அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான 12 நாள் போரை முடிவுக்கு கொண்டுவந்ததற்காக 2025 நோபல் அமைதி பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் பட்டி கார்ட்டர் (Buddy Carter), டிரம்பின் ஆட்சியை "அசாதாரண மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது" எனப் புகழ்ந்து, இந்த பரிந்துரையை முன்வைத்துள்ளார்.

இஸ்ரேல்-ஈரான் இடையேயான போரில் அமெரிக்கா, ஈரானின் மூன்று முக்கிய அணு தளங்களை வான்வழி தாக்குதல் மூலம் அழித்தது, இதற்கு பதிலடியாக ஈரான் கத்தாரில் உள்ள அமெரிக்க விமான தளத்தை ஏவுகணைகளால் தாக்கியது, ஆனால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இந்த பதற்றத்தைத் தணிக்க, டிரம்ப் திங்கட்கிழமை இரவு முழுமையான போர் நிறுத்தத்தை அறிவித்தார், இது செவ்வாய்க்கிழமை அதிகாலை அமலுக்கு வந்தது. இதன் மூலம் இரு நாடுகளுக்கு மத்தியிலான போர் முடிவுக்கு வந்தது.
நோபல் பரிசு பரிந்துரை:
இந்த நிலையில் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் பட்டி கார்ட்டர், நோபல் அமைதி பரிசு குழுவுக்கு எழுதிய கடிதத்தில், "டிரம்பின் தலைமை, இஸ்ரேல்-ஈரான் மோதலை முடிவுக்கு கொண்டுவந்தது மட்டுமல்லாமல், உலகின் மிகப்பெரிய பயங்கரவாத ஆதரவு நாடு எனக் கருதப்படும் ஈரான், அணு ஆயுதங்களை பெறுவதை தடுத்ததுள்ளது" என்று குறிப்பிட்டார்.
இந்த ஒரு கடிதம், 2025 நோபல் அமைதி பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட 338 வேட்பாளர்களில் டிரம்பை ஒரு முக்கிய வேட்பாளராக முன்னிறுத்தியுள்ளது. இதற்கு முன்பு, டிரம்ப் 2024 தேர்தல் வெற்றி பெற்றது மூலம் உலகளாவிய தாக்கம் ஏற்படுத்திய காரணத்திற்காக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் டாரல் இஸ்ஸா டிரம்பை நோபல் பரிசுக்கு பரிந்துரைத்திருந்தார்.


Click it and Unblock the Notifications