ஒவ்வொரு வருடமும் சம்பளம் பெறுபவர்கள், தொழில் செய்பவர்கள், ஆலோசகர்கள் என அனைத்து வரி செலுத்துபவர்களும் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய கடமை என்றால் அது ITR தாக்கல் செய்வது தான். ஆனால், வருமான வரி செலுத்துவதில் இருந்து தப்பிக்க சிலர் முயற்சி செய்கின்றனர். இது போன்ற நபர்களை வருமான வரித்துறை எளிதில் கண்டுபிடித்து விடும். ஏனெனில், வருமானவரித் துறை உங்கள் வருமானத்தைக் கண்காணிக்க பல்வேறு வழிகளைப் பயன்படுத்துகிறது. இந்தப் பதிவில் அதன் விவரங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.
ஒருவர் வருமான வரித் துறையை ஏமாற்றும் நோக்கில், தங்கள் வரி விதிப்பை மறைக்க முயற்சி செய்தால் கடும் தண்டனைக்கு உட்படலாம். ஏனெனில், வருமான வரித் துறை உங்கள் வருமானத்தைக் கண்காணிக்க 57-க்கும் மேற்பட்ட ஆதாரங்களை பயன்படுத்துகிறது. இந்த 57 வகையான உங்களுடைய வருமானங்கள் மற்றும் செலவுகள் CBDT-இன் வருடாந்திர தகவல் அறிக்கையில் உள்ளது.

வருமானவரி செலுத்துபவர்கள் அனைவருக்கும், www.incometax.gov.in என்ற இணையதளம் வழியாக வருடாந்திர தகவல் அறிக்கையை (AIS) பார்க்க முடியும். வரி விதிப்பைக் கொண்டிருக்கும் பெரும்பாலான நபர்களின் நிதி பரிவர்த்தனைகளின் விவரங்களை AIS வழங்குகிறது. பல்வேறு தகவல் ஆதாரங்களில் இருந்து பெறப்பட்ட டேட்டாக்களை அடிப்படையாகக் கொண்டே AIS உருவாக்கப்படுகிறது.
AIS-இல் சேர்க்கப்பட்டுள்ள வருமானங்கள் மற்றும் செலவுகளின் முழுமையான பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் IT துறை உங்கள் வருவாயைக் கண்காணிக்கும் என்பதை மறந்து விட வேண்டாம்.
1. சம்பளம்
2. வாடகை வருமானம்
3. டிவிடெண்ட்
4. சேமிப்பு கணக்குகளில் இருந்து பெறப்படும் வட்டி வருமானம்
5. டெபாசிட் திட்டங்களில் இருந்து பெறப்படும் வட்டி வருமானம்
6. பிற வட்டி வருமானம்
7. வருமான வரி ரீஃபண்ட்
8. ஆலை மற்றும் இயந்திரங்களுக்கான வாடகை
9. குலுக்கல் அல்லது லாட்டரியில் இருந்து கிடைக்கும் பரிசுத் தொகை
10. குதிரை ஓட்டத்தில் இருந்து கிடைக்கும் பரிசுத் தொகை
11. முதலாளியிடம் இருந்து பெறப்பட்ட PF தொகை
12. உள்கட்டமைப்பு நிதியிலிருந்து பெறப்படும் வட்டி
13. NRI-கள் மூலம் குறிப்பிட்ட நிறுவனத்திடமிருந்து பெறப்படும் வட்டி
14. பத்திரங்கள் மற்றும் அரசுப் பத்திரங்கள் மீதான வட்டி
15. NRI-கள் மூலம் குறிப்பிட்ட நிறுவனத்திடமிருந்து பெறப்படும் வருமானம்
16. ஆஃப்ஷோர் ஃபண்ட் மூலம் வரும் வருமானம்
17. வெளிநாட்டு நாணயப் பத்திரங்கள் அல்லது இந்திய நிறுவனங்களின் பங்குகளிலிருந்து வரும் வருமானம்
18. பத்திரங்களிலிருந்து வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் வருமானம்
19. பத்திரங்களிலிருந்து வரும் வருமானம்
20. இன்சூரன்ஸ் கமிஷன்
21. லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி ரசீதுகள்.
22. தேசிய சேமிப்புத் திட்டத்தின் கீழ் வைப்புத் தொகையை திரும்பப் பெறுதல்
23. லாட்டரி சீட்டு விற்பனையில் கமிஷன் பெறுதல்
24. அறக்கட்டளையின் முதலீட்டில் இருந்து வருமானம்
25. MF/UTI யூனிட்களை வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானம்
26. அரசுக்கு செலுத்த வேண்டிய வட்டி அல்லது டிவிடெண்ட் அல்லது பிற தொகைகள்
27. மூத்த குடிமக்களின் வருமானம்
28. நிலம் அல்லது கட்டிடம் விற்பனை
29. அசையாச் சொத்தை பிறருக்கு மாற்றுவதற்கான ரசீதுகள்.
30. வாகன விற்பனை
31. மியூச்சுவல் ஃபண்டின் பத்திரங்கள் மற்றும் யூனிட்களின் விற்பனை
32. டெபிட் பரிவர்த்தனைகள்
33. கடன் பரிவர்த்தனைகள்
34. வணிக வருமானம்
35. ஜிஎஸ்டி டர்ன் ஓவர்
36. ஜிஎஸ்டி பர்ச்சேஸ்
37. வணிக செலவுகள்
38. வாடகை செலவு
39. இதர கட்டணம்
40. பிற பேமெண்ட்கள்
41. கேஷ் டெபாசிட்
42. கேஷ் வித்டிராவல்
43. வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்புதல் / வெளிநாட்டு நாணயத்தை வாங்குதல்
44. வெளிநாட்டுக்கு பணம் அனுப்புதல்
45. NRI விளையாட்டு வீரர்கள் அல்லது ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன்களுக்கு பணம் செலுத்துதல்
46. வெளிநாட்டு பயணம்
47. அசையா சொத்து வாங்குதல்.
48. வாகனம் வாங்குதல்
49. டேர்ம் டெபாசிட்
50. மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களை வாங்குதல்
51. கிரெடிட்/டெபிட் கார்டு
52. அக்கவுண்ட் பேலன்ஸ்
53. வணிக அறக்கட்டளை மூலம் விநியோகிக்கப்படும் வருமானம்
54. முதலீட்டு நிதி மூலம் விநியோகிக்கப்படும் வருமானம்
55. பெறப்பட்ட நன்கொடைகள்
56. விர்ச்சுவல் டிஜிட்டல் சொத்துக்களை பிறருக்கு மாற்றுதல்
57. ஆன்லைன் கேம்ஸ்-இலிருந்து வெற்றி
FY 2023-24 அல்லது AY 2024-25க்கான உங்கள் ITR-ஐ தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31 என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications