உலகளவில் பங்குச்சந்தை ரத்தக்களறியான நிலையில் இன்று டொனால்டு டிரம்ப் தனது டிவிட்டர் பதிவில், அமெரிக்கப் பொருளாதார நிலை மற்றும் சர்வதேச வர்த்தக உறவுகள் குறித்து அவர் வெளியிட்டுள்ள கருத்துகள் பெருமளவிலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தனது டிவிட்டர் பக்கத்தில், எண்ணெய் விலைகள் குறைந்துவிட்டது, வட்டி விகிதங்கள் குறைந்துவிட்டது (மெதுவாக நகரும் பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களைக் குறைக்க வேண்டும்!), உணவு விலைகள் குறைந்துவிட்டது, இதனால் அமெரிக்காவில் பணவீக்கம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

பல ஆண்டுகளாக அமெரிக்காவை சுரண்டிய நாடுகள் மீது புதிதாக அமல்படுத்தப்பட்ட வரிகள் மூலம், இந்த சுரண்டும் நாடுகளிடமிருந்து வாரத்திற்கு பில்லியன் கணக்கான டாலர்களை வரியாக ஈட்டுகிறது அமெரிக்க அரசு என தெரித்துள்ளார் டிரம்ப்.
அனைத்து நாடுகளை காட்டிலும் அமெரிக்காவைப் பெரிய அளவில் சுரண்டிய நாடான சீனா, அதன் பங்குச்சந்தை சரிந்து கொண்டிருக்கும் போது, நீண்ட காலமாக அமெரிக்கப் பொருட்கள் மீது விகித்திற்கும் அதிகப்படியான வரிக்கு, மேலாக 34% வரிகளை உயர்த்தியுள்ளது. அமெரிக்காவைச் சுரண்டும் நாடுகள் பதிலடி கொடுக்கக்கூடாது என்ற என்னுடைய எச்சரிக்கையைச் சீனா கண்டுகொள்ளவில்லை என்று டிவிட்டரில் கூறியுள்ளார் டிரம்ப்.
பல தசாப்தங்களாக அமெரிக்கா வாயிலாகவும், அமெரிக்க மக்களிடம், அமெரிக்கச் சந்தையிலும் இந்த சுரண்டும் நாடுகள் போதுமான அளவு சம்பாதித்து விட்டனர். நம்முடைய முன்னாள் "தலைவர்களே" இத்தகைய மோசமான நிலைக்கு முக்கியமான காரணம். MAKE AMERICA GREAT AGAIN! என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ட்வீட்டில், டிரம்ப் தனது வரி விதிப்பு மூலம் அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு உருவாகியுள்ள சாதகமான அம்சங்களை எடுத்துக்காட்டியுள்ளார், குறிப்பாகக் குறைந்த எண்ணெய் மற்றும் உணவு விலைகள், வட்டி விகிதங்கள் மற்றும் பணவீக்கம் இல்லாத நிலையை முக்கியமானதாகக் கூறியுள்ளார்.
இந்த டிவீட்க்கு கீழ் Ed Krassenstein என்பவர் எண்ணெய் விலை, வட்டி விகிதம் அனைத்தும் குறைவாக இருக்க முக்கிய காரணம் மக்கள் ரெசிஷன் வரும் என்ற அச்சத்தால் இது நடக்கிறது. உங்களுக்குப் பொருளாதாரம் பற்றி ஏதேனும் தெரியுமா..? என்று கேட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications