வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் அரசு பிறப்புரிமை குடியுரிமை வழங்குவதில் கட்டுப்பாடுகளை விதிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்க அதிபராக தேர்வாகி இருக்கக்கூடிய டொனால்ட் டிரம்ப் ஜனவரி மாதம் பதவியேற்க இருக்கிறார்.
இவரது அரசு பொறுப்பேற்றவுடன் எடுக்க இருக்கும் நடவடிக்கைகளில் முக்கியமானது பிறப்பால் கிடைக்கும் குடியுரிமைக்கு கட்டுப்பாடு விதிப்பது என தகவல் வெளியாகியுள்ளது. தன்னுடைய தேர்தல் பிரச்சார பக்கத்தில் வெளியிட்டுள்ள திட்டத்தின்படி அமெரிக்காவில் பிறப்பால் ஒருவருக்கு வழங்கப்படும் குடியுரிமை நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிபராக பதவியேற்ற முதல் நாளிலேயே இது தொடர்பான ஆணையில் தான் கையெழுத்திட போவதாக ட்ரம்ப் தன்னுடைய பிரச்சாரத் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். இதன்படி டிரம்ப் தன்னுடைய பிரச்சாரத்தில் கூறியது சட்டவிரோதமாக நாட்டில் வசிப்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் அமெரிக்காவில் பிறந்தவர்கள் என்பதாலேயே பிறப்புரிமைக்கான குடியுரிமையை பெறுகின்றனர்.
அதனை தன்னுடைய அரசு நீக்கப்போகிறது எனக் கூறியுள்ளார். ஆனால் இது மறைமுகமாக அங்கே வசிக்கும் பல்வேறு இந்தியர்களின் குழந்தைகளையும் பாதிக்கும் என சொல்லப்படுகிறது.
குழந்தைகளுக்கு பிறப்பால் கிடைக்கும் குடியுரிமையில் மாற்றம் கொண்டு வரும் வகையில் அரசியலமைப்பிலேயே மாற்றத்தை கொண்டு வரப் போவதாக தெரிவித்துள்ளார். இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்படலாம் என சொல்லப்படுகிறது.
ஆனால் அங்கே வசிக்கும் அமெரிக்கா இந்தியர்களின் குழந்தைகளுக்கு இதனால் குடியுரிமை பறிபோக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. ஏதேனும் ஒரு பெற்றோர் அமெரிக்கராகவோ அல்லது நிரந்தர குடியுரிமை கொண்டவராகவோ இல்லை என்றால் கூட அங்கே பிறக்கும் அவர்களின் குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை கிடைக்காது என சொல்லப்படுகிறது.
2022 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க மக்கள் தொகை கணக்கு படி அமெரிக்காவில் 4.8 மில்லியன் இந்தியா அமெரிக்கர்கள் வசிக்கின்றனர். இவர்களில் 34 சதவீதம் பேர் அதாவது 1.6 மில்லியன் பேர் அமெரிக்காவிலேயே பிறந்தவர்கள்.
அமெரிக்காவில் சென்று எச்1பி விசாவில் பணிபுரியும் இந்தியர்களில் பலர் அங்கே நிரந்தர குடியுரிமை பெறுவதற்காக க்ரீன் காடுகளுக்காக விண்ணப்பம் செய்து காத்திருக்கின்றனர்.
தற்போது அமெரிக்க அரசு ஒரு ஆண்டிற்கு குறிப்பிட்ட நாட்டை சேர்ந்தவர்களுக்கு இத்தனை சதவீதம் வரை தான் கிரீன் கார்டு வழங்க வேண்டும் என ஒரு வரம்பு நிர்ணயம் செய்துள்ளது. ஆனால் அதையும் தாண்டி இந்தியர்களின் விண்ணப்ப எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமெரிக்க குடியுரிமை விண்ணப்பங்கள் தொடர்பாக வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் வேலை அடிப்படையிலான கிரீன் கார்டு விண்ணப்பங்கள் மார்ச் 2023 நிலவரத்தின்படி இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட விண்ணப்பங்கள் 10 லட்சத்தை கடந்துள்ளன.
எனவே கிரீன் கார்டு வேண்டி விண்ணப்பம் செய்திருக்கும் இந்தியர்கள் அந்த கிரீன் கார்டை பெறுவதற்கே பல ஆண்டுகள் ஆகும் என சொல்லப்படுகிறது. சில நேரங்களில் 50 ஆண்டுகள் கூட ஆகலாம் என கூறப்படுகிறது. எனவே இந்த தம்பதிகள் கிரீன் கார்டு விண்ணப்பம் செய்து காத்திருந்து அங்கே குழந்தை பெற்றுக் கொள்ளும் போது அவர்களின் குழந்தைக்கு குடியுரிமை கிடைக்காது.
அப்படியே இந்த குடும்பம் கிரீன் கார்டு வேண்டி விண்ணப்பம் செய்தாலும் தற்போது இருக்கும் விண்ணப்பங்களின் எண்ணிக்கையை பார்க்கும் போது அந்த குழந்தைகளுக்கு 21 வயது ஆவதற்கு முன்பு கிரீன் கார்டு கிடைப்பதற்கான வாய்ப்பு இல்லை என சொல்லப்படுகிறது.
எனவே 21 வயது ஆன பிறகு அந்த குழந்தைகள் நிரந்தர குடியுரிமையும் இல்லாமல் கிரீன் கார்டும் இல்லாமல் சர்வதேச மாணவர்களுக்கான விசாவை பெற்றால் மட்டுமே அமெரிக்காவில் இருக்க முடியும் இல்லை எனில் அவர்களின் சொந்த நாட்டிற்கு திரும்ப அனுப்பப்படுவர் என அங்கே செயல்படக்கூடிய சட்ட வல்லுனர்கள் கூறுகின்றனர்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications