அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்பிற்கு கிடைத்த மகத்தான வெற்றியால், நமது உள்நாட்டுப் பங்குச் சந்தைகள் மட்டுமின்றி அமெரிக்க பங்குச் சந்தைகளும் சாதனைகளை பதிவு செய்துள்ளன. அமெரிக்க பங்குச் சந்தைகளான டவ் ஜோன்ஸ், எஸ்&பி 500 மற்றும் நாஸ்டாக் ஆகியவை புதிய உச்சத்தைத் தொட்டன.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றதன் மூலம், உலக கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. குறிப்பாக வாரன் பஃபெட் ஒரே நாளில் ரூ. 6 லட்சம் கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

இதனால், டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க், ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க், அமேசான் தலைவர் ஜெஃப் பெசோஸ் ஆகியோரின் சொத்து மதிப்பு அபரிமிதமாக அதிகரித்துள்ளது. அந்த வகையில், அமெரிக்க பங்குச் சந்தையில் மூத்த முதலீட்டாளரான வாரன் பஃபெட்டின் சொத்து ஒரே நாளில் 8 பில்லியன் டாலர்கள் அதிகரித்தது.
ரூ. 6 லட்சம் கோடி: வாரன் பஃபெட்டின் போர்ட்ஃபோலியோவில் உள்ள மூன்று பங்குகள் பெரிய அளவிலான செல்வத்தின் வளர்ச்சியில் முக்கியமானதாக மாறியுள்ளன. அவற்றில் முதலாவது ஆப்பிள், இரண்டாவது பேங்க் ஆப் அமெரிக்கா மூன்றாவது அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் ஆகிய இந்த மூன்று 3 பங்குகளின் மிகப்பெரிய வளர்ச்சியால் வாரன் பஃபெட்டின் செல்வத்தை அதிகரித்துள்ளன.
Apple Inc: ஆப்பிள் பங்குகள் நேற்று $223.45 இல் இருந்து 1.2 சதவீதம் உயர்ந்து $226.06 ஆக இருந்தது. இந்த நிறுவனத்தில் வாரன் பஃபெட்டிற்கு மொத்தம் 400,000,000 பங்குகள் உள்ளன. நவம்பர் 6 அன்று வாரன் பஃபெட்டின் ஃபோர்ட் போலியோ 400,000,000 x $226.04 = $90.424 பில்லியன் ஆகும். அதாவது நவம்பர் 05 அன்று 400,000,000 x $223.45 = $ 89.38 பில்லியன். அதாவது ஒரே நாளில் ஆப்பிள் பங்குகளில் $1.044 பில்லியன் சம்பாதித்துள்ளார்.
Bank of America: பேங்க் ஆஃப் அமெரிக்கா பங்குகள் நேற்று $41.88ல் இருந்து 8.76 சதவீதம் உயர்ந்து $45.55 ஆக இருந்தது. இந்த நிறுவனத்தில் வாரன் பஃப்பெட்-க்கு மொத்தம் 1,032,852,006 பங்குகள் உள்ளன. நவம்பர் 6 அன்று வாரன் பஃபெட்டின் ஃபோர்ட் போலியோ மதிப்பு 1,032,852,006 x $45.55 = $47.046 பில்லியன். அதாவது நவம்பர் 05 அன்று 1,032,852,006 x $ 41.88 = $43.558 பில்லியன் ஆக உள்ளது. அதாவது அவர் ஒரே நாளில் பாங்க் ஆப் அமெரிக்கா பங்குகளில் $3.790 பில்லியன் சம்பாதித்துள்ளார்.
American Express: அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் பங்குகள் நேற்று $275.94ல் இருந்து 7.6 சதவீதம் உயர்ந்து $296.83 ஆக இருந்தது. இந்த நிறுவனத்தில் வாரன் பஃபெட்டிற்கு மொத்தம் 151,610,700 பங்குகள் உள்ளன. நவம்பர் 6 அன்று வாரன் பஃபெட்டின் ஃபோர்ட் போலியோவின் மதிப்பு 151,610,700 x $296.83 = $45.002 பில்லியன் ஆகும். அதாவது நவம்பர் 05 அன்று 151,610,700 x $275.94 = $41.38 பில்லியன் ஆக உள்ளது. அதாவது ஒரே நாளில் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் பங்குகளில் $3.167 பில்லியன் சம்பாதித்துள்ளார்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications