நாங்கள் தான் வல்லரசு என தனது காலரை தூக்கிவிட்டு கொண்டு தெம்பாக சுற்றிய அமெரிக்கா தான், இன்று கொரோனாவின் பிடியிலும் அதிகம் சிக்கிக் கொண்டுள்ளது.
இதுவரை அமெரிக்காவில் 6,13,886 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 26,047 பேர் பலியாகியுள்ளனர். இவர்கள் உண்மையில் வல்லரசு தான். ஏனெனில் அனைத்திலும் இவர்கள் தானே முதன்மை வகிக்கிறார்கள்.
இது மட்டும் அல்ல, சரிந்து வரும் பொருளாதாரத்திலும் அமெரிக்கா தான் முதலாக உள்ளது.
அமெரிக்கா பொருளாதார குழுவில் இந்தியர்கள்
இந்த நிலையில் அமெரிக்கா பொருளாதார மீட்டெடுப்புக் குழுவில் பல தொழில் துறையினைரையும் (Great American Economic Revival Industry Groups) சேர்த்துள்ளராம் அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப். அதில் பல இந்தியர்களும் இடம் பெற்றுள்ளனராம். குறிப்பாக கூகுளின் சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்டின் சத்யா நாதெள்ளா உள்பட ஆறு இந்திய அமெரிக்கா கார்ப்பரேட் தலைவர்களையும் இணைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இவர்கள் தான் புத்திசாலிகள்
அது மட்டும் அல்ல, அமெரிக்காவினைச் சேர்ந்த 200 முன்னணி தொழில் துறை தலைவர்களை டொனால்டு டிரம்ப் சேர்த்துள்ளாராம். இவர்கள் பல தரப்பட்ட வர்த்தகத் துறைகளை சார்ந்தவர்கள் ஆவர். மேலும் இவர்கள் புத்தி சாலியானவர்கள். மிக பிரகாசமானவர்கள், இவர்கள் தான் நமக்கு புதிய யோசனைகளை வழங்குவார்கள் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
இவர்களும் குழுவில் உள்ளனர்
ஐபிஎம்-மின் அர்விந்த் கிருஷ்ணாவும் இதில் இடம் பெற்றுள்ளதாகவும், மைக்ரான் நிறுவனத்தின் சஞ்சய் மெஹ்ரோத்ரா உள்ளிட்ட இந்தியர்களும் இடம் பெற்றுள்ளனர். ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக், ஆராக்கிள் நிறுவனத்தின் லாரி எலிசன், பேஸ்புக்கின் மார்க் ஜூக்கர்பெர்க் ஆகியோர் இந்த தொழில் நுட்ப ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
நிதித் துறையினை சார்ந்தவர்கள்
நிதிச்சேவையில் மாஸ்டர் கார்டிலிருந்து அஜய் பங்கா, வீசாவிலிருந்து அல் கெல்லி, உள்ளிட்டோர் டிரம்ப்பின் ஆலோசனைக் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர். பிளாக்ஸ்டோனின் ஸ்டீபன் ஸ்வார்ஸ்மேன், ஃபிடிலிட்டி இன்வெஸ்ட்மென்டின் அபிகெய்ல் ஜான்சன் மற்றும் இன்ட்யூட்டின் சாசன் குடார்ஸி என பலரும் இந்த நிதி ஆலோசனை குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
எந்தெந்த துறையினை சேர்ந்தவர்கள் இடம்பெறுவார்கள்
இதோடு வேளாண்மை, பேங்கிங், கட்டுமானம், தொழிலாளர் துறை, பாதுகாப்பு, எரிசக்தி, நிதிச்சேவைகள், உணவு மற்றும் பானங்கள், ஆரோக்கியம், ஹோட்டல் மற்றும் விருந்தோம்பல் துறை, உற்பத்தி துறை, ரியல் எஸ்டேட், சில்லறை விற்பனை, தொழில்நுட்பம், தொலைத் தொடர்பு துறை, போக்குவரத்து துறை, விளையாட்டு துறை, மற்றும் பல முக்கிய தலைவர்கள் முதலியோரை பொருளாதார மீட்டெடுப்புகாக ஆலோசனை வழங்க இந்தக் குழுவில் இணைக்கப்பட்டுள்ளனராம்.


Click it and Unblock the Notifications