அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு அமெரிக்காவில் பல முக்கிய மாற்றங்களை செய்து வருகிறார். அப்படித்தான் ரெசிப்ராக்கல் வரிமுறையை கொண்டு வந்தார். எந்த நாடுகள் அமெரிக்காவுடன் வர்த்தகத்தில் ஈடுபடுகிறதோ? அந்தந்த நாடுகளின் வரிக்கு ஏற்ப அமெரிக்காவும் வரிவிதிக்கும். இதைத்தான் ரெசிப்ராக்கல் வரிமுறை எனக் கூறுகின்றனர். சமீபத்திய நாட்களாக இந்தியாவில் விதிக்கப்படும் வரி குறித்து சில கருத்துக்களை ட்ரம்ப் முன்வைத்து வருகிறார்.
அமெரிக்க இறக்குமதி மீது இந்தியா அதிக அளவில் வரி விதிப்பதாகவும், இது மிகப் பெரிய வர்த்தக தடைகளை உருவாக்குவதாகவும் இந்தியாவை ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். "இந்தியா எங்களுக்கு அதிக வரி விதிக்கிறது.. இது மிகப் பெரியது! இந்தியாவில் நீங்கள் எதையுமே விற்க முடியாது. ஆனால் இப்போது தங்கள் வரியை குறைக்க இந்தியா விரும்புகிறது. ஏனென்றால் நாங்கள் அவர்கள் செய்ததை வெளிப்படுத்தியதுதான் இதற்கு காரணம்" என்று டிரம்ப வெள்ளிக்கிழமை அன்று ANI-யிடம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் சமீப காலமாக பதட்ட நிலையில் உள்ளன. டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க பொருட்களுக்கு மற்ற நாடுகள் அதிக வரி விதிப்பதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.
இதனால் அமெரிக்காவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் கனடா, சீனா, மெக்ஸிகோ, இந்தியா உள்ளிட்ட அதன் பல முக்கிய வர்த்தக கூட்டாளிகளிடையே பதட்டம் நிலவி வருகிறது. இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் வரி குறைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் எந்தெந்த பொருட்களுக்கு வரி குறைப்புகள் ஏற்பட்டுள்ளது என்பது குறித்த விவரங்களை வெளியிடவில்லை.
இந்திய அரசு விதிக்கும் அதிகப்படியான இறக்குமதி வரிகள் டெஸ்லாவின் திட்டங்களுக்கு பெரும் தடையாக உள்ளன. குறிப்பாக, டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் சுங்க வரி இல்லாத இறக்குமதியை வலியுறுத்தி வருகிறது.
இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு 110 சதவீதம் வரை வரி விதிக்கப்படுகிறது. இது உலகிலேயே மிக அதிகமான வரிகளில் ஒன்று என்று டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் விமர்சனங்களை முன் வைத்துள்ளார். இந்தியா உலகின் மூன்றாவது மிகப்பெரிய வாகன சந்தையை கொண்டுள்ளது. இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் இதற்கு முன்னர் செய்யப்பட இருந்த விரிவாக்க திட்டங்களை கைவிட்டதற்கு இந்த வரியும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.
"அமெரிக்கா இந்தப் புதிய வரியை விதித்துள்ளது. இந்தியா இந்த எச்சரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளது. ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் இந்த புதிய வரிமுறையை நடைமுறைக்கு வரும். கனடா, சீனா, மெக்ஸிகோ மற்றும் இந்தியா புதிய வரிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்", என்று தனது முடிவை ட்ரம்ப் நியாயப்படுத்தியுள்ளார்.
"எங்கள் நாடு பிற நாடுகளால் சுரண்டப்பட்டு விட்டது. இனி அது நடக்காது! எனது முதல் பதவிக்காலத்திலும் இதை தடுத்து நிறுத்தினேன்! இப்போதும் அதையே செய்ய உள்ளேன்!" என்று டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்கா பிற நாடுகளின் இறக்குமதிகள் மீது வரிகளை உயர்த்தியபோது, கனடா, சீனா, மற்றும் மெக்சிகோ போன்ற நாடுகள் பதிலுக்கு அமெரிக்க பொருட்களின் மீது வரிகளை விதித்து எதிர்த்தன. மேலும், உலக வர்த்தக அமைப்பிடம் புகார் அளித்தன. ஆனால், இந்தியா இந்த விஷயத்தில் சற்று நிதானமான அணுகுமுறையை கடைப்பிடித்துள்ளது என்றும் கூறியுள்ளார்.
More From GoodReturns

ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவாரா பிரதமர் மோடி? ரம்ஜான் நாளில் தொடங்கிய முக்கிய பேச்சுவார்த்தை..!!

பங்குச்சந்தை சரிவுக்கு மத்தியில் ஐபிஓ வெளியிடும் கோல் இந்தியா: முதலீடு செய்யலாமா?

இந்தியா நினைத்தால் ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வர முடியுமா? மத்தியஸ்தராக மாறுகிறதா இந்தியா?

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!



Click it and Unblock the Notifications