கடனைத் திருப்பிச் செலுத்தவில்லையா? அதிகாரிகள் உங்களை தவறாக நடத்துகின்றனரா? உடனே இதை செய்யுங்க!

கையில் பணம் இல்லாமல் சிரமப்பட்டு கொண்டிருந்தால் பலரும் கடன் பெறுவது இயல்புதான். சிலர் வங்கிகளில் கடன் பெறுகின்றனர். சிலர் தங்களிடம் உள்ள நகைகளை அடமானம் வைத்து கடன் பெறுகின்றனர். கடன் பெற்று விட்டு அதைக் கட்ட தவறினால் அதிகாரிகள் உங்கள் வீட்டுக்கோ அல்லது அலுவலகத்துக்கோ வந்து கடனை வசூல் செய்யலாம். ஆனால் இந்தியாவில் இதற்கும் சில சட்ட திட்டங்கள் உள்ளது.

ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா இதற்கான விரிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் கடன் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இந்த வழிகாட்டுதல்கள் உதவுகின்றன.

கடனைத் திருப்பிச் செலுத்தவில்லையா? அதிகாரிகள் உங்களை தவறாக நடத்துகின்றனரா? உடனே இதை செய்யுங்க!

RBI-யின் கடன் மீட்பு வழிகாட்டுதல்கள் என்னென்ன?: ரிசர்வ் பேங்க் நியாயமான கடன் மீட்பு நடைமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி தான் கடனை வசூலிக்க வரும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடனை வசூலிக்க அனுமதிக்கப்பட்ட நேரம்: கடனை மீட்க வரும் அதிகாரிகள் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே கடன் வாங்குபவர்களை தொடர்பு கொள்ளவோ அல்லது சந்திக்கவோ வரவேண்டும். ஒருவேளை இந்த நேரத்திற்கு மாறாக கடன் வழங்கியவர் சந்திப்பை மேற்கொண்டால், அதற்கு கடன் பெற்றவர் ஒப்புதல் வழங்க வேண்டும். அப்படி இல்லை என்றால் இதுவும் துன்புறுத்தலாக கருதப்படும்.

மரியாதையான நடத்தை: கடனை வசூல் செய்ய வரும் அதிகாரிகள் நாகரிகமாக நடந்து கொள்ள வேண்டும். மிரட்டுவது அல்லது தகாத வார்த்தைகளைக் கூறி பணத்தை கேட்பதோ முற்றிலுமாக சட்டத்திற்கு மாறானது. மேலும் பலவந்தமாக அல்லது கட்டாயப்படுத்தி எந்தவித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது.

பொதுவில் அவமானப்படுத்தக் கூடாது: கடனை வசூலிக்க வரும்போது கடன் பெற்றவர் அலுவலகத்தில் இருந்தாலும் சரி, வீட்டில் இருந்தாலும் சரி, அக்கம் பக்கத்தினர் அல்லது அலுவலகத்தில் பணி புரியும் நபர்களுக்கு தெரியாமல் தான் கடனை வசூலிக்க வேண்டும். ஒருபோதும் கடன் விவரங்களை.. கடன் பெற்றவரை தவிர வெளியாட்களுக்கு தெரிவிக்கவே கூடாது.

அடையாளம் கட்டாயம்: தற்போது மோசடி சம்பவங்கள் அதிகமாக நடப்பதால், கடனை வசூல் செய்ய வரும்போது தங்களுடைய அடையாளத்தை கடன் பெற்றவருக்கு காண்பிக்க வேண்டும். ஏனெனில் அவர் உண்மையாகவே கடன் பெற்ற நிதி நிறுவனத்தில் பணிபுரிகிறாரா? என்பதற்கான அடையாளமாக இது எடுத்துக் கொள்ளப்படும்.

பணியிடத்திற்கு வந்து கடனை வசூல் செய்யலாமா?: வேறு வழிகளில் உங்களைத் தொடர்பு கொள்ள முடியாமல் இருந்தால் மட்டுமே கடனை மீட்க வருபவர்கள் உங்கள் அலுவலகத்திற்கு வரலாம். அப்படியே வந்தாலும் உங்களிடம் மரியாதையான நடத்தை விதிகளை பின்பற்றியாக வேண்டும். பணியிடத்திற்கே வந்தாலும் கடன் வசூலிப்பவரின் நடைமுறை கண்ணியமானதாக இருக்க வேண்டும். அங்கு வந்து உங்களை அவமானப்படுத்தினாலோ.. அல்லது உங்கள் நற்பெயருக்கு களங்கம் விளைவித்தாலோ.. நீங்கள் அவர்கள் மேல் புகார் அளிக்கலாம். அந்த புகாரையும் அதிகாரிகள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், ரிசர்வ் வங்கி குறை தீர்ப்பு ஆணையத்தில் முறையிடலாம்.

கடன் வாங்கியவர்களுக்கு சட்ட பாதுகாப்புகள் என்னென்ன?: RBI வகுத்துள்ள சட்டங்களின் கீழ் கடன் வாங்கியவர்களுக்கும் சில உரிமைகள் உள்ளன. நீங்கள் தவணையைச் செலுத்த தவறினாலோ அல்லது கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறினாலோ உங்களை மிரட்டவோ அல்லது அச்சுறுத்தவோ கூடாது.

உங்களிடம் கடன் வசூலிக்க வருபவர்கள் தவறாக நடந்து கொண்டால், நீங்கள் வங்கிக்கு புகார் அளிப்பதுடன் ரிசர்வ் வங்கி குறைதீர்ப்பாளர் அல்லது காவல் நிலையத்திலும் புகார் அளிக்கலாம். இதுவரையில் உச்ச நீதிமன்றம் மற்றும் பல உயர் நீதிமன்றங்களின் தொடரப்பட்ட வழக்குகளில் துன்புறுத்தி கடன் வசூலிப்பவர்களுக்கு எதிராகத்தான் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. கடன் வாங்கியவர்களின் உரிமைகளுக்கு ஆதரவாக தீர்ப்புகள் வந்துள்ளன.

உங்களை துன்புறுத்தி கடன் கேட்டால் என்ன செய்வது?: உங்களிடம் வந்து மிரட்டி பணம் கேட்டாலோ அல்லது உங்களை கொச்சைப்படுத்தி பேசினாலோ கடன் கேட்பவரின் அழைப்புகளை பதிவு செய்யலாம். அவர்களுடைய மெசேஜ்களை சேமித்து வைக்கலாம். வருகை பதிவேட்டையும் பராமரிக்கலாம்.

அதன் பிறகு நீங்கள் கடன் பெற்ற வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களிடம் புகார் அளிக்கலாம். 30 நாட்களுக்குள் அதற்கு தீர்வு இல்லாவிட்டால் ரிசர்வ் வங்கி குறைதீர்ப்பாளரை அணுகி புகார் அளிக்கலாம். உங்களை தாக்கினாலோ அல்லது மிரட்டல் விடுத்தாலோ தனிப்பட்ட வாழ்க்கையில் அத்துமீறி நடந்தாலோ காவல் நிலையத்திலும் புகார் அளிக்கலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+