2022 ஆம் ஆண்டு முடியும் வேளையில் புத்தாண்டு அடியெடுத்து வைக்கும் அனைவரும் பல புதிய இலக்குகள் மற்றும் திட்டங்கள் உடன் நுழைய உள்ள நிலையில், பல துறைகள் பல புதிய மாற்றங்களை எதிர்கொள்ள உள்ளது.
இதனால் அனைத்துத் துறை நிறுவனங்களும் உஷராக ஒவ்வொரு முடிவுகளை எடுத்து வரும் நிலையில் மக்களுக்குப் பணத்தைச் சேமிக்கும் வாய்ப்புகள் பல உருவாகியுள்ளது.
இதில் முக்கியமாகக் கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் இருக்கும் அனைத்து நிறுவனங்களும் ஓரேபோன்ற முடிவுகளை எடுக்க உள்ளதால், சாமானிய மக்கள் பணத்தைச் சேமிக்கும் ஒரு வாய்ப்பு உருவாகியுள்ளது.
ஸ்மார்போன்
ஸ்மார்போன் வாங்க திட்டமிடும் மக்கள் அனைவரும் இந்த இந்தப் புத்தாண்டில் பெரிய தள்ளுபடிகளை எதிர்பார்க்கலாம். இதற்கு முக்கியமான காரணம் பெரும்பாலான ஸ்மார்ட்போன் பிராண்டுகள் அதிகப்படியான சரக்கு இருப்புகளை வைத்துக்கொண்டு பல மாதங்களாகச் சிக்கித் தவித்து வரும் நிலையில் இதைத் தீர்க்கும் திட்டத்துடன் இறங்கியுள்ளது.
பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்
2023 ஆம் ஆண்டு ஆரம்பம் முதல் நுழைவு நிலை மற்றும் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களுக்கு அதிகப்படியான தள்ளுபடிகள் வழங்கப்பட உள்ளன. எதிர்பார்த்ததை விட மோசமான பண்டிகை கால விற்பனைக்குப் பிறகு ஸ்மார்ட்போன் டிமாண்ட் அளவில் மிகப்பெரிய வீழ்ச்சியைக் கண்டு உள்ளது.
முன்னணி பிராண்டுகள்
இதன் மூலம் உலகம் முழுவதும் அனைத்து முன்னணி பிராண்டுகளும் 2023 ஆம் ஆண்டில் இருப்பில் உள்ள ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்ய முடிவு செய்த நிலையில் தனது அதிகாரப்பூர்வ இணையதளங்கள், ஈகாமர்ஸ், ரீடைல் கடைகளில் ஸ்மார்ட்போன்களுக்கு அதிகப்படியான தள்ளுபடி வழங்கப்படுகின்றன.
ஸ்மார்ட்போன் தயாரிப்பு
அக்டோபர் முதல் ஸ்மார்ட்போன் தயாரிப்புகள் இன்னும் முழுமையாகத் தயாரிக்கப்பட்டுச் சந்தைக்கு வராமல் தொடர்ந்து பைப்லைனில் சிக்கியிருப்பதால், இந்த ஆண்டு ஸ்மார்ட்போன் பிராண்டுகளுக்கு இது மோசமான காலாண்டாக இந்த டிசம்பர் காலாண்டு இருக்கலாம் என்று சந்தை ஆய்வாளர்கள் ஆய்வாளர் கூறுகின்றனர்.
தள்ளுபடி
அதிகச் சரக்குகள் இருப்பதால், சேனல் பார்ட்னர்கள், ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் இரண்டிலும், தற்போதுள்ள சரக்குகளை வேகமாகத் தீர்க்கும் முயற்சியில் அதிகக் கவனத்தைச் செலுத்துவதால் இந்த ஆண்டு ஆரம்பம் முதல் ப்ரீமியம் போன்கள் கூட அதிகப்படியான தள்ளுபடி உடன் விற்கப்படலாம்.
புதிய மாடல்கள்
மேலும், பட்ஜெட் பிரிவு ஸ்மார்ட்போன் அதிக இருப்பு இருப்பதால் 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் புதிய மாடல்களை வெளியிடுவதை அனைத்து முன்னணி பிராண்டுகளும் ஒத்திவைக்க வாய்ப்பு அதிகளமாக உள்ளது. குறிப்பாகச் சீன ஸ்மார்ட்போன் பிரிண்டுகள் தள்ளிப்போட அதிக வாய்ப்பு உள்ளது.
சியோமி, சாம்சங், ரியல்மீ
தற்போது இந்திய சந்தையில் சியோமி, சாம்சங், மற்றும் ரியல்மீ ஆகிய அனைத்தும் இந்தத் தள்ளுபடி விற்பனையில் முந்திக்கொள்ல அந்தந்த நிறுவன அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில், முதன்மையாக அவர்களின் பட்ஜெட் சலுகைகளில் தள்ளுபடிகள் வழங்க துவங்கியுள்ளது.
மேக்ரோ பொருளாதாரப் பிரச்சனை
இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் சந்தை மீண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கவுண்டர்பாயின்ட் ஆய்வின் படி மேக்ரோ பொருளாதாரப் பிரச்சனை குறையும் என்பதால் ஸ்மார்ட்போன் விற்பனை மேம்படும். 2022 ஆம் ஆண்டில் ஸ்மார்ட்போன் விற்பனையில் 5% வீழ்ச்சிக்குப் பிறகு 2023 ஆம் ஆண்டில் 175 மில்லியன் ஸ்மார்ட்போன்கள் சந்தைக்கு வரும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications