அமெரிக்காவில் அதிபர் தேர்தல் முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அனல் பறக்க முடிவுகள் வெளியாகி வருகிறது. 1.25 மணிக்கு டொனால்டு டிரம்ப் 267 இடத்திலும், கமலா ஹாரிஸ் 224 இடத்திலும் எலக்டோர்ல் வோட்ஸ் வென்ற நிலையில், டிரம்ப் ஆட்சியை அமைக்க 270 இடங்களைப் பிடிக்க இன்னும் சில இடங்களே உள்ளது.
தற்போது வெளியான முடிவுகள் படி டொனால்டு டிரம்ப் கிட்டத்தட்ட வெற்றி அடைந்துவிட்டதாகவே கருதப்படுவதால், டிரம்ப் தனது ஆதரவாளர்களிடம் வெற்றி உரையைப் பேசினார், இதேவேளையில் கமலா ஹாரிஸ் தேர்தல் முடிவுகளுக்குப் பின்பு பேசுவதாக இருந்த நிலையில் இந்த நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளார்.

டிரம்ப்-ன் வெற்றி இந்தியா - அமெரிக்கா மத்தியிலான உறவில் பெரிய அளவிலான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது தான் தற்போது முக்கியமான விஷயமாக உள்ளது. 47வது அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ள நிலையில் அவருடைய கொள்கை மற்றும் முடிவுகள் பெரிய அளவிலான தாக்கத்தை இந்தியா - அமெரிக்கா மத்தியிலான உறவில் ஏற்படுத்தும். டிரம்ப்-ன் சில முடிவுகள் இந்தியாவுக்குப் பெரிய அளவில் சாதகமாக இருந்தாலும், சில விஷயங்கள் கட்டாயம் பாதிப்பை ஏற்படுத்தும்.
உதாரணமாகச் சர்வதேச பிரச்சனைகளைக் களைவதில் தற்போது இந்தியாவின் கை ஓங்கியுள்ளது. இந்த நிலையில் சீனா உடனான வர்த்தகம், மத்திய ஆசியாவில் (ஈரான், இஸ்ரேல், காசா, லெபனான்) போர் பதற்றம், ரஷ்யா - உக்ரைன் போர் ஆகியவற்றில் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசின் கொள்கை நிலைப்பாடு சர்வதேச அளவில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் இதில் இந்தியாவும் பாதிக்கப்படும்.
டொனால்டு டிரம்ப் அதிபராக வரும் வேளையில் அமெரிக்கா - இந்தியா மத்தியிலான வெளியுறவுக் கொள்கை, வர்த்தக உறவு, இரு நாடுகளும் இணைந்து செயல்படும் துறைகள், பகுதிகள் என அனைத்திலும் சில பாதிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் டொனால்டு டிரம்ப் - நரேந்திர மோடி மத்தியிலான நட்புறவு உலகளவில் பாராட்டப்படுவது மட்டும் அல்லாமல், சமீபத்தில் ஒரு பாட்காஸ்டில் கூட டிரம்ப், மோடி சிறந்த நண்பர் என்று கூறினார், ஆனால் அடுத்த சில நாட்களில் நடந்த ஒரு பிரச்சார கூட்டத்தில் இந்தியா மீது வரி விதிப்பது பற்றிப் பேசினார்.
மொத்தமாக பார்க்கும் போது டிரம்ப்-ன் சீனாவுக்கு எதிரான கொள்கையும், ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாடும் இந்தியாவுக்கு ஆதரவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications