திடீர் பல்டி?! ரஷ்யாவுக்கு டிரம்ப் ஆதரவு.. உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி-யிடம் போரை நிறுத்த உத்தரவு!

வளைகுடா நாடுகள் அனைத்தும் போரால் திணறி வரும் இதேவேளையில் டிரம்ப் அமெரிக்கப் படைகள் கொண்டு ஹவுதி மற்றும் ஈரான் மீதும் தாக்குதல் நடத்த தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறார். ஆனால் உலகின் மறுமுனையில் உக்ரைன் - ரஷ்யா மத்தியிலான போரில் அமெரிக்க மாறுபட்ட நிலைப்பாட்டைக் கொண்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வளைகுடா போருக்கு இணையாக உக்ரைன் - ரஷ்யா மத்தியிலான போர் தாக்குதல் கடந்த ஒரு மாதமாகத் தீவிரம் அடைந்து வருகிறது. ரஷ்ய ராணுவம் உக்ரைன் நாட்டின் மின்சார கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்திய காரணத்தால், உக்ரைன் படைகள் ட்ரோன் மூலம் மாஸ்கோ அருகில் இருக்கும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீதான தாக்குதல் உலகளவில் டீசல் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

திடீர் பல்டி?! ரஷ்யாவுக்கு டிரம்ப் ஆதரவு.. உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி-யிடம் போரை நிறுத்த உத்தரவு!

இந்த நிலையில் டிரம்ப் உலக நாடுகளுக்கு ரஷ்யாவில் இருந்து டீசல் போதுமான சப்ளை செய்யவும், ரஷ்யாவில் சுத்திகரிப்பு பணிகள் தொடர்ந்து நடக்க வேண்டும் என விரும்புகிறார். இதனால் ரஷ்யா எண்ணெய் தளத்தில் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என டிரம்ப் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி-க்கு உத்தரவிட்டு உள்ளதாக பைனான்சியல் டைம்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் டீசல் சப்ளை தடைப்பட்டால் உலகளவில் டீசல் இருப்பு குறையும், ஏற்கனவே வளைகுடாவில் இருந்து சர்வதேசச் சந்தைக்கு வரும் சப்ளை குறைந்து வரும் நிலையில், ரஷ்ய சப்ளை பாதிக்கப்பட்டால் டீசல் விலை தாறுமாறாக உயரும் அபாயம் உள்ளது.

Also Read

பிரான்ஸ் நாட்டில் ஏற்கனவே டீசல் தட்டுப்பாடு உருவாகி 11 சதவீத பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் தட்டுப்பாடு உருவாகியுள்ளதாக அறிவித்துள்ளது பிரான்ஸ் அரசு. இந்த நிலையில் உலகளவில் டீசல் சப்ளை உறுதி செய்யும் வகையில் ரஷ்யா எண்ணெய் தளத்தின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

டிரம்ப் - ஜெலென்ஸ்கி மத்தியிலான போன் கால் குறித்து விபரம் அறிந்த இரண்டு அதிகாரிகள் பைனான்சியல் டைம்ஸ் பத்திரிக்கைக்கு தெரிவித்துள்ளனர்.

ஆனால் இதே நேரத்தில் தான் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய், எரிவாயு, எரிபொருள் வாங்கும் டாப் 5 நாடுகள் மீது 100 சதவீதம் வரி விதிக்கும் மசோதா மீது டிரம்ப் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டு உள்ளார்.

Recommended For You

இப்படி டிரம்ப்-ன் செயல்பாடுகள் தொடர்ந்து தனது முடிவில் இருந்து பல்டி அடிக்கும் விதமாகவும், நிலைப்பாட்டில் உறுதியற்ற தன்மையில் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.

அமெரிக்கா பொறுத்த வரையில் ரஷ்யாவை தாக்க கூடாது, ரஷ்யாவை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் எதுவும் இல்லை, மாறாக உலகளவில் டீசல் மற்றும் இதர பெட்ரோலியம் பொருட்களின் சப்ளையை உறுதி செய்ய வேண்டும் என்பது மட்டுமே. ரஷ்யாவின் சப்ளை தடைபெற்றால் இந்தியா முதல் அமெரிக்கா வரையில் பணவீக்கம் அதிகரிக்கும்.

உலக நாடுகளில் போர் தாக்குதல் அதிகரித்திருக்கும் இந்த வேளையில் ஐநா-வின் பொதுக்கூட்டம் நடக்கிறது. இக்கூட்டத்தில் ஈரான், உக்ரைன், ரஷ்ய, வளைகுடா நாடுகளின் தலைவர்கள் கலந்துக்கொள்ள உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+