இந்தியாவுக்கு எப்படி ஐபிஎல் போட்டியோ அதேபோல் அமெரிக்காவுக்கு NFL, இந்த லீக்-ன் இறுதிப்போட்டியை தான் சூப்பர் பவுல் என அழைக்கப்படுகிறது. இந்த போட்டியை பில்லியன் கணக்கானோர் தொலைக்காட்சி மூலமாகவும், நேரடியாகவும் கண்டு ரசிக்கின்றனர். சூப்பர் பவுல் போட்டி நடைபெறும் நாளில் அமெரிக்காவில் பல பகுதிகளில் பொது விடுமுறை அளிக்கப்படும் அளவுக்கு மிகவும் முக்கியமான விளையாட்டுப் போட்டி இது.
விளையாட்டு துறையில் அதிகம் ஆர்வம் கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 1980களில் NFL அணியை வாங்குவதற்கான முயற்சிகளில் இறங்கி தோல்வி அடைந்தவர். இந்த நிலையில் சூப்பர் பவுல் போட்டியை காண ஞாயிற்றுக்கிழமை மைதானத்திற்கே நேரடியாக வந்தார்.

நியூ ஆர்லியன்ஸில் நட்சத்திரங்கள் படை சூழ நடைபெற்ற இந்த சூப்பர் பவுல் போட்டியில் ஈகிள்ஸ் மற்றும் சீஃப் அணிகளுக்கு மத்தியில் நடைபெற்றது. இதில் Philadelphia Eagles அணி Kansas City Chiefs அணியை 40-22 கணக்கில் மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது.
பல ஆண்டுகளாக NFL போட்டியை கடுமையாக விமர்சித்து வந்த டொனால்டு டிரம்ப், நியூ ஆர்லியன்ஸ் நகரின் சீசர்ஸ் சூப்பர்டோம் மைதானத்தில் சுமார் 74,000 ரசிகர்கள் உடன் அமர்ந்து சூப்பர் பவுலில் கலந்துகொண்டு போட்டியை ரசித்தார்கள். இது மட்டும் அல்லாமல் சூப்பர் பவுல் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட முதல் அமெரிக்க அதிபர் என்ற சாதனையையும் படைத்துள்ளார் டொனால்டு டிரம்ப்.
டொனால்டு டிரம்ப் உடன் இந்த சூப்பர் பவுல் நிகழ்ச்சிக்கு டொனால்ட் டிரம்ப், டெய்லர் ஷிஃப்ட், பியான்சே, எலான் மஸ்க், பிராட்லி கூப்பர், லியோனல் மெஸ்ஸி, மைல்ஸ் டெல்லர் மற்றும் பீட் டேவிட்சன், பால் ரூட், பெர்ட் க்ரீஷர்,
கெவின் காஸ்ட்னர், டாம் பிராடி என பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
அமெரிக்க அதிபர், நியூ ஆர்லியன்ஸ் நகரில் நடைபெற்ற NFL சூப்பர் பவுல் போட்டியை காண விமானம் மூலம் சென்ற போது செய்தியாளர்களிடம் பேசினார். இப்போது அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமினியம் மீது 25 சதவீதம் புதிய வரிகள் திங்கட்கிழமை முதல் அமலுக்கு வரும் என அறிவித்தார். அமெரிக்க நேரப்படி திங்கட்கிழமை இதற்கான அரசு ஆணை வெளியில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications