அமெரிக்க அதிபராக 2வது முறையாகப் பதவியேற்க உள்ள டொனால்டு டிரம்ப் அந்நாட்டு பொருளாதாரத்தையும், வர்த்தக சந்தையையும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் மிகப்பெரிய இலக்குடன் உள்ளார்.
இந்த நிலையில் நாளை நடக்கும் பதவியேற்பு விழாவிற்கு உலகம் முழுவதில் இருந்தும் பெரும் தலைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ள நிலையில் இந்தியாவில் இருந்தும் பலர் டிரம்ப் பதவியேற்று விழாவில் கலந்துகொள்ள அமெரிக்காவுக்கு பறந்துள்ளனர்.

நாளை அதிபராகப் பதவியேற்க உள்ள டொனால்டு டிரம்ப்-ஐ வாஷிங்டன் நகரில் பதவியேற்பு விழாவுக்கு முந்தைய விருந்தில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் ரிலையன்ஸ் அறக்கட்டளை தலைவரும், முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி ஆகியோரை சந்தித்தார்.
இவர்களின் சந்திப்பில் எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதேவேளையில் ஜனவரி 20-ம் தேதி நடக்கும் டிரம்ப் பதவியேற்பு விழாவில் முகேஷ் அம்பானியும், நீதா அம்பானியும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டொனால்டு டிரம்ப் நடத்திய இந்த சிறப்பு விருந்து நிகழ்ச்சியில் முகேஷ் அம்பானி மட்டும் அல்லாமல் M3M டெவலப்பர்களின் நிர்வாக இயக்குனர் பங்கஜ் பன்சால் மற்றும் டிரிபெகா டெவலப்பர்ஸ் நிறுவனர் கல்பேஷ் மேத்தா ஆகியோரும் கலந்துகொண்டு உள்ளனர்.

அம்பானிகள் வந்த இடத்தில் இந்த 3 இந்திய ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் தலைவர்கள் இருக்கிறார்கள்..? யார் இவர்கள்..? இவர்களுக்கும் டிரம்ப்-க்கும் என்ன தொடர்பு..?
Video credits: ANI
டிரம்ப் டவர்ஸின் உரிமம் பெற்ற இந்திய தலைவர் தான் கல்பேஷ் மேத்தா, டிரம்ப் பிராண்டை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்துவதில் இவர் முக்கிய பங்கு வகித்துள்ளார். இதேபோல் பங்கஜ் பன்சாலின் M3M டெவலப்பர்ஸ் இந்தியாவில் டிரம்ப் டவர்ஸின் வளர்ச்சியில் முக்கிய பணியாற்றுபவர் ஆவார்.


Click it and Unblock the Notifications