கூகுள், அமேசானை சேர்ந்த முன்னாள் ஹெச்ஆர் அதிகாரிகள், வேலைதேடுபவர்கள் லிங்க்டின் தளத்தில் ஓபன் டு ஒர்க் பேட்ஜை பயன்படுத்த வேண்டாம் என எச்சரித்துள்ளனர்.
வேலைக்கு ஆள் எடுக்கும் நிறுவனங்கள் தகுதி வாய்ந்த நபர்களை தேர்வு செய்வதற்கு வசதியாக இந்த ஓபன் டு ஒர்க் பேட்ஜை லிங்க்டின் தளம் அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் வேலைதேடுபவர்களும் வேறு நல்ல வேலைவாய்ப்புகளையும் அதிக சம்பளத்தையும் பெறுவதற்கு உதவும் எனக் கருதப்பட்டது.

இந்த பேட்ஜ்தான் மிகப் பெரிய ரெட் ஃபிளாக் என்று கூகுள் முன்னாள் ஆள் எடுக்கும் அதிகாரி நோலன் சர்ச் கூறியுள்ளார். அவர் இப்போது சாலரி டேட்டா கம்பெனி ஃபேர்கேம்ப்பில் (FairComp) சிஇஓவாக உள்ளார்.
திறமையான நபர்கள் வேலை தேடுவதில்லை என்று ஆட்சேர்ப்பு நிறுவனங்கள் கருதுகின்றன. அப்படிப்பட்ட நபர்கள் தாங்கள் வேலை தேடுகிறோம் என்பதை விளம்பரப்படுத்த மாட்டார்கள் என்பதை ஆட்சேர்ப்பு செய்பவர்கள் நினைக்கின்றனர் என்று நோலன் சர்ச் கூறுகிறார்.
கூகுள் நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் வேலைபார்த்த நோலன் சர்ச், லிங்க்டின் தளத்தில் ஓபன் டு ஒர்க் பேட்ஜை பதிவிட்டால் அந்த நபர் எப்படிப்பட்ட வேலையிலும் சேரத் தயார் என்ற அர்த்தத்தை உணர்த்தும் என்று எச்சரிக்கிறார். அவர் வேலையில்லாமல் தவிப்பதாக ஆள் எடுக்கும் மேனேஜர் கருதிவிடுவார்.
ஆள் எடுப்பு என்பது டேட்டிங் போல. நீங்கள் தனித்துவமானவர் அதனால் சீக்கிரம் மசியாதவர் என்று ஆள்எடுப்பவரை உணர்த்த வேண்டும். இந்த பேட்ஜ் ஒரு மோசமான அம்சமாகும் என்று சர்ச் கூறுகிறார். இதே கருத்தை பிரதிபலித்து அமேசான் முன்னாள் ரெக்ரூட்டரும் கேரியர் கோச்சுமான லிண்டே மஸ்டெய்ன் கூறுகையில் வேலை எடுப்பு என்று வந்துவிட்டால் பவர் டைனமிக் தான் பலன் தரும்
ஆட்எடுப்பவர்களுக்கு நீங்கள் தேவை.
லிங்க்டினில் ஓபன் டு ஒர்க் பேட்ஜை பதிவிட்டிருந்தால் என்னிடம் இருந்து நீ எதையோ எதிர்பார்க்கிறாய். எனவே எனக்குத்தான் பேரம் பேசும் பவர் இருக்கிறது என்று நினைத்துக் கொள்வார். இந்த பேட்ஜ் வாய்ப்பை கெடுத்துதான் விடும் என்கிறார்.
சோமாட்டோ நிறுவனரும் சிஇஓவுமான தீபிந்தர் கோயல் இதே கருத்தை வலியுறுத்தி கடந்த நவம்பரில் ஒரு பாட்காஸ்ட் வெளியிட்டிருந்தார். எங்களது நிறுவனம் வேலைதேடுபவர்களை தேர்வு செய்வதில்லை. காரணம் அவர்களுக்கு வேலை இல்லையென்றதாலேயே தேர்வு செய்ய வேண்டும் என்பதில்லை நாங்கள் தேர்வு செய்யும் பணியாளர்கள் வேறு மாதிரியானவர்கள்.
நாங்கள் வேலை தேடுபவர்களை எடுப்பதில்லை. இவர்கள் வேலையைத் தேடமாட்டார்கள். திறமையானவர்களை நாங்கள் வேலைக்கு எடுக்கிறோம் என்றார். சோமாட்டோவும் அதன் போட்டி நிறுவனமான ஸ்விக்கியும் அதிகளவில் ஆட்களை வேலைக்கு எடுக்கின்றனர்.
Story written by: I.Jayachandran


Click it and Unblock the Notifications