டிரம்ப் சொன்ன ஒருவார்த்தை.. கூகுள், மைக்ரோசாப்ட் முதல் டிசிஎஸ், இன்போசிஸ் வரை பதற்றம்!

அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த ஐநா பொது கூட்டத்தில் உலக நாடுகளின் தலைவர்கள் பேசினர், இப்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசும் போது மத்திய கிழக்கு போர், பணவீக்கம், பொருளாதாரம் ஆகியவற்றை தாண்டி டெக் துறையை புரட்டிப்போடும் வகையில் ஒரு கருத்தை முன்வைத்தார்.

தற்போது உலகளாவிய முதலீட்டு சந்தையை தாங்கி நிற்கும் செயற்கை நுண்ணறிவு என்ற வார்த்தை, போலியானதாக தோற்றம் ஏற்படுத்துவதாகவும், அதற்குப் பதிலாக இனி Super Intelligence என பயன்படுத்தினால் சிறப்பாக இருக்கும் என டிரம்ப் கூறினார்.

டிரம்ப் சொன்ன ஒருவார்த்தை.. கூகுள், மைக்ரோசாப்ட் முதல் டிசிஎஸ், இன்போசிஸ் வரை பதற்றம்!

இது மட்டும் அல்லாமல் அமெரிக்க அரசு தனது அதிகாரப்பூர்வ அரசு அறிக்கைகளில் Artificial Intelligence என்ற வார்த்தைக்கு பதிலாக இனி Super Intelligence அல்லது SI என்ற சொல்லைப் பயன்படுத்தத் தொடங்கும் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.

இதுநாள் வரையில் அனைத்து முன்னணி டெக் நிறுவனங்களும் செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களும் .ai என கரீபியன் பகுதியை சேர்ந்த Anguilla நாட்டின் டொமைன்களை தான் தேடி தேடி வாங்கி வந்தனர்.

உதாரணமாக Perplexity.ai, Claude.ai, X.ai இப்படி பல தளங்கள் உள்ளது, ஆனால் டிரம்ப்-ன் பேச்சுக்கு பின்பு .si என டொமைன் கொண்ட வெப்சைட்-க்கு பெரிய அளவிலான டிமாண்ட் உருவாகியுள்ளது.

இன்னும் சிலர் பிரபலமான நிறுவனங்கள் பெயரில் .si Domain-ஐ வாங்கி கொண்டு விற்கும் போட்டியிலும் இறங்கியுள்ளதால் ஒட்டுமொத்த டெக் துறையும் தற்போது பதற்றத்தில் உள்ளது. உதாரணமாக கூகுள் நிறுவனத்தின் பெயரில் .si டொமைன் வாங்கி அதை கூகுள் நிறுவனத்திற்கு அதிக தொகைக்கு விற்கும் போட்டியும் உருவாகியுள்ளது.

டிரம்பின் ஐநா கூட்ட பேச்சுக்குப் பின் .si டொமைனுக்கான பதிவுகள் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளதாக தெரிகிறது. இந்தியாவுக்கு எப்படி .in என இருக்கிறதோ .si என்பது ஸ்லோவேனியா நாட்டை சேர்ந்தது.

இந்த நிலையில் ஸ்லோவேனியாவின் டொமைன் பெயர்களை நிர்வாகம் செய்யும் Register.si அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கிளாரா ஹெர்மன் கூறுகையில், ஆகஸ்ட் மாதம் முழுவதும் சுமார் 3,500 புதிய டொமைன்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்ட நிலையில், டிரம்பின் பேச்சுக்குப் பிறகு ஒரு நாளுக்கு சுமார் 3,700 புதிய .si டொமைன்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன என தெரிவித்தார்.

இதன் மூலம் .si டொமைன்களின் மொத்த எண்ணிக்கை தற்போது 2.2 லட்சத்தைக் கடந்துள்ளது என தெரிவித்தார். AI துறையில் செயல்படும் நிறுவனங்கள் தங்களுடைய எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு இப்போதே .si டொமைன்களை வாங்கி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+