்.. மத்திய அரசின் புதிய முடிவு..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!



Click it and Unblock the Notifications