டிரம்ப் T1 ஸ்மார்ட்போன் உண்மையில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டதா..? குவியும் புகார்கள்.. உண்மை என்ன?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிறுவனம், நெட்வொர்க் சேவையுடன் கூடிய புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மற்றும் தகவல் தொடர்பு சேவை இணைப்பு வரும் செப்டம்பர் மாதம் முதல் கிடைக்கும் என டிரம்ப் ஆர்கனைசேஷன் அறிவித்துள்ளது. 'டிரம்ப் மொபைல்' என்ற பெயரில் இந்த ஸ்மார்ட்போன் சந்தைக்கு வரவுள்ளது. டிரம்ப் ஸ்டீக்ஸ் மற்றும் டிரம்ப் பல்கலைக்கழகம் போன்ற பிற பிராண்டட் முயற்சிகளைப் போலவே, டிரம்ப் மொபைல் உரிம ஒப்பந்தத்தின் கீழ் "டிரம்ப்" பெயரைப் பயன்படுத்துகிறது.

இந்த ஸ்மார்ட்போன் 'டி1' என அழைக்கப்படுகிறது. இதன் விலை அமெரிக்க டாலரில் 499 ஆகும். அதாவது, இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.40,000. நெட்வொர்க் கட்டணம் மாதத்துக்கு 47 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.4,000) செலுத்த வேண்டும். இந்த ஸ்மார்ட்போன், அமெரிக்க கொடி பதிக்கப்பட்ட, தங்க நிறத்தில் இருக்கும் என்றும் இதை வாங்க, முன்பதிவு தொடங்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் முழுக்க முழுக்க அமெரிக்காவிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரம்ப் T1 ஸ்மார்ட்போன் உண்மையில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டதா..? குவியும் புகார்கள்.. உண்மை என்ன?

ஆப்பிள் ஐபோனை இந்தியாவில் தயாரிக்காமல் அமெரிக்காவில் தயாரிக்க டிரம்ப் வலியுறுத்திய நிலையில், அதிபருக்கு டிரம்புக்கு சொந்தமான நிறுவனமே ஸ்மார்ட் போன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது. கடந்த மாதம் தான், ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவில் ஐபோன்களை தயாரிக்காவிட்டால் குறைந்தபட்சம் 25% வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்தார். மேலும், சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் உள்ளிட்ட பிற சாதன உற்பத்தியாளர்களை பின்தொடர்வேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

டிரம்ப் நிறுவனம் அறிமுகப்படுத்தும் இந்த ஸ்மார்ட்போனில் 12 GB RAM, 256 GB Storage, 6.78 inch AMOLED டிஸ்பிளே, 16MP செல்ஃபி கேமரா, 50MP ரியர் கேமரா, 5000mAh பேட்டரி போன்ற வசதிகள் உள்ளது. டி1 நிறுவனத்திற்கு டிரம்பின் பெயரை மட்டும் ஒப்பந்த அடிப்படையில் தந்திருப்பதாகவும், நேரடியாக டிரம்ப் குடும்பம் இந்த மொபைலை விற்கப் போவதில்லை என்றும் Trump Organization விளக்கம் அளித்துள்ளது.

டிரம்பின் ஸ்மார்ட்போன் உண்மையில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டதா..?: தங்கள் ஸ்மார்ட்போனை எந்த நிறுவனம் தயாரிக்கும் என்பதை டிரம்ப் குடும்பத்தினர் இதுவரை வெளியிடவில்லை. எனவே, இந்த ஸ்மார்ட்போன் குறித்து பல சர்ச்சைகள் தற்போது வெடித்துள்ளன. அமெரிக்காவில் புதிதாக ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்வது தற்போது சாத்தியமில்லை என்றும் கூறி வருகின்றனர். அவர்களிடம் வேலை செய்யும் முன்மாதிரி கூட இல்லை. இது சாத்தியமே இல்லை என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் கேரி வணிகப் பள்ளி பேராசிரியர் டிங்லாங் டாய் கூறியுள்ளார்.

ஸ்மார்ட்போன் தயாரிப்புக்கு தேவையான உயர் தொழில்நுட்ப பொருட்கள் தற்போது அமெரிக்காவில் இல்லை. டிரம்ப் அமைப்பு குறிப்பிட்டது போல், இந்த போன் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட வேண்டிய நேரத்தில் இல்லை. இருப்பினும், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பாகங்களை பயன்படுத்தி, இந்த ஃபோனை அமெரிக்காவில் தயாரிக்க முடியும் என்று CCS இன்சைட்டின் ஆய்வாளர் லியோ கெப்பி கூறியுள்ளார். இதுகுறித்து ஆப்பிள் இன்சைடர் கூறுகையில், "தங்க முலாம் பூசப்பட்ட அடிப்படை மாடல் அமேசானில் $169 மட்டுமே என்றாலும், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட டிரம்ப் மொபைல் தங்க நிற ஐபோனை ஒத்த தோற்றமுடைய ஒன்றிற்கு $499 வசூலிக்கிறது" என்று தெரிவித்துள்ளது.

அமெரிக்காவால் இதுபோன்ற தொலைபேசியை தயாரிக்க முடியுமா..?: அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட்போனை சரியான நேரத்தில் தயாரிக்கும் திறனை சந்தேகித்தவர்களில் ஜர்னலும் ஒருவர். Xiaomi மற்றும் Oppo போன்ற சீன உற்பத்தியாளர்கள் மட்டுமே அந்த விலையில் ஒப்பிடக்கூடிய வன்பொருளைக் கொண்டிருப்பதால், டிரம்பின் ஸ்மார்ட்போன் சீனாவில் இருந்து வருவது கூட சாத்தியம் என்று சில செய்தித்தாள்கள் குறிப்பிட்டுள்ளன. தற்போதைய தொழில்நுட்ப நிலை தேவையான கூறுகளை உற்பத்தி செய்வதை சாத்தியமற்றதாக்குவதால், அமெரிக்காவில் ஸ்மார்ட்போன் தயாரிப்பதற்கான உள்கட்டமைப்பை உருவாக்க 5 ஆண்டுகள் ஆகும் என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டிங்லாங் டாய் கூறியுள்ளார்.

டிரம்ப் ஸ்மார்ட்போன் மீது புகார் : டிரம்பின் இந்த ஸ்மார்ட்போனை வாங்க முன்பதிவு தொடங்கியுள்ளது. ஆனால், டெபாசிட் பணம் செலுத்திய பிறகு வலைத்தள செயலிழப்புகள், தவறான கட்டணங்கள் மற்றும் ஷிப்பிங் தகவல் காணாமல் போவதாக புகார் எழுந்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+