இந்தியாவில் பொதுத்தேர்தல் அதிரடிகள் முடிந்திருக்கும் வேளையில், அமெரிக்காவில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. ஒருபக்கம் ஜோ பைடன், மறுபுறம் டொனால்ட் டிரம்ப் என அமெரிக்க பொதுத் தேர்தல் குறித்த அதிரடிகள் பேச்சுக்கள் அனல் பறக்கிறது.
இந்த நிலையில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்திய நேர்காணலில் பேசியது ஒட்டுமொத்த அமெரிக்க மக்களையும், அந்நாட்டில் இருக்கும் வெளிநாட்டவர்கள், குறிப்பாக இந்தியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. டொனால்ட் டிரம்ப் அப்படி என்ன பேசினார்..?

டொனால்ட் டிரம்ப் "ஆல்-இன்" என்று அழைக்கப்படும் வென்சர் கேப்பிடல் முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்நுட்ப முதலீட்டாளர்களுடன் ஒரு போட்காஸ்டில் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அமெரிக்க கல்லூரிகளில் பட்டம் பெறும் வெளிநாட்டு மாணவர்களுக்கு ஆட்டோமேட்டிக் முறையில் கிரீன் கார்டுகளை வழங்கும் திட்டத்தைக் குறித்து அறிவித்தார். இது டொனால்டு டிரம்ப்-ன் குடியேற்ற நிலைப்பாட்டில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்பட்டு உள்ளதைக் காட்டுகிறது.
டொனால்டு டிரம்ப் கடந்த ஆட்சியில் Buy American and Hire American என்ற கொள்கையின் கீழ் வெளிநாட்டு ஊழியர்களைப் பாதிக்கும் வகையில் தொடர்ந்து நடவடிக்கை எடுத்தது மட்டும் அல்லாமல் அமெரிக்க மக்கள் மத்தியில் வெளிநாட்டவர்களாலேயே அமெரிக்க பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளதாகவும் பேசியுள்ளார். ஆனால் தற்போது டொனால்டு டிரம்ப் தனது நிலைப்பாட்டில் இருந்து முற்றிலும் மாறியுள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
டொனால்டு டிரம்ப் இன்த பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் "நான் என்ன செய்ய விரும்புகிறேன், நான் என்ன செய்வேன் என்றால், நீங்கள் ஒரு கல்லூரியில் பட்டம் பெறுகிறீர்கள் என்றால் உங்கள் டிகிரி-யின் ஒரு பகுதியாக நீங்கள் ஆட்டோமேட்டிங் முறையில் அமெரிக்காவில் நிரந்தரமாகக் குடியேற கிரீன் கார்டைப் பெற வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அதில் ஜூனியர் கல்லூரிகளும் அடங்கும், பட்டதாரிகளான எவரும் ஒரு கல்லூரிக்கு இரண்டு வருடங்கள் அல்லது நான்கு வருடங்கள் செல்கிறார்கள் எனில் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்பட வேண்டும்" என்றார். இது மட்டும் அல்லாமல் டிரம்ப் மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் முதல் நாளில் இதைத் அமலாக்கம் செய்வதாக உறுதியளித்தார்.
டிரம்பின் 2024 அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் முக்கியமான விஷயமாக குடியேற்ற விதிகள் உள்ளது. வெளிநாட்டு பட்டதாரிகளுக்கு கிரீன் கார்டுகளை வழங்குவது அமெரிக்க குடியேற்ற முறையின் குறிப்பிடத்தக்க விரிவாக்கத்தை அளிக்கும். இது புலம்பெயர்ந்த மக்கள் மீதான அவரது விமர்சனத்திற்கு முற்றிலும் மாறுபட்டு உள்ளது வியப்பு அளிப்பதைத் தொடர்ந்து பலருக்கும் ஷாக் கொடுக்கிறது.
டிரம்ப் சொல்வதை மட்டும் செய்துவிட்டால் இதில் அதிகம் பலன் அடைவது இந்தியாவும், இந்தியர்களும் தான். ஏற்கனவே அமெரிக்காவில் அதிகப்படியான இந்தியர்கள் இருக்கின்றனர். அதேபோல் அமெரிக்க கல்லூரிகளில் இருக்கும் அதிக வெளிநாட்டவர்கள் பட்டியலில் இந்தியர்கள் முதலிடம்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications