அண்மைக்காலமாக நிலவி வந்த வர்த்தகப் பதட்டங்களுக்கு மத்தியில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் சீராக நடந்து வருவதாக தெரிவித்துள்ளார். மேலும், அடுத்த ஆண்டு இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவும் தாம் விரும்புவதாக அவர் சூசகமாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சிறந்த மனிதர் என்றும் நல்ல நண்பர் என்றும் புகழ்ந்தார். இரு நாடுகளுக்கும் இடையேயான பொருளாதாரம் மற்றும் வியூக ரீதியிலான ஒத்துழைப்பைப் பலப்படுத்த இந்தப் பயணம் உதவும் என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்திய பிரதமர் மோடியுடன் தான் நடத்திய சமீபத்திய உரையாடல்கள் மிக சிறப்பாக சென்று கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவுக்கு வருமாறு மோடி தமக்கு அழைப்பு விடுத்திருப்பதாகவும், அந்தப் பயணத்தை மேற்கொள்ள தாம் தயாராக இருப்பதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.
நாங்கள் இருவரும் நண்பர்கள். அவர் நான் அங்கே வர வேண்டும் என்று விரும்புகிறார். அதைப் பற்றி முடிவு செய்வோம். ஆனால், நான் நிச்சயம் இந்தியாவுக்கு செல்வேன் என்று டிரம்ப் உறுதிபட தெரிவித்துள்ளார்.
சவால்கள் இருந்தும் தொடரும் உறவு : டெல்லிக்கும் வாஷிங்டனுக்கும் இடையே சில முக்கியமான பிரச்சனைகள் நிலவி வரும் சூழலில் அதிபர் டிரம்ப் இவ்வாறு ஒரு கருத்தை தெரிவித்திருக்கிறார். தற்போது இந்திய ஏற்றுமதிகளுக்கு அமெரிக்காவில் 50% வரை அதிக வரி விதிக்கப்படுகிறது. மேலும், அமெரிக்க நிர்வாகம் H1B விசாவிற்காக 1,00,000 டாலர் கட்டணம் செலுத்த வேண்டும் என்று முன்மொழிந்திருப்பது இந்தியத் தொழில்நுட்பத் துறையினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான போர் நிறுத்தத்திற்குத் தான் மத்தியஸ்தம் செய்ததாக ட்ரம்ப் மீண்டும் மீண்டும் கூறி வருவதுடன், இந்தியா ரஷ்ய கச்சா எண்ணெயை தொடர்ந்து வாங்குவதையும் அவர் விமர்சித்துள்ளார். இந்த சவால்கள் இருந்தாலும், இரு அரசாங்கங்களுக்கு இடையேயான இராஜதந்திர ஈடுபாடு தொடர்கிறது.
வர்த்தகப் பேச்சுவார்த்தையின் முன்னேற்றம் குறித்து கேட்டபோது, மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், "பேச்சுவார்த்தைகள் மிக நன்றாக நடந்து கொண்டிருக்கின்றன. இதில் பல முக்கியமான மற்றும் உணர்வுப்பூர்வமான சிக்கல்கள் இருப்பதால், இதற்கு சற்று நேரம் எடுப்பது இயல்புதான்" என்று தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, அமெரிக்காவுக்கான இந்திய தூதர் வினய் மோகன் குவாத்ரா கூறுகையில், அமெரிக்க செனட் உறுப்பினர் ஸ்டீவ் டைன்ஸை நேற்று சந்தித்துப் பேசினார். இதில் வர்த்தக உறவுகள், புதிதாக கையெழுத்திடப்பட்ட 10 ஆண்டு கால பாதுகாப்பு ஒப்பந்தம், அத்துடன் தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளில் ஒத்துழைப்பதற்கான வாய்ப்புகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டன. இருதரப்பு உறவை ஆழப்படுத்துவதற்கு ஆதரவளித்த செனட் உறுப்பினர் டைன்ஸ்க்கு குவாத்ரா நன்றி தெரிவித்தார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications