டொனால்டு டிரம்ப் ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்கா நாட்டின் அதிபராக 2வது முறையாகப் பதவியேற்கும் நிலையில் சமுக வலைத்தளத்தில் முக்கியமான பதிவைச் செய்துள்ளார். இந்த ஒரு பதிவின் மூலம் இந்தியாவுக்கு டபுள் ஜாக்பாட் அடித்துள்ளது. எப்படி..?
டொனால்டு டிரம்ப் ஆட்சிக்கு வந்த உடனே மெக்சிகோ மற்றும் கனடா நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி பொருட்கள் மீது கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கப்பட உள்ளதாகவும், சீனா மீதும், சீன பொருட்கள் மீதும் 25 சதவீத வரியுடன் கூடுதலாக 10 சதவீத வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார். சீனா அரசு அமெரிக்காவுக்குள் synthetic opioid fentanyl கடத்துவதை நிறுத்தும் வரையில் இந்த கூடுதல் 10 சதவீத வரி தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த வரி அறிவிப்பைப் பயன்படுத்தி டொனால்டு டிரம்ப் அந்நாட்டை விட்டு வெளியேறிய உற்பத்தி திட்டங்களும், உற்பத்தித் துறை வேலைவாய்ப்புகளும் திரும்ப அமெரிக்காவுக்கு வரும், இதன் மூலம் அமெரிக்காவில் வேலைவாய்ப்பு பிரச்சனை என்பது முழுமையாகக் குறைந்து நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பும் என்பது தான் டிரம்ப் கணக்கு.
ஆனால் அமெரிக்காவில் உற்பத்தி தொழிற்சாலை வைத்து, அதை லாபகரமாக, பட்ஜெட் விலையில் பொருட்களைத் தயாரிப்பது என்பது எளிதான காரியமில்லை. இதனால் 100க்கு 90 நிறுவனங்கள் சீனா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளைத் தாண்டி மாற்று உற்பத்தி தளத்தைத் தான் தேடும்.
இதன் மூலம் சீனா+1 கொள்கை டிரம்ப் வரி விதிப்பு மூலம் பெரிய அளவில் வலிமை பெரும். சீனா+1 கொள்கை மூலம் இதுவரையில் அதிகம் நன்மை அடைந்தது என்றால் அது இந்தியா தான். இதன் வாயிலாக சீனா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் இருக்கும் அமெரிக்க நிறுவனங்களும், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பிற நாட்டு நிறுவனங்களும் தனது தொழிற்சாலையை இந்தியாவுக்கு மாற்றும் முயற்சியில் இறங்கும்.
இதே நிலை தான் டிரம்ப்-ன் முதல் ஆட்சியில் அமெரிக்கா - சீனா வர்த்தக போரின் போது ஏற்பட்டது. தற்போது மீண்டும் இது நடக்க உள்ளது முதல் ஜாக்பாட்.
2வது ஜாக்பாட் என்னவென்றால், டொனால்டு டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது இந்தியா தனது சலுகையை துஷ்பிரயோகம் செய்தும், விதிகளை மீறியும் அமெரிக்காவில் வர்த்தகம் செய்கிறது என பேசியிருந்தார். இதுமட்டும் அல்லாமல் தான் ஆட்சிக்கு வந்தால் வரி விதிப்பு பட்டியலில் இந்தியாவும் இடம் பெறும் என கண்டிப்பான முறையில் தெரிவித்தார்.
இப்படியிருக்கும் வேளையில் டொனால்டு டிரம்ப் வரி விதிப்பு தொடர்பான முதல் கையெழுத்திடும் திட்டத்தில் இந்தியா இல்லாதது 2வது ஜாக்பாட். இதன் மூலம் 2வது சுற்றில் இந்தியாவுக்கு வெளிநாட்டு நிறுவனங்கள் வர உள்ளது.
More From GoodReturns

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications