இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக தேர்வாகி இருக்கக்கூடிய டொனால்ட் டிரம்ப் வெளிநாட்டில் இருந்து அமெரிக்க எல்லையில் முறைகேடாக வருவதை மொத்தமாக தடுப்பதில் குறியாக இருந்தாலும், வெளிநாட்டு மாணவர்கள் வருகையை தடுக்க எந்த கடுமையான நடவடிக்கையும் எடுக்க வாய்ப்பில்லை என நிபுணர்கள் அடித்துக்கூறுகின்றனர்.
அமெரிக்க அதிபராக டொனால்ட் தேர்வான பிறகு அமெரிக்காவில் படிப்புக்காக வரக்கூடிய இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. ஐடிபி எஜுகேஷன் எனப்படும் தளத்தின் தெற்காசிய பிராந்திய இயக்குனரான பியூஸ் குமார் எக்னாமிக் டைம்ஸ்க்கு அளித்துள்ள பேட்டியில், டிரம்ப்பின் வருகையால் அமெரிக்காவிற்கு வரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை குறையாது என கூறியுள்ளார். டொனால்ட் டிரம்ப் வெளிநாட்டு மாணவர்களை வரவேற்கும் வகையில் தான் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தில் பேசி இருக்கிறார் என பியூஸ் குமார் கூறுகிறார்.

அமெரிக்கா கல்லூரிகளில் பயின்று பட்டம் பெறும் வெளிநாட்டவர்களுக்கு ஆட்டோமேட்டிக் முறையில் கிரீன் கார்டு பெறுவதற்கான தகுதியை பெற சட்டம் கொண்டுவரப்படும் என என டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசினார்.
கிரீன் கார்டு என்பது வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் நிரந்தரமாக குடியிருக்க வழங்கப்படும் உரிமம் ஆகும். எனவே 2024 ஆம் ஆண்டை விட 2025 ஆம் ஆண்டில் படிப்புக்காக அமெரிக்கா வரக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கை 15 லிருந்து 20% அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என கூறுகிறார்.
இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த மாணவர்கள் பெரும்பாலும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய பிரிவுகளில் மேற்படிப்பை படிப்பதற்காக அமெரிக்காவுக்கு பயணம் செய்கின்றனர்.
டிரம்ப் தலைமையிலான அரசு தற்போதைக்கு வரிகளை குறைப்பது, தொழில் தொடங்குவதை எளிமையாக்கும் வகையில் கொள்கைகளை வகுப்பது, அமெரிக்கர்களுக்கான வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்துவது என்பன உள்ளிட்டவற்றில் தான் அதிக கவனம் செலுத்தும் என அடக்கோ நிறுவனத்தின் தலைவர் கார்த்திகேயன் கூறுகிறார்.
இதனால் அமெரிக்காவில் ஐடி, மருத்துவம் மற்றும் உற்பத்தி துறைகளில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் இது அமெரிக்காவில் சென்று படிக்க நினைக்கும் இந்தியர்களுக்கு உதவியாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.
தற்போது அமெரிக்காவில் சுமார் பத்து லட்சம் வெளிநாட்டு மாணவர்கள் பயில்கிறார்கள் அவர்களில் இரண்டு லட்சம் பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள். டிரம்ப் மீண்டும் அதிபராக தேர்வாகி இருப்பது அங்கே பயிலக்கூடிய இந்திய மாணவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தி இருப்பதாக சொல்லப்படுகிறது.
சட்ட ரீதியிலான மற்றும் மெரிட் அடிப்படையிலான குடியுரிமை வழங்குவதற்கு டிரம்ப் நிர்வாகம் முன் வரும் எனக் கூறும் நிபுணர்கள் இது அமெரிக்காவில் பயின்று வரும் இந்திய மாணவர்களுக்கு பெரிய அளவில் உதவியாக இருக்கும் என தெரிவிக்கின்றனர்.
இந்தியா அமெரிக்கா இடையிலான வர்த்தக கூறவும் சிறந்த முறையில் இருக்கிறது எனவே இந்தியர்களை பாதிக்கும் வகையிலான திட்டங்களை தற்போதைக்கு ட்ரம்ப் கையில் எடுக்க மாட்டார் என சொல்லப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications