டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு மூலம் அமெரிக்க அரசு மிகப்பெரிய மாற்றத்தை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது, டிரம்ப் மேக் அமெரிக்கா கிரேட் எகெயின் என்ற ஒன்றை கொள்கையின் அடிப்படையில் அடுத்த 4 வருட ஆட்சியைச் செய்ய உள்ளார். இதற்காக ஆட்சியிலும், அதிகாரத்திலும் யாரும் எதிர்பார்க்காத அதிகம் விமர்சனம் எதிர்கொண்ட நபர்களைத் தேடி தேடி நியமித்து வருகிறார்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்கு வரும் முதல் 100 நாட்களில் கொள்கை அளவிலும், மானியங்கள் அடிப்படையிலும் பெரிய அளவிலான சீர்திருத்தத்தைக் கொண்டு வர முடிவு செய்துள்ளது டிரம்ப் அரசு. இதற்காக டிரம்ப், ஆட்சி மாற்றத்திற்கான பணிகளைச் செய்து வரும் வேளையில், தான் ஆட்சி வர முக்கிய காரணமாக இருந்த எலான் மஸ்க் அதிர்ச்சி அளிக்கும் வகையில் முக்கியமான கொள்கை மாற்றத்தை அறிவிக்கத் திட்டமிட்டு உள்ளார் டிரம்ப்.

அமெரிக்காவில் எலக்ட்ரிக் கார் வாங்குவோருக்கு அளிக்கப்படும் 7500 டாலர் மதிப்பிலான டாக்ஸ் கிரெடிட் சலுகையை மொத்தமாக ரத்து செய்ய முடிவு செய்து, இதற்கான ஆலோசனைகளை நடத்தி வருகிறார். இந்தியாவில் எப்படி எலக்ட்ரிக் கார் வாங்குவோருக்கு வரி ரத்து, பதிவு கட்டணம் ரத்து போன்றவை அளிக்கப்படுகிறதோ அதேபோல் அமெரிக்காவில் எலக்ட்ரிக் வாங்குவோருக்கு 7500 டலார் மதிப்பிலான வரி சலுகை கொடுத்து வருகிறது.
இந்த ஒரு விஷயம் தான் அமெரிக்காவின் எலக்ட்ரிக் வாகன விற்பனை துறையை இன்று வரையில் உயிர்ப்புடன் வைத்துள்ளது, இது ரத்து செய்தால் அமெரிக்காவில் நடத்து வரும் ICE டூ EV மாற்றத்தில் பெரிய அளவிலான தடை ஏற்படும். இது அமெரிக்காவில் இருக்கும் EV நிறுவனங்களைக் கடுமையாகப் பாதிக்கும். ஏற்கனவே அமெரிக்காவில் EV சந்தை மந்தநிலையில் இருக்கும் வேளையில் இத்தகைய அறிவிப்பு டெஸ்லா, போர்டு, ஜெனரல் மோட்டர்ஸ் போன்றவற்றிற்கு பெரும் பாதிப்பை ஏற்படும்.
இதில் அதிர்ச்சி அளிக்கும் விஷயம் என்னவென்றால் இந்த வரி மானியத்தை ரத்து செய்வது மூலம் எலான் மஸ்க் தலைமை வகிக்கும் டெஸ்லா நிறுவனத்தின் வர்த்தகம் பாதிக்கும் என ஏற்கனவே எலான் மஸ்க் அறிவித்த போதும், டிரம்ப் இதை நடைமுறைப்படுத்துவதில் தீவிரமாக உள்ளார்.
டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்ட நிலையில் டெஸ்லா பங்குகள் 6 சதவீதம் வரையில் சரிந்தது, இதேபோல் RIVIAN பங்குகள் 14 சதவீதமும், LUCID 5 சதவீதமும் சரிந்தது. இன்று அமெரிக்க வர்த்தகத்தில் டெஸ்லா பங்குகள் 3.27 சதவீதம் அதிகரித்து 321.37 டாலராக உள்ளது.


Click it and Unblock the Notifications