அமெரிக்காவின் அதிபராக டொனால்டு டிரம்ப் நாளை பதவியேற்க உள்ள நிலையில் உலகின் அனைத்து முக்கிய தலைவர்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இந்த பதவியேற்பு நிகழ்ச்சியை மிகவும் பிரம்மாண்டமாக நடத்த அமெரிக்காவின் முன்னணி பில்லியனர்கள் சிறப்பு நிதியுதவியைச் செய்துள்ளனர்.
இந்த நிலையில் டிரம்ப் திங்கள்கிழமை மதியம் வெள்ளை மாளிகைக்குள் நுழைந்த பின்பு முதல் நாளிலேயே, 100 க்கும் மேற்பட்ட உத்தரவுகளில் அவர் கையெழுத்திட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டொனால்டு டிரம்ப் தலைமையிலான முதல் ஆட்சியில் இந்தியா முதல் சீனா வரையில் பல நாடுகள் பல்வேறு விதமான பிரச்சனைகளை எதிர்கொண்டது யாராலும் மறக்க முடியாது.

இப்படியிருக்கையில் முதல் நாளில் 100 உத்தரவுகள் கையெழுத்திட உள்ளார் என்பதால் உலக நாடுகள் மட்டும் அல்லாமல் அமெரிக்க மக்களும் சற்று பீதியில் தான் உள்ளனர். டிரம்ப் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற உடன் அமெரிக்க அரசின் கடனை குறைத்து செலவுகளைக் குறைக்க முடிவு செய்து இதற்காக தனி படையை அமைத்துள்ளார். இப்படி செலவுகளைக் குறைக்கும் முடிவை எடுத்தால் அமெரிக்க மக்களின் வாழ்வியல் பாதிக்கும்.
இந்த நிலையில் டிரம்ப் வெள்ளை மாளிகையில் ஓவல் அலுவலக மேசையில் காத்திருக்கும் உத்தரவுகளை, உள்ளே நுழைந்த உடன் எந்த நிமிடமும் வீணடிக்காமல் அவரது பணியைத் துவங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 100 உத்தரவுகளில் பெரும்பாலும் அவரது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாக இருக்கும் எனத் தெரிகிறது.
இந்த நிலையில் NBC செய்திக்கு அளித்த பேட்டியில், டிரம்ப் முதல் நாளில் 100க்கும் அதிகமான உத்தரவுகளில் கையெழுத்திட உள்ளீரா என்று கேட்டபோது, "ஆமாம், குறைந்தபட்சம் 100 என்ற எண்ணிக்கையில் இருக்கும்" டிரம்ப் கூறினார். இதன் மூலம் அமெரிக்க அதிபராக முதல் நாளில் அதிகப்படியான உத்தரவுகளை வெளியிட்ட நபராக டிரம்ப் இருப்பார் எனவும், இது அமெரிக்க வரலாற்றில் முக்கிய இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டொனால்டு டிரம்ப்-க்கு நெருங்கிய நபர்களில் ஒருவரான ஸ்டீபன் மில்லர் ஒரு செய்தி சேனலிடம் பேசுகையில், முதல் நாளில் டிரம்ப் கையெழுத்திடும் உத்தரவுகளில் ஐந்து முக்கிய பரிவுகளில் இருக்கும் என்று கூறினார்.
இதில் முதலாவது தெற்கு எல்லைக்குச் சீல் வைப்பது, சட்டத்திற்குப் புறம்பான முறையில் அமெரிக்காவிற்குள் நுழைந்தவர்களை அவர்கள் நாட்டிற்கு நாடுகடத்துவது, பெண்கள் விளையாட்டுகளில் இருந்து திருநங்கைகள் பங்கேற்பதைத் தடுப்பது, எனர்ஜி ஆய்வு மீதான கட்டுப்பாடுகளை நீக்குவது மற்றும் அரசாங்கத்தின் செயல்திறனை மேம்படுத்துவது தொடர்பானதாக இருக்கும் என கூறியுள்ளார்.
மேலும் 78 வயதான டிரம்ப், முந்தைய அமெரிக்க ஜனாதிபதியான ஜோ பைடன் நிர்வாக உத்தரவுகள் சிலவற்றை நீக்கவும் உள்ளார்.
More From GoodReturns

ஈரான் போர்: டிரம்ப் நிர்வாகத்திலேயே ஒரு கருப்பு ஆடு? செய்தியாளர்களிடம் உண்மையை போட்டுடைத்த டிரம்ப்

ஈரான் போர் நிறுத்தம் நீடிக்குமா? வெள்ளிக்கிழமை நடக்க இருக்கும் டிவிஸ்ட்!!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?



Click it and Unblock the Notifications