சென்னை: வங்கிகள் அவ்வப்போது சிறப்பு FD திட்டங்களை அறிமுகப்படுத்துகின்றன. இந்த FD திட்டங்கள் அதிக வட்டி விகிதங்கள் மற்றும் குறிப்பிட்ட காலதிற்கு நிறைய சலுகைகள் போன்ற சிறப்பு அம்சங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன. FD என்றாலே பல முதலீட்டாளர்களுக்கும் பிடித்த ஒன்று தான். தற்போது சில சிறப்பு FD திட்டங்களின் காலக்கெடு முடிய இருக்கிறது. அவற்றை பற்றி விவரிக்கிறது இந்தப் பதிவு.
IDBI பேங்க், இந்தியன் பேங்க் மற்றும் பஞ்சாப் & சிந்த் பேங்க் ஆகிய மூன்று முன்னணி பேங்குகளின் சிறப்பு FD திட்டங்களில் முதலீடு செய்ய வாடிக்கையாளர்களுக்கு, இப்போது குறைவான நாட்களே உள்ளன. இந்த சிறப்பு FD திட்டங்கள் 8 சதவீதம் வரையிலான வட்டி விகிதத்தை வழங்குகின்றன. இந்த சிறப்பு FD திட்டங்களில் முதலீடு செய்ய ஜூன் 30 வரை வாடிக்கையாளர்களுக்கு கால அவகாசம் உள்ளது.

இந்த வங்கிகளின் சிறப்பு FD திட்டங்களின் கீழ் முதலீடு செய்து, நல்ல வருமானத்தைப் பெற ஆர்வமுள்ளவர்கள், ஜூன் 30 ஆம் தேதிக்குள் முதலீடு செய்ய வேண்டும். இந்த வகை சிறப்பு FD திட்டங்களின் சிறப்பம்சங்கள் என்ன என்பதைப் பார்ப்போம்.
IDBI பேங்க் உத்சவ் பிக்சட் டெபாசிட்: இந்த சிறப்பு FD திட்டத்தின் முதிர்வு காலங்கள் 300 நாட்கள், 375 நாட்கள், 444 நாட்கள். இதில் எந்த முதிர்வு காலத்தை வேண்டுமானாலும் நீங்கள் தேர்ந்தெடுத்து கொள்ளலாம். 300 நாட்கள் கொண்ட பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு, IDBI பேங்க் பொது வாடிக்கையாளர்களுக்கு 7.05 % வருடாந்திர வட்டி விகிதத்தை வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு 7.55 % வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
375 நாட்களில் முதிர்ச்சியடையும் FDகளுக்கு, IDBI பேங்க் பொது வாடிக்கையாளர்களுக்கு ஆண்டுக்கு 7.1 % வட்டி வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு, 7.6 % வட்டி வழங்கப்படுகிறது. 444 நாட்கள் முதிர்வு கொண்ட FD திட்டத்திற்கு பொது வாடிக்கையாளர்களுக்கு ஆண்டுக்கு 7.2 % வட்டி வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு 7.7 % வட்டி கிடைக்கும். இந்த சிறப்பு FD திட்டங்களில் முதலீடு செய்வதற்கான காலக்கெடு ஜூன் 30, 2024 ஆகும்.
இந்தியன் பேங்க்: இந்தியன் பேங்க் தற்போது 2 சிறப்பு FD திட்டங்களை வழங்குகிறது. அவை Ind Supreme 300 Days மற்றும் Ind Super 400 Days ஆகியவையாகும்.
300 நாட்களில் முதிர்ச்சியடையும் இந்த சிறப்பு FD-களுக்கு, இந்தியன் பேங்க் 7.05 % வட்டி வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு 7.55 % வட்டி வழங்கப்படுகிறது. 400 நாட்களில் முதிர்ச்சியடையும் FD-களுக்கு பொது வாடிக்கையாளர்களுக்கு 7.25 % வட்டி வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு 7.75 % வட்டி கிடைக்கும்.
பஞ்சாப் & சிந்த் பேங்க்: பஞ்சாப் & சிந்து பேங்க் சிறப்பு FD-களுக்கு முதிர்வு காலமாக 222 நாட்கள், 333 நாட்கள் மற்றும் 444 நாட்களை வழங்குகிறது. 222 நாட்களில் முதிர்ச்சியடையும் FDகளுக்கு ஆண்டுக்கு 7.05 % வட்டி வழங்குகிறது. 333 நாட்களில் முதிர்ச்சியடையும் FDகளுக்கு ஆண்டுக்கு 7.10 % வட்டி கிடைக்கிறது. 444 நாட்களில் முதிர்ச்சியடையும் FD-களுக்கு ஆண்டுக்கு 7.25 % வட்டி விகிதம் கிடைக்கும். பஞ்சாப் & சிந்து வங்கியின் இந்த சிறப்பு FD திட்டங்களில் முதலீடு செய்ய முதலீட்டாளர்களுக்கு ஜூன் 30 வரை அவகாசம் உள்ளது.


Click it and Unblock the Notifications