சென்னை: இந்தியாவில் இருப்பவர்கள், அவர்கள் பெரும் வருமானத்திற்கு ஏற்ப வரி செலுத்த வேண்டும். இந்நிலையில் வருமான வரித் துறை, தடையற்ற ரீபண்ட் தொகை பெறுவதற்கு உங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை, இ-ஃபைலிங் தளத்தில் முன்கூட்டியே சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. நீங்கள் தாக்கல் செய்த வருமான வரி படிவங்களை வருமான வரித் துறை பரிசீலித்து, பின்னர் ரீபண்ட் தொகை வழங்கப்படும். ரீபண்ட் பெற, உங்கள் வங்கிக் கணக்கு சரிபார்க்கப்பட்டிருப்பது அவசியம்.
வருமான வரித்துறையின் ரீபண்ட் கிடைக்கவில்லை என்றால், அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். இது தொடர்பான காரணங்களை பற்றி ஆராய்ந்து, கண்டறிந்து சரியான நடவடிக்கை எடுப்பது மிக முக்கியம்.

வரி செலுத்துபவர் எப்போது வங்கிக் கணக்கை சரிபார்க்க வேண்டும்?: வங்கிக் கிளை (Bank Branch) மாற்றம், IFSC கோட் மாற்றம் போன்ற காரணங்களால் உங்கள் வங்கிக் கணக்கு தகவல்கள் அப்டேட் செய்யப்பட்டிருந்தால், ஏற்கனவே சரிபார்க்கப்பட்ட வங்கிக் கணக்கையும் இ-ஃபைலிங் தளத்திற்கு சென்று மீண்டும் சரிபார்க்க வேண்டும்.
இதுகுறித்து தனது ஆதிகாரப்பூர்வ X தளத்தில், வருமான வரித் துறை "ரீபண்ட் பெற, சரிபார்க்கப்பட்ட வங்கிக் கணக்கு அவசியம். வங்கிக் கிளை, IFSC குறியீடு, வங்கி இணைப்பு போன்ற காரணங்களால் வங்கிக் கணக்கு தகவல்கள் புதுப்பிக்கப்பட்ட பிறகு, ஏற்கனவே சரிபார்க்கப்பட்ட வங்கிக் கணக்கையும் மீண்டும் சரிபார்க்க வேண்டும்" என்று கூறியுள்ளது.
ஏற்கனவே உள்ள வங்கிக் கணக்கை எவ்வாறு சரிபார்ப்பது?:
ஸ்டெப் 1: வருமான வரித்துறையின் https://incometax.gov.in/iec/foportal/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
ஸ்டெப் 2: உள்நுழைந்து 'Profile' என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 3: 'Bank Account' என்பதைத் தேர்ந்தெடுத்து 'Revalidate' என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 4: வங்கி கணக்கு எண், IFSC குறியீடு, கணக்கு வகை போன்ற வங்கிக் கணக்கு தகவல்களை அப்டேட் செய்யவும்.
ஸ்டெப் 5: 'Validate' என்பதைக் கிளிக் செய்யவும்.
புதிய வங்கிக் கணக்கை எப்படி இணைப்பது?
ஸ்டெப் 1: வருமான வரித்துறையின் https://incometax.gov.in/iec/foportal/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
ஸ்டெப் 2: உள்நுழைந்து 'Profile' என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 3: 'My Bank Account' என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 4: வங்கிக் கணக்கை சேர்க்கவும்.
ஸ்டெப் 5: 'Validate' என்பதைக் கிளிக் செய்யவும்.
ரீபண்ட் பெறுவதில் மேலும் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால், நீங்கள் இது சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு நிபுணர்களின் ஆலோசனையைப் பெறலாம்.


Click it and Unblock the Notifications