சென்னை: நீண்ட தூர ரயில் பயணங்களின் போது, குறிப்பாக இரவில் பயணம் செய்யும் போது, சில சமயங்களில் நம்முடைய ஸ்டேஷனில் இறங்குவதற்கு கடினமாக இருக்கும். அதுவும் இரவு நேரங்களில் தனியாக பயணம் செய்பவராக இருந்தால், தூக்கத்தில் இருந்து கண் விழித்து குறிப்பிட்ட ஸ்டேஷனில் இறங்குவதற்கு சிரமப்படுவார்கள். இந்த பிரச்சனையை தீர்க்கும் வகையில், பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே துறை சிறந்த சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுவே "டெஸ்டினேஷன் அலர்ட்" (Destination Alert) எனப்படும் சேவை.
பயணிகள் வசதியாக பயணம் செய்ய வேண்டும் என்ற காரணத்தினால், இந்திய ரயில்வே பல மாற்றங்களை செய்து வருகிறது. அந்த வகையில் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் பிடித்தமான சீட்டை தேர்வு செய்வது, உணவு ஆர்டர் செய்வது போன்ற சேவைகளை வழங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக "Wake Up Call" என்ற சேவையையும் தற்போது வழங்குகிறது.

இரவு நேரங்களில் குறிப்பாக 11 மணி முதல் பயணம் செய்பவர்களுக்கு, இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும். இதன்படி பயணிகள் அவர்களுடைய ஸ்டேஷனுக்கு வருவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பு, உங்களுக்கு ஒரு அழைப்பு அல்லது SMS வரும்.
டெஸ்டினேஷன் அலர்ட் சேவையை எவ்வாறு பெறுவது?
Interactive Voice Response (IVR): டெஸ்டினேஷன் அலர்ட் சேவையை பெறுவதற்கு உங்கள் மொபைல் போனிலிருந்து 139 என்ற ஹெல்ப்லைன் நம்பருக்கு அழைப்பு விடுங்கள். அதன்பின் உங்களுடைய மொழியைத் தேர்வு செய்யுங்கள். இப்போது IVR மெனுவில், டெஸ்டினேஷன் அலர்ட் ஆப்ஷனுக்காக "7" என்ற நம்பரைத் தேர்ந்தெடுங்கள். அதன் பிறகு "2" என்ற நம்பரை அழுத்தவும். உங்களுடைய டிக்கெட்டில் உள்ள PNR நம்பரை என்டர் செய்து "1" -ஐ அழுத்தவும்.
இவ்வாறு செய்தால், உங்கள் மொபைல் எண்ணிற்கு டெஸ்டினேஷன் அலர்ட் அமைக்கப்படும். மேலும் உறுதிப்படுத்தும் வகையில் உங்களுக்கு ஒரு SMS அனுப்பப்படும்.
SMS: உங்கள் டிக்கெட்டில் உள்ள 10 இலக்க PNR நம்பரை "ALERT" என்ற வார்த்தையுடன் சேர்த்து 139 என்ற எண்ணிற்கு SMS அனுப்புங்கள். எடுத்துக்காட்டுக்கு, உங்கள் PNR எண் 1234566890 என்றால், "ALERT 1234566890" என்று 139க்கு SMS அனுப்புங்கள்.
இனி நீங்கள் உங்கள் ஸ்டேஷனை விட்டு வேறு ஒரு ஸ்டேஷனில் இறங்காமல் இருக்க முடியும். அதே போல, இந்த அழைப்பு நீங்கள் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது எந்த நம்பரை பயன்படுத்தினீர்களோ.. அந்த நம்பருக்கு தான் வரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த பாதுகாப்பு வசதியை பயன்படுத்தி, நீங்கள் தூங்கினால் மற்ற ஸ்டேஷன்களில் சென்று இறங்கி விடுவோம் என்ற கவலை உங்களுக்கு இல்லை. உங்களுக்கு அழைப்பு வந்தவுடன் நீங்கள் எழுந்தால் போதுமானது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications