டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றது முதலே பல்வேறு நாடுகளுடன் வர்த்தக மோதலில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக இந்தியா அமெரிக்காவின் நட்பு நாடு எனக் கூறும் அவர் மறுபுறம் இந்திய பொருட்களுக்கு 50 சதவீத இறக்குமதி வரியை விதித்திருக்கிறார்.
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை காரணமாக கூறி இந்திய பொருட்களுக்கு டிரம்ப் அரசு 50 சதவீத வரியை விதித்துள்ளது. முதலில் இந்திய பொருட்கள் மீது 25% போட்டி வரி விதித்த டிரம்ப், பின்னர் ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதலை காரணமாக கூறி கூடுதலாக 25% என மொத்தம் 50% வரியை விதித்துள்ளார். டிரம்பின் இந்த நடவடிக்கை இந்தியாவை சார்ந்த ஜவுளி உற்பத்தி, தோல் பொருட்கள் உற்பத்தி, கடல் சார் உணவு உற்பத்தி நிறுவனங்களை எல்லாம் கடுமையாக பாதித்துள்ளது.

இதற்கிடையே இந்தியா அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சு வார்த்தைகளும் நடைபெற்றன. ஆனால் இதுவரை வர்த்தக பேச்சுவார்த்தையில் பெரிய அளவிலான எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை, அப்படியே கிணற்றில் போட்ட கல்லாகவே இருக்கிறது. இந்திய நிறுவனங்கள் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை அண்மைக்காலமாக சற்றே குறைத்து அதற்கு மாற்றாக அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து வாங்க தொடங்கிவிட்டன. இருந்தாலும் டிரம்ப் நிர்வாகம் இந்திய பொருட்களுக்கான வரியை இதுவரை குறைக்கவில்லை.
இந்த சூழலில் அமெரிக்க அதிபர் இந்திய பொருட்களுக்கு புதிய வரி விதிக்கப் போவதாக பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்திய அரிசி மற்றும் கனடா நாட்டு உரங்களுக்கு புதிய வரிகளை விதிக்க இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருக்கிறார். அமெரிக்க விவசாயிகளுக்கு 12 மில்லியன் டாலர் நிதி உதவி அறிவிப்பது தொடர்பான கூட்டம் வெள்ளை மாளிகையில் நடைபெற்றது.

மானிய விலையில் அமெரிக்காவில் அரிசி இறக்குமதி செய்வது அமெரிக்க சந்தைகளை பாதிக்கிறது என விவசாயிகள் கூறினர், குறைந்த விலையில் அரிசி சந்தையில் கிடைப்பதால் உள்நாட்டில் விளைந்த அரிசிக்கு டிமாண்ட் இல்லாமல் போகிறது என கூறினார் . எனவே இந்த விவகாரத்தில் அமெரிக்க அரசாங்கம் கடுமையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இந்தியா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசி வகைகளால் தாங்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் அப்போது தெரிவித்தார்கள் . அதற்கு குறைந்த விலையில் அமெரிக்க சந்தையில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களால் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு சவால் ஏற்பட்டிருக்கிறது இது கவனத்தில் கொள்ளப்படும் என டிரம்ப் கூறினார்.
அமெரிக்காவைப் பொறுத்தவரை பெரும்பாலான உரங்கள் கனடாவில் இருந்து இங்கே வருகின்றன எனவே தேவைப்பட்டால் கனடா உரத்திற்கு கடுமையான வரி விதிப்போம் என்றார். இந்திய அரிசியை அமெரிக்க சந்தையில் கொண்டு வந்து கொட்டுவது சரியில்ல, தற்போது இந்திய அரிசிக்கு என்ன வரி பார்த்து அதற்கும் புதிய வரியை விதிப்பது குறித்து முடிவு செய்யப்படும் , இந்த விஷயத்தை நான் கவனித்துக் கொள்கிறேன் என அப்போது அவர் விவசாயிகளுக்கு உறுதி அளித்திருக்கிறார்.
உலகிலேயே மிகப்பெரிய அரிசி ஏற்றுமதியாளராக இந்தியா தான் இருக்கிறது. உலக அரிசி ஏற்றுமதியில் 30% பங்கு இந்தியாவிடம் தான் உள்ளது. 2024ஆம் ஆண்டில் இந்தியா 2.34 லட்சம் டன் அரிசியை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது, குறிப்பாக பாஸ்மதி அரிசி வகைகள் இந்தியாவில் இருந்து அதிகமாக அமெரிக்க சந்தைக்கு செல்கின்றன.
More From GoodReturns

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

அமெரிக்காவுக்கு ஈரான் தந்த ’ரகசிய பரிசு’ – அதிபர் டொனால்ட் டிரம்ப் சூசகம்..!!

ஈரானை சீண்டும் டிரம்ப்.. மீண்டும் போர் தீவிரமாகுமா..?

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!

பொட்டில் அடித்தது போல் சொன்ன Iran.. டிரம்ப் மீது சுத்தமா நம்பிக்கையில்லை.. JD Vance வர சொல்லுங்க..!!

டிரம்ப் வாயை திறந்தாலே பொய் தானா? - ஈரான் ராணுவம் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!!

Trump முன்னுக்கு பின் முரண்.. வெள்ளை கொடி தூக்கிய பின்பு ஈரானில் தாக்குதல்.. 2 எரிவாயு தளங்கள் துவம்சம்..!!

யாருடைய கட்டுப்பாட்டில் ஹார்முஸ் ஜலசந்தி? அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்லும் புது கணக்கு

டிரம்ப் ஊதும் மகுடிக்கு கெவின் வார்ஷ் ஆடுவாரா..? தலைதூக்கும் ரெசிஷன் அச்சம்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்வது என்ன?



Click it and Unblock the Notifications