வாஷிங்டனில் உள்ள செயின்ட் ஜான்ஸ் தேவாலயத்தில் டொனால்ட் டிரம்ப் பதவியேற்பதற்கு முன்னதாக எடுக்கப்பட்ட புகைப்படம் சுடசுட வெளியாகியுள்ளது. டிரம்ப் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள உலகின் முன்னணி தொழில்நுட்பத் தலைவர்கள் ஒரே மேடையில் ஒன்று கூடி இருக்கும் புகைப்படம் மக்களைக் கவர்ந்துள்ளது.
மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, ஆப்பிள் சிஇஓ டிம் குக் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். முகேஷ் அம்பானி 19ஆம் தேதி டிரம்ப் கொடுத்த சிறப்பு டின்னரிலும் கலந்துகொண்டார்.

டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு விழாவுக்கு அமெரிக்காவின் முன்னணி கார்ப்பரேட் நிறுவன தலைவர்கள், அரசியல் தலைவர் மட்டும் அல்லாமல் உலகளவிலிருந்து பலர் அழைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் தான் கார்ப்பரேட் நிறுவன தலைவர்களுக்கு ஒரே இடத்தில் இருக்கை கொடுக்கப்பட்ட போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டு உள்ளது.
இந்த புகைப்படத்தில் மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் இடதுபுறத்தில் கூகுள் முதலாளி சுந்தர் பிச்சை அவருக்குப் பின்னால் இருப்பதைக் காணலாம். ஆப்பிள் சிஇஓ டிம் குக்கின் முகத்தை அவருக்கு முன்னால் அமர்ந்திருந்தவர்கள் மறைத்திருந்தனர். அவருக்குப் பின்னால், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் பெசோஸ் அவருக்கு முன்னால் அமர்ந்திருப்பதைப் பார்க்க முடிகிறது.
செயின்ட் ஜான்ஸ் தேவாலயத்தில் டிக்டாக்-கின் Shou Chew, அர்ஜென்டினா தலைவர் ஜேவியர் மிலே மற்றும் முன்னாள் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோரும் உள்ளதாக கூறப்படுகிறது. இவர்களுடன் இந்திய வம்சாவளி குடியரசு கட்சியின் முக்கிய உறுப்பினரான விவேக் ராமசாமி மற்றும் முன்னாள் ஃபாக்ஸ் சேனல் ஹோஸ்ட் டக்கர் ஆகியோரும் உள்ளே உள்ளனர். இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியும் கலந்து கொண்டார்.


Click it and Unblock the Notifications