வியர்வைக்கு பை பை.. சொகுசா பார்க்க 8 வேலை வாய்ப்புகள்.. இதெல்லாம் ஒரு வேலையா? ஆச்சரியமா இருக்கே!

சென்னை: பலருக்கும் கடினமாக உழைத்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பதில்லை. சிலர் ரிலாக்ஸாகவும், குறைவான மன அழுத்தத்துடனும் நல்ல சம்பளம் பெற விரும்புவார்கள். அவர்களுக்காகவே இந்தக் கட்டுரை! ஆம், சற்று சோம்பேறித்தனமாக இருந்தாலும், நல்ல சம்பளம் தரும் வேலைகள் சில உள்ளன. அவற்றைப் பற்றி விவரிக்கிறது இந்தப் பதிவு.

செய்யும் வேலை எளிதாக இருக்க வேண்டும். ஆனால் கை நிறைய சம்பளம் பெற வேண்டும் என்று விரும்பினால், கீழ்காணும் வேலையில் சேர்வது குறித்து நீங்கள் யோசிக்கலாம்.

 வியர்வைக்கு பை பை.. சொகுசா பார்க்க 8 வேலை வாய்ப்புகள்.. இதெல்லாம் ஒரு வேலையா? ஆச்சரியமா இருக்கே!

நீதிமன்ற நிருபர் (Court Reporter): Multitasking என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்வது பிடிக்காதவர்களுக்கு, இந்த வேலை ஏற்றது. டைப் அடிப்பதுதான் இவர்களின் முக்கிய வேலை. நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணைகளை வேகமாகக் கேட்டு குறிப்பெடுத்து, பின்னர் அவற்றை அறிக்கையாக தட்டச்சு செய்வதே இவர்களது பணி. இதற்கு உங்களுக்கு சரளமாக டைப் அடிக்கத் தெரிந்தால் போதுமானது.

ஷாப் ஆலோசகர் (Shop Consultant): வாடிக்கையாளர்களைக் கவர வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல், அமைதியாகவும், கவனமாகவும் இருந்து வாடிக்கையாளர்களுக்கு உதவி செய்யும் பணி தான் இது. கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் புரிந்து கொண்டு, கேட்கும் பொருட்களை அவர்களுக்குக் காண்பிப்பதே இவர்களது வேலை. இதற்கு பெரிதாக யோசித்து வேலை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. எந்தெந்த பொருள் எங்கெங்கு உள்ளது என்று தெரிந்தால் போதுமானது.

புகைப்படக் கலைஞர் (Photographer): புகைப்பட கலைஞராக இருப்பது ஒரு hobby மட்டுமல்ல, இதனை நீங்கள் தொழிலாகவும் செய்யலாம். கமர்சியல் போட்டோகிராபர்கள், டிஜிட்டல் போட்டோ எடிட்டர்கள், வீடியோகிராபர்கள் மற்றும் புகைப்பட கல்வியையும், நீங்கள் பயிற்றுவிக்கலாம். இது போன்ற தொழில்களைச் செய்யும்போது முக்கியமான பண்டிகைகள் மற்றும் போட்டோ சூட்களின் போது மட்டும் தான் உங்களுக்கு வேலை இருக்கும். அதில் நீங்கள் நல்ல லாபம் ஈட்டலாம். பிற நாட்களில் எந்த வித வேலையும் இருக்காது. எனவே இது ரிலாக்ஸான ஜாப்பாக பலருக்கும் இருக்கும்

கணக்கு வழக்கு நிர்வாகி (Bookkeeper): நிறுவனத்தின் கணக்கு பதிவுகளைப் பராமரிப்பது மற்றும் விற்பனை பில், ஊதியச் செலவுகள் போன்ற அன்றாட நிதி சார்ந்த பணிகளை கையாள்வதே இவர்களது வேலை. இதற்கு பைனான்ஸ் சார்ந்த பட்டப்படிப்பு முடிக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

ஆன்லைன் டியூஷன் (Tutor): நல்ல சம்பளம் தரும் எளிமையான வேலைகளில் ஆன்லைன் டியூஷனும் ஒன்று. உங்கள் வீட்டில் இருந்துகொண்டே, யாருக்கு வேண்டுமானாலும் பாடம் சொல்லி பணம் பெறலாம்.

உணவு விமர்சகர் (Food Critic): நீங்கள் சாப்பிடுவதில் ஆர்வமாக இருக்கிறீர்கள் என்றால் ஃபுட் ரிவ்யூ செய்து பணம் பெறலாம். இதற்கு படித்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தற்போது இன்ஸ்டாகிராமில் பல பேர் ஃபுட் ரிவ்யூ செய்து பணம் சம்பாதிக்கின்றனர். அதில் குறிப்பாக "இர்பான்ஸ் ரிவ்யூ" என்ற youtube சேனல் நடத்தி வரும் இர்ஃபான் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. இவர் மில்லியன் கணக்கில் சப்ஸ்கிரைபர்களை வைத்திருக்கிறார். இதுபோல பலதரபட்ட உணவுகளை ருசித்து சாப்பிடும் பழக்கம் இருந்தால், நீங்களும் ஃபுட் ரிவ்யூவராகலாம்.

தங்குமிடம் மற்றும் வசதிகள் சோதனை செய்பவர் (Bed & Amenities Tester): இது போன்ற ஒரு தொழில் உள்ளதா.. என்று நம்புவதற்கு கடினமாக இருக்கலாம். ஆம், பெரிய பெரிய சொகுசு ஹோட்டல்களில் இலவசமாக தங்கி படுக்கையின் மேன்மை, தூய்மை போன்ற வசதிகளை பரிசோதனை செய்து கருத்து சொல்வதற்கு உங்களுக்கு பணம் கிடைக்கும்.

பர்னிச்சர் சோதனை செய்பவர் (Furniture Tester): பர்னிச்சர்களை சோதனை செய்து கருத்து சொல்பவர்களுக்கும் பணம் கிடைக்கும். உதாரணமாக ஒரு நிறுவனம் புதியதாக நாற்காலி மற்றும் சோஃபா ஆகியவை உற்பத்தி செய்து சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது என்றால், இது போன்ற பிராண்டுகளின் சோஃபாவையும், நாற்காலியையும் மதிப்பாய்வு செய்து அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன என்பதை கூறுவதற்கு, உங்களுக்கு குறிப்பிட்ட தொகை வழங்கப்படும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+