உலகளவில் பல நாடுகள் டாலரின் ஆதிக்கத்தைக் குறைக்க வேண்டும் என்ற முக்கிய குறிக்கோள் உடன் இயங்கி வரும் வேளையில், ரஷ்யா - உக்ரைன் போருக்குப் பின்பு இந்த நடவடிக்கை பிரிக்ஸ் நாடுகள் மத்தியில் தீவிரம் அடைந்தது. இதனால் டாலரின் ஆதிக்கம் படிப்படிப்படியாக குறைந்து அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு இது பெரும் தலைவலியாக மாற துவங்கியது.
இந்த நிலையில் விரைவில் மாற்ற வேண்டும் என்ற முக்கிய இலக்குடன் களத்தில் இறங்கியுள்ளார் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள டொனால்டு டிரம்ப். ஜனவரி 12 ஆம் தேதி வெள்ளை மாளிகைக்குக் குடியேற உள்ள டொனால்டு டிரம்ப் நேற்று செய்த டிவீட் இந்தியா மட்டும் அல்லாமல் பிரிக்ஸ் நாடுகளை அதிர்ச்சியில் மூழ்கடித்துள்ளது.

உலகெங்கிலும் உள்ள நாடுகள் அமெரிக்க டாலர் அடிப்படையிலான நிதிய அமைப்பில் தொடர்ந்து இருக்க வேண்டும் என டொனால்ட் டிரம்ப் அழுத்தம் கொடுத்து டிவீட் செய்துள்ளார். பிரிக்ஸ் நாடுகள் தங்களுக்கான தனி நாணயம் அல்லது டாலருக்கு எதிரான மாற்று நாணயத்தைத் தேர்வு செய்யும் முடிவில் இருந்து பின்வாங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
இல்லையெனில் பிரிக்ஸ் நாடுகள் மீது 100 சதவீதம் வரி விதிக்கப்படும், அதேபோல் பிரிக்ஸ் நாடுகள் அமெரிக்காவும் எந்த பொருட்களையும், சேவைகளையும் விற்க முடியாது என எச்சரிக்கிறேன். பிரிக்ஸ் நாடுகள் டாலரை சர்வதேச வர்த்தக சந்தையில் இருந்து நீக்க முடியாது, இப்படி யாரேனும் முயற்சி செய்தால் அமெரிக்கா அந்த நாட்டிற்கு டாடா காட்டிவிடும் என மிரட்டல்லதொனியில் டிவீட் செய்திருந்தார்.
டிரம்ப்-ன் டிவீட் பல கலவையான விமர்சனங்களை உருவாக்கியிருக்கும் வேளையில் அமெரிக்க கருவூலத்தில் பணிபுரிந்த ஓய்வுபெற்ற அதிகாரி மற்றும் நாணயக் கொள்கையில் 40 ஆண்டு பணியாற்றிய மார்க் சோபல் கூறுகையில், டாலரின் ஆதிக்கத்தில் எவ்விதமான தொய்வும் இல்லை, இதேபோல் வளர்ந்து வரும் நாடுகள் டாலருக்கு எதிராக பொதுவான நாணயத்தை அமைக்கும் யோசனை தண்ணீரில் எழுதப்பட்ட எழுத்துக்கள் போன்றதாகும் என தெரிவித்துள்ளார்.
பிரிக்ஸ் நாடுகள் என்பது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்காவின் ஆகியவற்றின் கூட்டமைப்பு.


Click it and Unblock the Notifications