இந்தியாவில் வருமான வரி செலுத்துபவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து எக்ஸ் தளத்தில் வெளியான ஒரு பதிவு பெரும் விவாதத்தை தூண்டியுள்ளது. நவீன் கொப்பரம் என்ற X தள பயணர் ஒருவர் தன் வீட்டிற்கு அருகில் உள்ள தோசை வியாபாரி ஒரு நாளைக்கு ரூ.20,000 என்ற வீதத்தில் மாதம் ரூ.6 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுவதாகவும், செலவுகளை நீக்கிய பின்னர் ரூ.3 முதல் ரூ.3.5 லட்சம் ரூபாய் வரை லாபம் ஈட்டுவதாகவும், இதற்காக இவர் எந்த வித வரியும் செலுத்தவில்லை என்றும் தனது X பதிவில் எழுதியுள்ளார். இவருடைய பதிவு விரைவில் வரி தொடர்பான பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
நவீனின் இந்தப் பதிவு விரைவில் பிரபலமானது. இந்தியாவில் வருவாய் ஏற்றத் தாழ்வுகள் மற்றும் வரி கடமைகள் ஒவ்வொருவருக்கும் மாறுபடுவதை இவருடைய போஸ்ட் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

வருமானம் பெறுவதில் இருக்கும் வேறுபாடுகள் மற்றும் வரிக்கட்டும் பொறுப்புகளில் இருக்கும் வேறுபாடுகள் குறித்த விவாதத்தை தூண்டியது. சம்பளம் வாங்கும் ஊழியர்கள் 10% வரை வரி செலுத்துகின்றனர். ஆனால் தனித்து தொழில் செய்பவர்கள் எந்தவித வரியும் செலுத்துவதில்லை. இது குறித்து பலரும் தங்கள் கருத்துக்களை கமெண்ட் செக்ஷனில் தெரிவித்து வருகின்றனர்.
நவீன் தனது X பதிவில் "எனது வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு தெருவோர தோசை விற்பனையாளர் ஒரு நாளைக்கு ரூ.20,000 சம்பாதிக்கிறார். மாதத்திற்கு ரூ.6 லட்சம் வரை வருமானம் பெறுகிறார். அனைத்து செலவுகளையும் கழித்து 1 மாதத்திற்கு ரூ.3 முதல் ரூ3.5 லட்சம் வரை வருமானம் பெறுகிறார். ஒரு ரூபாய் கூட அவர் வருமான வரி செலுத்தவில்லை", என்று பதிவிட்டிருந்தார்.

அதோடு நவீன் கொப்பாராம் மாதத்திற்கு ரூ.60,000 சம்பளம் பெறுபவர் தனது சம்பாத்தியத்தில் 10% வரை செலுத்துகிறார் என்றும், தெருவோர வியாபாரிகள் வரி செலுத்தாமல் இருப்பதையும் ஒப்பிட்டு கூறியிருந்தார்.
ஒரு பயனர் நகர்ப்புறங்களில் உள்ள டாக்டர்கள், லாயர்கள், தேநீர் கடை உரிமையாளர்கள், வியாபாரிகள் ஆண்டுதோறும் வெளிநாடுகளுக்கு சென்று தங்கள் வீடுகளை புதுப்பித்துக் கொண்டு புதிய வாகனங்களை வாங்குகின்றனர். ஆனால் இவர்கள் வரி செலுத்துவதே இல்லை. இது எப்படி? ஏன்? என்று கேள்வியை முன் வைத்தார்.

மற்றொரு நபர் இதுபோன்ற தெரு வியாபாரிகளுக்கு காப்பீடு கிடையாது. கார். வீடு. பைக் கடன்கள் பெறுவது இவர்களுக்கு கடினம். அதேபோல PF கிடையாது. உறுதியான வருமானமும் இல்லை. இவர்கள் ரூ.60,000 சம்பாதிக்கும் சாஃப்ட்வேர் பொறியாளரை விட அதிக ஜிஎஸ்டி செலுத்துகின்றனர். எனவே ஆங்கிலம் பேசும் ட்விட்டர் பயனர்கள் அவர்கள் வருமான வரி செலுத்துவதால் தான் நாடு இயங்குகிறது என்று நினைக்கக் கூடாது என்று பதிவிட்டு இருந்தார்.


Click it and Unblock the Notifications