இந்தியர்கள் அமெரிக்கா சென்று வேலை செய்ய பயன்படுத்தும் ஹெச்1பி விசாவில் மாற்றங்கள் கொண்டுவரப்படலாம் என தகவல்கள் வெளியாகி வரக்கூடிய சூழலில் இந்திய மாணவர்களுக்கும் பிரச்சினை ஏற்படுத்தும் திட்டம் கொண்டு வரப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது.
ஹெச்1பி விசா மூலம் பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் திறன்மிகு வெளிநாட்டு ஊழியர்களை அமெரிக்காவிற்கு வரவழைத்து பணி புரிய வைக்கின்றன. பின்னர் அவர்கள் அங்கேயே செட்டிலாகிவிடுகின்றனர்.

இவர்களால் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு பறிபோவதாக தொடர்ந்து டொனால்ட் டிரம்ப் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதற்கிடையே அமெரிக்காவில் படிப்புக்காக செல்லக்கூடிய சர்வதேச மாணவர்கள் பலரும் அங்கேயே வேலையை தொடர்வதற்காக Optional Practical Training (OPT) என்ற திட்டத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது அதிலும் மாற்றம் கொண்டுவர வேண்டும் என டொனால்ட் டிரம்ப் ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அமெரிக்காவிற்கு எஃப்1 விசாவில் படிப்பிற்காக செல்லக்கூடிய மாணவர்கள் ஆப்ஷனல் பிராக்டிகல் ட்ரைனிங் திட்டத்தின் மூலம் அவர்கள் படிப்பு சம்பந்தப்பட்ட துறையில் 12 மாதங்கள் வேலை செய்யலாம் என இந்தத் திட்டம் அனுமதி தருகிறது. குறிப்பாக ஸ்டெம் எனப்படும் சயின்ஸ் , டெக்னாலஜி ,இன்ஜினியரிங் மற்றும் மேக்ஸ் பிரிவில் பயிலக்கூடிய சர்வதேச மாணவர்கள் இன்னும் 24 மாதங்களுக்கு கூடுதலாக அமெரிக்காவில் பணி செய்ய முடியும்.
இதனால் இவர்கள் தங்களுடைய படிப்பை முடித்துவிட்டு மூன்று ஆண்டு காலத்திற்கு அமெரிக்காவில் பணிபுரிய இந்த திட்டம் அனுமதி தருகிறது. இவர்களுக்கு பின்னாளில் ஹெச்1பி விசா கிடைப்பது எளிதாகி விடுகிறது. கடந்த 2023 - 24 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் இருக்கும் இந்திய மாணவர்களில் 97,556 பேர் அதாவது மொத்த இந்திய மாணவர்களில் 29 சதவீதம் பேர் இந்த ஓபிடி திட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்துள்ளனர்.
அதற்கு முந்தைய ஆண்டு இந்த எண்ணிக்கை 69,000 ஆக இருந்தது. இதனிடையே இந்த திட்டத்தால் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பு பறி போவதாக டொனால்ட் டிரம்ப் ஆதரவாளர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த திட்டத்திலும் மாற்றம் கொண்டு வந்தால் மட்டுமே அமெரிக்கா நிறுவனங்கள் வேலை வாய்ப்பில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை தரும் என அவர்கள் கூறி வருகின்றனர்.
2023ஆம் ஆண்டிலேயே இந்த திட்டத்திற்கு எதிராக வாஷிங்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது நீதிமன்றம் இந்த வழக்கை ஏற்க மறுத்து தள்ளுபடி செய்தது, ஓபிடி திட்டம் தொடர்ந்து செயல்படும் என்றும் தெரிவித்தது. இதனிடையே டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க இருப்பதால் அவர் இந்த திட்டத்தில் மாற்றம் கொண்டு வர வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
Story written by: Devika
More From GoodReturns

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

ஈரானை சீண்டும் டிரம்ப்.. மீண்டும் போர் தீவிரமாகுமா..?

Trump முன்னுக்கு பின் முரண்.. வெள்ளை கொடி தூக்கிய பின்பு ஈரானில் தாக்குதல்.. 2 எரிவாயு தளங்கள் துவம்சம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

பொட்டில் அடித்தது போல் சொன்ன Iran.. டிரம்ப் மீது சுத்தமா நம்பிக்கையில்லை.. JD Vance வர சொல்லுங்க..!!

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

டிரம்ப் ஊதும் மகுடிக்கு கெவின் வார்ஷ் ஆடுவாரா..? தலைதூக்கும் ரெசிஷன் அச்சம்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்வது என்ன?

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!



Click it and Unblock the Notifications