ஈரான் இன்று இரவுக்குள் ஹார்முஸ் ஜலசந்தியை திறக்கவில்லை என்றால் நரகத்திற்கு செல்லும், ஒரே நாள் இரவிலேயே அந்த நாட்டையே அழித்து விடுவோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்து வருகிறார். ஆனால் ஈரான் தரப்பு இந்த மிரட்டலை சீரியஸாக எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை, பதிலுக்கு அவர்கள் டிரம்பை நக்கல் செய்த வண்ணம் இருக்கின்றனர்.
இந்த சூழலில் அமெரிக்காவில் டூம்ஸ் டே விமானம் பறந்தது போர் பதற்றத்தை மேலும் அதிகரிக்கச் செய்திருக்கிறது. திங்கட்கிழமை அன்று அமெரிக்க அதிபர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிப்பதற்கு சில மணிகளுக்கு முன்னர் நபரஸ்கா விமானப்படை தளத்தின் வான்வழி பகுதியில் dooms day விமானம் வட்டம் அடித்து இருக்கிறது. இந்த விமானம் அணு ஆயுதப் போர் போன்ற சவாலான சூழல்களில் நாட்டின் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அதிபர் உள்ளிட்டோரை பாதுகாக்கவும் தொடர்ந்து அமெரிக்க அரசாங்கம் செயல்படுவதை உறுதி செய்வதற்கும் வானில் பறக்க செய்யப்படும்.

Boeing E-4B Nightwatch என்ற இந்த விமானம் பறக்கும் பெண்டகன் என அழைக்கப்படுகிறது. அமெரிக்கர்கள் இதனை டூம்ஸ் டே விமானம் என்று அழைக்கிறார்கள். இந்த விமானம் வெளியே வருகிறது என்றால் அடுத்ததாக ஒரு மிகப்பெரிய தாக்குதல் நடக்கப் போகிறது அல்லது ராணுவ நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பது மக்களின் கணிப்பு. அந்த வகையில் அமெரிக்க நேரப்படி திங்கட்கிழமை அன்று காலை 10. 17 மணியளவில் ஆஃப் அட் விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்டு இருக்கிறது ஆறு நிமிடங்கள் வானில் வட்டம் அடித்த இந்த விமானம் பின்னர் மீண்டும் படைத்தளத்திற்கு திரும்பி இருக்கிறது.
அமெரிக்க விமானப்படையால் இயக்கப்படக்கூடிய இந்த விமானத்தில் 111 பேர் வரை பயணம் செய்யக் கூடிய வகையில் இருக்கிறது. அதாவது ஒரு அரசாங்கத்தையே இந்த விமானத்திலிருந்து நடத்தலாம் எனப்படும் அளவுக்கு கான்பிரன்ஸ் அறை, கம்யூனிகேஷன் அறை உள்ளிட்டவை அனைத்தும் இடம்பெற்று இருக்கின்றன. ஒரு முறை எரிபொருள் நிரப்பி விட்டால் 12 மணி நேரம் செயல்படக்கூடியது. வானிலேயே இதற்கு எரிபொருளை நிரப்ப முடியும் என்பது இதன் தனிச்சிறப்பு.

ஒரு சவாலான சூழல் ஏற்படுகிறது எனும்போது அமெரிக்க அதிபர் மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இந்த விமானத்தில் பயணம் செய்து தொடர்ந்து அரசாங்கம் இயங்குவதை உறுதிப்படுத்துவார்கள். கடந்த ஆண்டு கூட ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் திடீரென தாக்குதல் நடத்தின. அப்போது கூட டூம்ஸ் டே விமானம் அமெரிக்க வானில் வட்டமிட்டது. தற்போது ஈரான் மீது அமெரிக்கா போர் நடத்தி வரக்கூடிய சூழலில் மீண்டும் ஒருமுறை டூம்ஸ் டே விமானம் பறந்து இருக்கிறது. அணு ஆயுத தாக்குதல்கள் போன்ற அனைத்திலிருந்தும் தற்காத்துக் கொள்ளக்கூடிய வகையில் இது வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
இதற்கிடையே டிரம்ப் அறிவித்த காலகெடு நெருங்கி வருவதால் உலகம் முழுவதும் ஒரு பதற்றமான சூழல் ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் ஈரான் தரப்பு இந்த மிரட்டலை தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக ஈரான் நாட்டு விளையாட்டு மற்றும் இளைஞர்கள் நலத்துறை அமைச்சகம் ஈரான் இளைஞர்கள் நாட்டின் முக்கியமான மின் கட்டமைப்புகளை சுற்றி மனித சங்கலியாக நிற்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறது. அதாவது நாட்டின் சொத்துக்களை பாதுகாக்க மக்கள் ஒன்றிணை வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறது.
இப்படி மனிதர்களை கேடயமாக பயன்படுத்தி அமெரிக்காவுக்கு செக் வைக்க ஈரான் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. முன்னதாக தி யுகே டைம்ஸ் என்ற நாளிதழ், ஈரான் உச்சபட்ச தலைவராக நியமனம் செய்யப்பட்டு கமேனியின் மகன் மொஜ்தபா கமேனி சுயநினைவின்றி இருப்பதாகவும் அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் செய்தி வெளியிட்டு இருக்கிறது.


Click it and Unblock the Notifications