அமெரிக்க அதிபர் தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டதிலிருந்து எலான் மஸ்க் தொடர்ந்து தனது கருத்துக்களைப் பதிவு செய்தது மட்டும் அல்லாமல் ஜோ பைடன், கமலா ஹாரிஸ், ஜனநாயக கட்சி-க்கு ஆதரவு தெரிவிக்கும் அனைவரையும் டிவிட்டர் வாயிலாகக் கிண்டல் செய்தும், வம்பிழுத்தும் வந்தார்.
இதன் பின்பு குடியரசு கட்சி வேட்பாளர்களான விவேக் ராமசாமி, டொனால்டு டிரம்ப் ஆகியோருக்கு பெரிய அளவில் சப்போர்ட் செய்து வந்தார். இதனிடையே விவேக் ராமசாமி போட்டியில் இருந்து வெளியேறிவிடவே எலான் மஸ்க் டொனால்டு டிரம்ப்-க்கு ஆதரவு தெரிவித்தது மட்டும் மட்டும் அல்லாமல் பல்லாயிரம் கோடியை நன்கொடையாகக் கொடுத்து, டிவிட்டரை டிரம்ப்-ன் புகழை பரப்பும் மீடியாவாக மாற்றி, டிரம்ப் உடன் பிரச்சாரத்திற்கும் சென்றார்.

இதற்கெல்லாம் இன்று பலனாக டிரம்ப் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது மட்டும் அல்லாமல் பாப்புலர் வோட் வாங்கி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இன்று மாலை அனைத்து தொகுதிகளுக்கான வாக்குகள் கணக்கிடப்பட்ட நிலையில் 277 எலக்டோரல் வாக்குகளும், 51 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளார் டொனால்டு டிரம்ப்.
இந்த வெற்றிக்கு டிரம்ப், எலான் மஸ்க்-கிற்கு கொடுக்கப்போவது 3 முக்கியமான விஷயம் தான்.
முக்கிய பதவி
இந்த தேர்தலில் டிரம்பின் வெற்றிக்கு பக்க பலமாக இருந்த மூத்த பிரச்சார ஆலோசகரான பிரையன் ஹியூக்ஸ் கூறுகையில், டிரம்ப் தலைமையிலான ஆட்சியில் அமெரிக்க அரசாங்கத்தை மிகவும் திறமையாக நிர்வாகம் செய்யவும், வரி செலுத்துவோரின் பணத்தை மிகவும் சிறப்பாகப் பயன்படுத்துவதை உறுதி செய்யவும் ஒரு முக்கியமான "கமிஷன்" ஒன்றை எலான் மஸ்க் வழிநடத்துவார் என்று அமெரிக்காவின் அதிபரான டொனால்டு டிரம்ப் கூறியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
அமெரிக்க அரசிற்கு நேரடியாக தொழிலதிபர்கள் உதவி செய்வது புதியதது அல்ல, பல முறை பல திட்டங்களுக்காக டெக் பில்லியனர்கள் அரசுடன் நெருங்கி பணியாற்றியுள்ளனர். இணையத்தில் பராக் ஒபாமா உடன் ஸ்டீவ் ஜாப்ஸ், மார்க் ஜூக்கர்பெர்க் உள்ளிட்ட பல டெக் தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தின் புகைப்படம் இன்றும் பிரபலமாக உள்ளது.
வரி குறைப்புகள்
எலான் மஸ்க், டிரம்ப் அரசு வரி குறைப்பு அறிவிப்புகள் மூலம் பயனடையலாம். டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் துவங்கிய வேளையில் இருந்து பெருநிறுவனங்கள் மற்றும் பணக்காரர்கள் மீது குறைந்த வரியை விதிப்பது குறித்து டிரம்ப் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். ஆனால் ஜோ பைடன் அரசு வரியை உயர்த்தவும், கூடுதல் வரி விதிக்கவும் சில முயற்சிகளை மேற்கொண்டது.
டொனால்டு டிரம்ப்-ன் தனது முதல் பதவிக் காலத்தில், கார்ப்பரேட் வரியை அமெரிக்காவில் 35% லிருந்து 21% ஆகக் குறைத்தார். இது அப்போது பலராலும் பாராட்டப்பட்டது. இந்த அறிவிப்புக்கு முக்கியமான காரணம் அமெரிக்க நிறுவனங்கள் அமெரிக்காவில் அதிகப்படியான வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பதற்காகவும், அமெரிக்க நிறுவனங்களை ஊக்குவிக்கவும் கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில் 2வது ஆட்சியில் டொனால்டு டிரம்ப் இந்த வரி குறைப்புகளை அடுத்த 10 ஆண்டு வரையில் நீட்டிக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் எலான் மஸ்க் தலைமையில் இருக்கும் நிறுவனங்களுக்கு வரிச் சலுகை கிடைக்கக் கூடும்.
அமெரிக்க அரசின் பட்ஜெட் மற்றும் கொள்கை முன்னுரிமைகள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த வரி குறைப்பை அடுத்த 10 ஆண்டுகளுக்கு நீட்டித்தால் சுமார் 41% நன்மைகளை அமெரிக்க பணக்காரர்களும், அவர்களது குடும்பமும் பெறும் என தெரிவித்துள்ளது.
ஸ்பேஸ்எக்ஸ்-க்கு ராஜயோகம்
டொனால்டு டிரம்பின் இரண்டாவது ஆட்சி காலத்தில், எலான் மஸ்க்-ன் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் சார்ந்தும், விண்வெளி துறை ஆராய்ச்சி துறையில் இருக்கும் கடுமையான ஒழுங்குமுறை கட்டுப்பாடுகளைக் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதோடு ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ஏற்கனவே பல பில்லியன் கணக்கான அரசாங்க ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளது, குறிப்பாக பாதுகாப்புத் துறை மற்றும் நாசா உடன் பெறப்போகும் ஒப்பந்தங்கள் அதிகமாகக்கூடும்.
இதெல்லாம் அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக டொனால்டு ட்ரம்ப் மற்றும் குடியரசு கட்சிக்கு எலான் மாஸ்க் வழங்கிய 132 மில்லியன் டாலர் நன்கொடையின் பிரதிபலனாக பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications