அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அனைவரும் எதிர்பார்க்கப்பட்டபடியே வியாழக்கிழமை பிரதமர் மோடியைச் சந்திக்கும் முன்னரே, ரெசிப்பரோக்கல் வரிகளை அறிமுகப்படுத்துவதற்கான பேஸ்மென்ட்டை அமைக்கும் உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இந்த உத்தரவு மூலம் இந்தியாவை மட்டும் அல்லாமல் உலகின் பெரும்பாலான நாடுகளைக் கடுமையாக பாதிக்கும். ஆனால் இதில் ஒரு டிவிஸ்ட் இருக்கு.
ரெசிப்பரோக்கல் வரி என்பது அமெரிக்கா மீது எந்தெந்த நாடுகள் எல்லாம் அதிகப்படியான வரியை விதித்துள்ளதோ அந்த நாடுகள் மீது அதே அளவுக்கான வரியை விதிக்கும் முறை. இந்த நிலையில் அமெரிக்கப் பொருட்கள் மீது எந்த நாடுகள் எவ்வளவு வரிகளை விதிக்கிறது, எந்த வகையிலான வர்த்தக தடைகளை விதித்துள்ளது என்பதை நாடு வாரியாக ஆய்வுகளைச் செய்ய இந்த உத்தரவு மூலம் அறிவுறுத்துள்ளார்.

அமெரிக்கா அரசு முதல் கட்டமாக அந்நாட்டுடன் அதிகப்படியான வர்த்தக உபரியை கொண்டுள்ள நாடுகளை குறித்து ஆய்வு செய்யும், அதாவது ஏற்றுமதியைக் காட்டிலும் இறக்குமதி அதிகமாகக் கொண்டிருக்கும் நாடுகள் மீது இந்த reciprocal tariffs-ஐ விதிக்கும். இதேபோல் அமெரிக்க உடன் பிரச்சனைகளைக் கொண்டிருக்கும் நாடுகள் மீதும் இந்த reciprocal tariffs விதிக்கப்படும் என வெள்ளை மாளிகை அதிகாரி அதிகாரப்பூர்வமாகச் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும் இந்த ஆய்வை அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் மற்றும் பிற அரசு நிறுவனங்கள் இணைந்து மேற்கொள்ளும், இந்த ஆய்வுகள் முழுமையாக முடிந்த பின்பு தான் reciprocal tariffs விதிக்கப்படும். இந்த ஆய்வுகள் முடிய சில வாரங்கள் முதல் மாதங்கள் வரை தேவைப்படும்.
இதனால் reciprocal tariffs-ஐ அமெரிக்க அரசு உடனடியாக நடைமுறைக்கு வராது என்பது உறுதியாகியுள்ளது. இதேவேளையில், அமெரிக்காவுடன் தொடர்ந்து நடப்புடனும், வர்த்தக போரை எதிர்கொள்ளக் கூடாது என நினைக்கும் நாடுகள் இந்த இடைப்பட்ட காலத்தில் அமெரிக்கப் பொருட்கள் மீது விதிக்கப்பட்ட வரியைக் குறைக்க வாய்ப்புள்ளது.
இந்த சூழ்நிலை இந்தியாவுக்கும் சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி - டிரம்ப் உடனான சந்திப்பில் 30க்கும் அதிகமான பொருட்களுக்கு வரியைக் குறைக்கும் திட்டத்துடன் அமெரிக்கா சென்றுள்ளார் என்ற தகவல் வெளியான நிலையில், டிரம்ப் அரசின் reciprocal tariffs அச்சுறுத்தலிலிருந்து விடுபடலாம் எனத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications