புதிய கார், புதிய பைக் இப்போதைக்கு வாங்கிடாதீங்க.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2024 பொதுத் தேர்தலுக்கு முன் பிரதமர் மோடி அரசின் கடைசி முழுப் பட்ஜெட் அறிக்கை 2023-24ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் தான், பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.

 

இந்த ஆண்டுப் பட்ஜெட் தனிநபர் நலனுக்கு அதிகளவில் முக்கியத்துவம் அளிக்கப்படமாட்டாது என 80 சதவீதம் உறுதியான நிலையில், கேபெக்ஸ், உற்பத்தி, உள்கட்டமைப்பு மற்றும் கிராமப்புற பொருளாதாரம் ஆகியவற்றில் அதிகப்படியான கவனம் செலுத்தப்பட்டு இருக்கும் எனத் தெரிகிறது.

இந்த நிலையில் ஆட்டோமொபைல் துறை எப்படிப்பட்ட அறிவிப்புகள் இருக்கும்..? பட்ஜெட்-க்குப் பின் கார், பைக், எலக்ட்ரிக் வாகனங்களின் விலை குறையுமா..? வாங்க பார்ப்போம்.

மோடி அரசு வாங்கப்போகும் ரூ.16 லட்சம் கோடி கடன்.. பட்ஜெட்-க்கு முன்பே ரிப்போர்ட்..! மோடி அரசு வாங்கப்போகும் ரூ.16 லட்சம் கோடி கடன்.. பட்ஜெட்-க்கு முன்பே ரிப்போர்ட்..!

மத்திய பட்ஜெட்

மத்திய பட்ஜெட்

மத்திய பட்ஜெட் அறிக்கையில் இருக்கும் ஒவ்வொரு துறைகள் ஒவ்வொரு எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளன. இந்த நிலையில் ஆட்டோமொபைல் துறைக்கு எப்படிப்பட்ட அறிவிப்புகள் வரலாம்..? இத்துறை வல்லுநர்கள் ஆட்டோமொபைல் துறைக்கான தேவை எது எனப் பட்டியலிட்டு உள்ள விஷயங்கள் என்ன என்பதை இப்போது பார்ப்போம்.

மொத்த உள்நாட்டு உற்பத்தி

மொத்த உள்நாட்டு உற்பத்தி

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பையும், நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை உருவாக்குவதில் மிகப்பெரிய துறைகளில் ஒன்றாக விளங்குகிறது இந்திய ஆட்டோமொபைல் துறை. இதனால் இந்தியாவில் உற்பத்தி, ஏற்றுமதி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை மேம்படுத்த கட்டாயம் முக்கிய அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆட்டோமொபைல் துறை
 

ஆட்டோமொபைல் துறை

பெரும்பாலான ஆட்டோமொபைல் துறை ஆய்வாளர்களும், வல்லுனர்களும் இத்துறையில் அதிரடியான அறிவிப்புகள் வரும் என கருதவில்லை. ஆனாலும் சில PLI திட்ட சலுகைகள், ஜிஎஸ்டி-யில் சில நிவாரணங்கள், அதிலும் குறிப்பாக எலக்ட்ரிக் வாகனங்களுக்கான வரிச் சலுகை, மானியம் ஆகியவற்றை அறிவிக்க வாய்ப்பு உள்ளது என கணித்துள்ளார்கள். மேலும் உற்பத்திச் செயல்பாடுகளை ஊக்குவிக்க ஏதுவான சூழல் உருவாக்கப்படும் என நம்பப்படுகிறது.

எல்கட்ரிக் வாகனங்கள்

எல்கட்ரிக் வாகனங்கள்

எல்கட்ரிக் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி 5 சதவீதம் மட்டுமே இருப்பினும், லித்தியம்-அயன் பேட்டரிகள் மற்றும் பிற துணை சாதனங்கள் போன்ற EV பாகங்கள் மீதான ஜிஎஸ்டி 18-28 சதவிகிதம் ஆகும். இதனால் மூலதன பாதிப்புகள் நிறுவனங்களுக்கு அதிகமாக உள்ளது, இதைச் சீர் செய்யப் பட்ஜெட்டில் அறிவிப்புகள் வரலாம், இதன் மூலம் மறைமுகமாக எலக்ட்ரிக் வாகனங்கள் விலை குறையலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Dont buy new car or Bike before budget 2023; wait for good

Dont buy new car or Bike before budget 2023; wait for good
Story first published: Thursday, January 26, 2023, 16:17 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X