அதிபராகும் டொனால்டு டிரம்ப்.. தமிழ்நாட்டுக்கு ஜாக்பாட்.. எப்படி..?!

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் ஜனவரி மாதம் பதவியேற்க உள்ள நிலையில் ஒட்டுமொத்த முதலீட்டுச் சந்தையும், உற்பத்தி சந்தையும் டிரம்ப்-ன் செயல்பாடுகளுக்கு இணங்க தனது திட்டங்களை மாற்றி வருகிறது. டொனால்டு டிரம்ப் அதிபராகும் பட்சத்தில் சில முக்கியமான விஷயங்கள் கட்டாயம் நடக்கும் என்பது திட்டவட்டமாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய அளவிலான ஜாக்பாட் அடிக்கப்போகிறது என்பது தான் முக்கியமான விஷயமாக உள்ளது.

ஜோ பைடன் ஆட்சிக் காலத்தில் சீனாவுக்கு எதிரான அமெரிக்க அரசு விதித்திருக்கும் கட்டுப்பாடுகளும், நெருக்கடிகளுக்கும் அதிகமான கட்டுப்பாடுகளை டொனால்டு டிரம்ப் விதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தான் தமிழ்நாட்டுக்கு ஜாக்பாட் ஆக மாறப்போகிறது என கணிக்கப்பட்டு உள்ளது.

அதிபராகும் டொனால்டு டிரம்ப்.. தமிழ்நாட்டுக்கு ஜாக்பாட்.. எப்படி..?!

டொனால்டு டிரம்ப் அதிபரான பின்பு சீனா இறக்குமதிகள் மீது அதிகப்படியான வரிகளை விதித்தால், அந்நாட்டில் இருந்து தயாரிக்கப்படும் ஆப்பிள் பொருட்கள் மொத்தமாக நிறுத்தப்பட்டு இந்தியாவில் இருந்து அதிகமாக இறக்குமதி செய்யப்படும்.

இதன் மூலம் தற்போது இந்தியாவில் இருந்து உற்பத்தியாகி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் 15-16 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆப்பிள் பொருட்கள் அளவு இரட்டிரப்பாகி 30 பில்லியன் டாலராக உயரும் என கணிக்கப்பட்டு உள்ளது.

டொனால்டு டிரம்ப் ஏற்கனவே சீனா மீது 60 முதல் 100 சதவீதம் வரையில் சீனா பொருட்கள் மீது விரி விதிப்பதாக அறிவித்துள்ளார். இதை பல முறை தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது அறிவித்தார், இதன் மூலம் டிரம்ப்-ன் கடந்த ஆட்சியில் அமெரிக்கா - சீனா மத்தியிலான வர்த்தக போர் மீண்டும் வெடிக்கும் அபாயம் உருவாகியுள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் ஆப்பிள் பொருட்களில் சுமார் 60-70 சதவீதம் வரையிலான பொருட்கள் தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் வேளையில், டொனால்டு டிரம்ப் எபக்ட் மூலம் தமிழ்நாட்டில் அடுத்தடுத்து ஆப்பிள் சப்ளையர்களான பாக்ஸ்கான், பெகாடிரான், டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆகியவை தனது உற்பத்தி தளத்தைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்யும் அதிகளவிலான முதலீட்டைச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் தமிழ்நாட்டில் ஆப்பிள் பொருட்கள் தயாரிப்பில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டு இருக்கும் அனைத்து நிறுவனங்களிலும் அதிகப்படியான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இதேவேளையில் டிரம்ப் வரி விதிப்பால் சீனாவில் இருந்து கூடுதலான நிறுவனங்கள் இந்தியாவுக்கு இடம்மாறும் சூழ்நிலை விரைவில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கணிக்கப்பட்ட படி இந்தியாவில் ஆப்பிள் பொருட்களின் தயாரிப்பின் மதிப்பு 30 பில்லியன் டாலராக உயர்ந்தால் புதிதாக 2,00,000 வேலைவாய்ப்புகள் உருவாகி, உலகளாவிய ஆப்பிள் உற்பத்தியில் இந்தியாவின் பங்கீடு 26 சதவீதமாக உயர உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+