அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு பெற வேண்டும் என்பதில் பெரும் ஆசை இருந்து வந்த நிலையில், பாகிஸ்தான் உட்பட பல நாடுகளை இவரின் பெயரை பரிந்துரை செய்த நிலையிலும் இவரால் பெற முடியவில்லை.
இந்த நிலையில் டொனால்ட் டிரம்புக்கு இஸ்ரேல் நாட்டின் உயரிய குடிமகன் விருதான இஸ்ரேல் பரிசு 2026இல் வழங்கப்படும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு டிசம்பர் 29ஆம் தேதியன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இஸ்ரேல் பல ஆண்டுகளாக பன்பற்றி வரும் பாரம்பரியத்தை மீறி இஸ்ரேல் பரிசை டிரம்ப்-க்கு அளிக்க முடிவு செய்துள்ளார்.

இஸ்ரேல் வரலாற்றில், இதுவரை இவ்விருது இஸ்ரேல் குடிமக்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது நிலையில், காசாவில் நடந்த போரிஸ் இஸ்ரேல் நாட்டுக்கு டிரம்ப் அளித்த ஆதரவை பாராட்டி இந்த விருது அளிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. புளோரிடாவில் டிரம்புடன் நட்பு ரீதியான சந்திப்புக்குப் பிறகு பெஞ்சமின் நெதன்யாகு இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இஸ்ரேல் நாட்டில் அனைத்து தரப்பு மக்களிடமும் டிரம்ப் மீது உள்ள நன்றியுணர்வை இது பிரதிபலிப்பதாக பெஞ்சமின் நெதன்யாகு கூறினார் . டிரம்ப் பல வழக்கங்களை மீறி செயல்பட்ட நிலையில் அவர் சரியான நபர் என உலகம் உணர்ந்ததை போல, இஸ்ரேலும் ஒரு புதிய மரபை அவருக்காக உருவாக்குவது சரி என உணர்ந்துள்ளது என பெஞ்சமின் நெதன்யாகு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இஸ்ரேல் பரிசு வழக்கமாக இஸ்ரேல் குடிமக்கள் அல்லது அந்நாட்டில் குடியிருப்பாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. யூத மக்களுக்கு சிறப்பு பங்களிப்பு அளித்தவர்களுக்கு என்ற ஒரு வகையில் இந்த விருது அளிக்க விதிவிலக்கு அளிக்கப்பட்டு இஸ்ரேல் நாட்டை அல்லாதோர் என்ற பிரிவில் வழங்கப்படுகிறது. இதுவரை இப்பிரிவில் இஸ்ரேல் அல்லாத வருது பெற்ற ஒரே நபர் இந்திய இசை கலைஞர் ஜூபின் மேத்தா மட்டுமே இந்த விருது வழங்கப்பட்டு உள்ளது. அவருக்கு 1991இல் இவ்விருது வழங்கப்பட்டது.
அக்டோபர் மாதம் பெஞ்சமின் நெதன்யாகு டிரம்பை இஸ்ரேலின் மாபெரும் நண்பர் என புகழ்ந்தார். அப்போது டிரம்ப் மற்றும் அவரது குழு பேச்சுவார்த்தை நடத்தி காசா அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தினர். இதன் மூலம் 2023 அக்டோபர் 7 தாக்குதலில் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்ட 20 பேரை விடுவிக்கப்பட்டனர். இந்த ஆதரவை பாராட்டி இவ்விருது வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications