இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே தற்போது அமலில் இருக்கும் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து டொனால்டு டிரம்ப் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹமாஸ் அமைப்பு காஸாவில் பிடித்து வைத்துள்ள அனைத்து இஸ்ரேலிய கைதிகளையும் சனிக்கிழமை மதியத்திற்குள் விடுவிக்கவில்லை என்றால், போர் நிறுத்த ஒப்பந்தம் செல்லாது என்று டிரம்ப் திங்களன்று தெரிவித்தார்.
ஹமாஸ்க்கு எதிரான நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டொனால்டு டிரம்ப், இஸ்ரேலிய கைதிகளைச் சனிக்கிழமை மதியத்திற்குள் விடுவிக்க நடவடிக்கை எடுக்கத் தவறினால் ஏற்படும் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என சுட்டிக்காட்டினார். இதேபோல் தாக்குதல்கள் மிகவும் மோசமாக இருக்கும் என்றும் எச்சரித்தார்.

மேலும் விடுவிக்கப்பட வேண்டிய இஸ்ரேலிய கைதிகளில் சிலர் ஏற்கனவே இறந்திருக்கலாம் என்றும் டொனால்டு டிரம்ப் இந்த கூட்டத்தில் பேசினார். இருப்பினும், போர் நிறுத்தம் தொடர்பான இறுதி முடிவு இஸ்ரேலிடமே உள்ளது என்பதையும் குறிப்பிட்டார். அமெரிக்காவின் நிலைப்பாடு ஒரு பரிந்துரையே தவிர கட்டளையல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தினார் டொனால்டு டிரம்ப்.
ஆனால், ஹமாஸ் அமைப்பு காஸா பகுதியில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறியதாகக் கூறி, இஸ்ரேலிய கைதிகளை விடுவிப்பதை நிறுத்துவதாக ஹமாஸ் திங்களன்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த அதிரடி கருத்துக்களுக்கு முன்பு டொனால்டு டிரம்ப் ஒரு முக்கியமான யோசனையை முன்வைத்தார். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மத்தியில் சிம்மசொப்பனமாக இருக்கும் காஸா பகுதியை அமெரிக்கா அரசு மற்றும் ராணுவத்தின் மூலம் கட்டுப்படுத்தும் திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்வைத்தார்.
இந்த பகுதியை அமெரிக்கா கைப்பற்றினால் காஸாவை ஒரு வளமான பகுதியாக மாற்றுவதாகவும், அது "Riviera of the Middle East"வாக மாறக்கூடும் என்றும் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார். இதை இஸ்ரேல் பிரதமர் வரவேற்றாலும், இந்த ஐடியாவுக்கு அரபு நாடுகளிடமிருந்து கடுமையான எதிர்ப்பும், விமர்சனத்தையும் டொனால்டு டிரம்ப் பெற்றுள்ளார்.
இதேவேளையில் காஸாவிலிருந்து பாலஸ்தீனிய மக்களை அகதிகளாக ஜோர்டான் மற்றும் எகிப்து போன்ற அமெரிக்க நட்பு நாடுகளை ஏற்றுக்கொள்ளுமாறு டிரம்ப் தீவிரமாக வலியுறுத்தி வருகிறார். ஆனால் இதற்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
காஸாவை அமெரிக்கா கைப்பற்றினால் அதை ஒரு ரியல் எஸ்டேட் மேம்பாட்டுத் திட்டமாக நடத்தும் திட்டம் உள்ளது எனவும் டொனால்டு டிரம்ப் பேசியது பலரையும் கோபப்படுத்தியுள்ளது. காசாவில் நடக்கும் சிக்கலான அரசியல் மற்றும் மனிதாபிமான பிரச்சினைகளை அவர் புறக்கணித்துவிட்டு ரியல் எஸ்டேட் குறித்துப் பேசுகிறார் என்றும் திட்டிதீர்த்து வருகின்றனர்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோர்டானின் மன்னர் அப்துல்லா II-வை செவ்வாய்க்கிழமை வெள்ளை மாளிகையில் சந்திக்கவுள்ள நிலையில், காஸாவில் இருந்து பாலஸ்தீன மக்களை அகதிகளாக ஏற்றுக்கொள்ளும் திட்டம் குறித்து முடிவு எடுக்கப்படலாம்.


Click it and Unblock the Notifications