டிரம்ப் அதிரடி அறிவிப்பு.. மக்கள் கொந்தளிப்பால் எடுக்கும் வரலாற்று முடிவு! ஐநா கூட்டம் முடிந்ததும்.. இப்படியா?

சவுதி - ஹவுதி, அமெரிக்கா - ஈரான், இஸ்ரேல் - லெபனான், உக்ரைன் - ரஷ்யா என உலகளவில் பெரும்பாலான எண்ணெய் உற்பத்தி நாடுகள் போரில் மூழ்கியிருக்கும் வேளையில், ஹார்முஸ், பாம் அல் மண்டெப் வழித்தடங்கள் முடங்கப்பட்டு இருக்கும் காரணத்தால் எரிபொருள் தட்டுப்பாடு என்பது ஆசியச் சந்தையில் தற்போது அமெரிக்கா, ஐரோப்பாவுக்கும் சென்றுள்ளது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் அமெரிக்காவில் டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு அந்நாட்டின் வரலாற்றில், முதல் முறையாக டீசல் ஏற்றுமதிக்குத் தடை விதிக்க ஆலோசனை செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

டிரம்ப் அதிரடி அறிவிப்பு.. மக்கள் கொந்தளிப்பால் எடுக்கும் வரலாற்று முடிவு! ஐநா கூட்டம் முடிந்ததும்.. இப்படியா?

ஐநா பொதுக்கூட்டத்தில் ஈரான், கியூபா நாடுகள் குறித்துப் பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கும் வேளையில் அமெரிக்கப் பொருளாதாரம் பணவீக்கத்தாலும், கடுமையான கடன் நெருக்கடியாலும் தவித்து வரும் வேளையில் அமெரிக்கப் பொருளாதாரம் எப்போதும் இல்லாமல் பெரும் வலிமையுடன் இருப்பதாக டிரம்ப் ஐநா கூட்டத்தில் பேசியுள்ளார்.

இந்த நிலையில் அடுத்த பிரச்சனையைக் கிளப்பும் விதமாக டிரம்ப், அமெரிக்காவில் அதீத விலைக்கு டீசல் உற்பத்தி செய்யப்பட்டு, அதீத விலைக்கு விற்கப்படும் நிலையில், டீசலை வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டாம் என்று டிரம்ப் பேசியுள்ளார். அமெரிக்காவின் டீசல் ஏற்றுமதி தொடர்பான முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதை உறுதி செய்யும் வகையில், சமீபத்தில் ஈரானிய விமானங்களுக்கு உலக நாடுகள் எவ்விதமான உதவியும் செய்யக்கூடாது என அறிவித்த அமெரிக்காவின் கருவூல துறையின் செயலாளர் ஸ்காட் பெசென்ட் டீசல் ஏற்றுமதி தடை குறித்து சிஎன்பிசி சேனலிடம் பேசியுள்ளார்.

தற்போது அமெரிக்காவில் இருந்து உலக நாடுகளுக்குச் செய்யப்படும் டீசல் ஏற்றுமதி மீது முழுமையான தடை விதிக்கலாமா அல்லது 50 சதவீத டீசல் ஏற்றுமதி தடையை அமல்படுத்தலாமா என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் சரக்கு போக்குவரத்துக்கு உயிர் நாடியாக இருக்கும் டீசல் விற்பனை விலை 6.53 டாலர் என்ற வரலாறு காணாத உயர்வை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் சுமார் 75% அதிகமாகும். மேலும் இந்த டீசல் விலை உயர்வு அமெரிக்காவின் ரீடைல் பணவீக்க உயர்வுக்கு மிக முக்கியமான காரணமாக இருந்து வருகிறது.

அமெரிக்கா உலகின் மிகப்பெரிய டீசல் ஏற்றுமதி நாடுகளில் ஒன்றாக இருக்கும் வேளையில், இந்த ஏற்றுமதி தடை விதித்தால் அதிகம் பாதிக்கப்படுவது ஐரோப்பிய நாடுகள் தான். ஏற்கனவே பிரான்ஸ் உட்பட பல நாடுகளில் சவுதி சப்ளை தடைப்பட்ட காரணத்தால் பெரும் அவதிக்குள்ளாகி வரும் வேளையில் அமெரிக்காவும் டீசல் ஏற்றுமதிக்குத் தடை விதித்தால் பெரும் நெருக்கடிக்குத் தள்ளப்படும்.

இதனால் டிரம்ப் அரசின் வரலாற்று முடிவு மூலம் உலகளாவிய எரிபொருள் விநியோக நெருக்கடியை மேலும் மோசமாக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+